Saturday, December 31, 2016

"விமரிசனம் அல்ல "




"கண்டதை 

சொல்லுகிறேன"

படத்தை முன் நிறுத்தி 




2014ம் ஆண்டு டிசம்பர்மாதம் தணிக்கை ஆகி திரையிட தயாராக இருந்த படம் "கண்டதை சொல்லுகிறேன் " என்பதாகும் .இதில் தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த கருணா,  ராமு ஆகியோர்  நடித்துள்ளனர் .

"இந்த படத்திற்குதுவக்கத்தில் "பறை " என்றுதான்  பெயர்   வைத்திருந்தோம்.    அதனை  "கண்டதை சொல்கிறேன் " என்று மாற்றினோம் .பறை என்பது சுத்தமான தமிழ் வார்த்தை.  இந்த வார்த்தையை மலையாள த்தில் பயன்  படுத்துகிறார்கள்   ."எந்தா பறைஞ்சு சேட்டன் ?"என்பார்கள்." என்கிறார் இந்தக  படத்தின் இயக்குனர்  லெனின் .

 "பறை "  பாரம்பரியமான இசைக்கருவி. அதனை துக்க காரமான         சாவுக்கு பயன்படுத்துகிறார்கள். பறை கலைஞன் ஒருவன் மனம்  வெதும்பி   குடிக்க ஆரம்பிக்கிறான்.அவனுக்கு அடுத்த தலைமுறை வருகிறார்கள். இது தான் கதை.  இந்த கலைஞ்ர்களை சித்தரிக்க விரும்பினோம்.ஏழு லட்சம்  ரூ யில் ஆரம்பித்தோம்.பணம் தீர்ந்துவிட்டது. பிராஜெக்டை கைவிடும் நிலை.பஸ்  ஏறி வந்து விட்டேன் விஷயம் தெரிந்த தமிழ் ஸ்டுடியோக்காரர் சன்ஜசயனை பார்த்திருக்கிறார். அவரும் பற்றோரு நண்பரும் பைனான்ஸ் செய்ய படம் முடித்து. விட்டோம்."

"ஏழு  நாள் ஓடினால் போதும் .நிசசயம் இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம் . கல்லூரி  வாசல்களில் நின்று கொண்டு நானே டிக்கட் விற்க தயாராகி வருகிறேன். இது த.மு.எ .க.சங்கத்தினர்  இந்த படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். " என்று முடித்தார் லெனின்.

படம் வந்ததை பற்றியோ, வெளியானதை பற்றியோ செய்தி இல்லை .

ஆனாலும் த மு எ .க சங்கம் பின் வாங்காது !!!



Wednesday, December 28, 2016




"ராகுல்சாங்கிருத்யாயனின் " 


இந்தி படைப்பு 


தமிழில் .....!!! 







சுமார் மூன்று  ஆண்டுகள் ஆகியிருக்கும்.பாரதிபுத்தகாலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான முகம்மது சிராஜ் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பி இருந்தார் . 1940ம் ஆண்டுகளில்  வெளியான இந்தி மொழி நூல் அது . மூல பிரதி கிடைக்காததால் அதன் ஜெராக்ஸ் பிரதியை அனுப்பி இருந்தார்


ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் எழுதிய " வால்காவிலிருந்து கங்கைவரை " என்ற நூல்தான் அது.


முத்து மினாடசி அவர்களின் உதவியோடு வாசித்தேன். கம்யூனிஸ்ட் கடசியில் புதிதாக வரும் இளம் தோழர் களுக்கு இரண்டு நூல்களை படிக்க கொடுப்பது வழக்கம் . ஒன்று கார்க்கி எழுதிய "தாய்" நாவல். இரண்டாவது ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை ".  ஏற்கனவே நான் ராகுல்ஜி யின் நூலை  படித்திருந்தேன். 


இந்தி பதிப்பு கொஞ்ச்ம வித்தியா சமாக தெரிந்தது. தமிழில் இல்லாத சில   கூடு தலாக சில பகுதியிலிரூ.ந்த மாதிரியும் எனக்கு தோன்றியது. தொழார் சிராஜ் அவர்களிடம் இதனை சொன்னேன். " அப்படியானால் இந்தியிலிருந்து தமிழு க்கு  ஒரு பதிப்பு கொண்டுவரலாம்" என்று யோசனை கூறினார் .


பாரதி புத்தகாலயம் சிராஜின் யோசனை யை ஏற்றுக் கொண்டு மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க சொன்னது.


இந்தி  இலக்கியமென்றதும் நம் மனதில் முன்ஷி பிரேம்சந்த் தான்  நினைவுக்கு வருவார் மிகவும் அற்புதமான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர். 1936ம் ஆண்டு  இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நேருவும் ,இ.எம்.எஸ்ஸும்  . ஆரம்பித்த பொது சங்கத்தின் தலைவராக பிரேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகவும் அற்புதமான படைப்புகளை  பிரேம்சந்த் அவர்கள் உருதுமொழியில் தான் ஆரம்பகாலத்தில் எழுத்தினார். பின்னர் தான் இந்தி மொழியில் எழுத ஆரம்பித்தார்.


இந்தி மொழி பல்வேறு வட்டாரங்களில் பல்வேறு வகையில் கையாளப்பட்டு வந்தது.  அவற்றில் "பிரிஜேபாஷா " என்ற வட்டார மொழியும், "அவதி " என்ற வட்டார மொழியும் மட்டுமே இலக்கிய வாதிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

ராகுல்ஜியின் நூலை முத்து மினாடசி அவர்கள் மொழிபெயர்க்க துவங்கினார்.கிட்டத்தட்ட ஆறுமாதம் ஆகியது. 

பாரதி புத்தகாலயத்தினர் மிகுந்த அக்கறை எடுத்து பிழை திருத்தியதோடு மட்டுமல்லாமல், மொழிநடையை சரளமாக்க வும் செய்தனர்.

சென்ற வாரம் பாரதிபுத்தகாலயத்தின்  நிர்வாகிகளில் ஒருவரான தொழார் பி.கே ராஜன் அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

"வாக்காவிலிருந்து  கங்கை வரை " நூலின் இரண்டு பிரதிகளை அனுப்பி இருக்கிறேன் "என்ற மகிழ்சசி  தரும் செய்திதான் அது.

காலம் காலத்திற்கும் நிற்கபோகும்  ஒரு அற்புதமான படைப்பை தமிழுக்குதந்த  முத்துமினாடசி அவர்களுக்கும்  பாரதி  புத்தகாலயத்திற்கும் நம் பாராட்டுக்கள். 


Monday, December 26, 2016







"இந்தியாவில்  சாதிகள்."





சமீபத்தில்   அம்பெத்காரின்  "  இந்தியாவில் சாதிகள் "என்ற நூல் பற்றி  திருப்பாராம்  குன்றத்தில் கருத்தரங்கம் நடந்தது.


 அதில் த . மு.ஏ. க.சங்கத்தின் பொது செயலாளர்  க.வேலாயுதம்    அவர்  கள் பேசும் பொது 'சங்  பரிவாரங்கள் இஸ்லாமியர்களின் வருகைக்கு பின் தான் இந்தியாவில் சாதிகள் தோன்றின ' என்று ஜோஷி   என்பவன் ஒரு முன்னுரையில்அபத்தமாக  எழுதியுள்ளதை சுட்டிக்காட்டினார் .

1945ம் ஆண்டு ஜப்பான் மீது அணுகுண்டை  அமேரிக்கா வீசியது என்று கூட    இஸ்லாமியதீவிர  வாதத்தை முடக்கத்தான் என்று   இந்த பாவிகள் சொல்வார்கள்.
எதுவானாலும் பழியை இஸ்லாமியர்களின் மீது போடுவது அவர்களின் வழக்கம் .

உண்மையில் இறுக்கமான சாதிய   கட்டுமானம் ஆதிசங்கரர்  காலத்தில் தான் தோற்று வைக்கப்பட்டது.

இது பற்றி சங்கரர் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நிகழசசியாய்  குறிப்பிடுவார்கள் புலை யன் ஒருவன் . எதிரில் வருகிறான் . சங்கரர் நீராடிவிட்டு வருகிறார்.தீட்டு படாமலிருக்க அவனை தள்ளி நிற்க சொல்கிறார். "யாரை யாரை சொல்கிறாய் சங்கரா?" என்கிறான் புலையன்  .

"நானும் நீயும் ஒன்று என்றால் யாரால் யாருக்கு திட்டு ? உன்னால் எனக்கா அல்லது என்னால் உனக்கா ? என்கிறான்.

சங்கரர் "அத்வைதி".

உண்மையில் சாதீய  கட்டுமானம் பிராம்மண மதம் ஸ்தாபனப்படுத்தப்பட்ட பிறகே  இறுக்கமானது.

அதனைசெய்தவர் சங்கரர் கி.பி எட்டாம்நூற்றாண்டு    என்று வரலா ற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்றிற்கும் புராணத்திற்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் "சங்கிகள் ".

இஸ்லாமிய காற்று மிகவும்மெலிதாக இந்தியாவிற்குள்  வீச ஆரம்பித்த்து கி.பி 1000 ஆண்டு  வாக்கில் தான் என்கிறார் நோபல்பரிசு பெற்ற பொருளா தார நிபுணர் டாகடர் அமர்த்திய சென்.அவர் வரலாற்றாளரும் கூட .


Wednesday, December 21, 2016

பாண்டே -தீபா  பேட்டி 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேர்முக பேட்டி ஒளிபரப்பாகியது. ஆம் ! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள்  தீபா அவர்களின் ஒளிபரப்பு அது.சுமார் ஒருமணிநேரத்திற்கு சில மணித்துளிகள் கூடுதலாக இருந்திருக்கலாம். மிகவும் அமைதியாகவும் ,மிகவும் நிதானமாகவும்  நடந்தது .

பாண்டே  நிலையை விட்டுகொடுக்காமல் கேள்விகளை கேட்டார். ஆத்திரப்படாமல்,பாரபரப்படையாமல்அமைதியாகவும் ,நிதானமாகவும்    தீபா பதில் சொன்னார்.

இரண்டு கைதேர்ந்த வக்கீல்கள் வாதம்போலிருந்து. உறுதியாக இருவரும் தங்கள் நிலையை பற்றி நின்றனர்.

மறை ந்த முதலமைசர் படித்தவர். ஒரு intelectual . தனியாகமுடிவுகளைஎடுக்கக் கூடியவர் . >யாருக்காகவும்தனமுடிவுகளைமாற்றிக்கொள்ளாத இயல்புகொண்டவர் . தன உறவினர்களை பார்க்கக்கூடாது என்று அவரிடம் எவரும் சொல்லமுடியாது.என்று பாண்டே பட்டியலிட்டார்.

நான் பத்து வயது  வரை அவருடன் தான் வாழந்தேன் . வேதா நிலையத்தில் தான் பிறந்தேன். எனக்கு தீபா என்று பெயர்வைத் ததும்  அத்தை தான்.

கார்ட்டனிலிருந்து வெளியே போனபிறகும் எங்களோடு தொடர்பில் தான் இருந்தார். என் பாட்டிக்கு   பிறகு முழு  பொறுப்பையும் ஏற்றுக் கொ ண்டார். நான்தான் மூத்தவள். நான் சொன்னபடிதான் கேட்கவேண்டும் என்கிறார்> நாங்களும் அப்படியே இருந்தோம். எந்தந்தை  இறந்தபிறகும்  அவர்தான் கவனித்தார்.என் திருமணம் எப்படி எங்கே நடக்கவேண்டும் என்பதையும் முடிவு செய்தார் ." என்கிறார் தீபா

"அவரை சுற்றி இருந்தவர்கள் பிரித்து விட்டனர். "

"உங்கள்தம்பிய அனுமதித்தவர்கள் என் உங்களை அனுமதிக்க வில்லை.?"

"நான் கேள்விகள் கேட்பேன்."

"சுற்றி இருந்தவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருந்ததா?"

"அத்தை இறந்தபிறகு முடிவுகளை யார் எடுத்தார்கள். அது செல்வாக்கில்லையா ?நான் இருக்கக்கூடாது என்று யார் சொன்னார்கள். ஆயிரக்கணக்கில் ஜனங்கள் இருக்கும் பொதுநானொருத்தி என்ன செய்துவிடமுடியும். செக்கியூரிஈட்டிகளை வைத்து என்னை அனுப்பியது யார். ?"

"அரசியலு க்கு வருவீர்களா ?" என்று கேட்ட பொது மழுப்பிவிட்டார்.

தீபா என்ற இந்த பெண் அவர் அத்தை மாதிரியே புத்திக்கூர்மையும்,தைரியமுமுள்ள பெண் என்றுதான் பேட்டியின் மூலம் உணர்த்தினார்.!


Tuesday, December 06, 2016

தங்க மகளன்றோ ,

தண்ணீர் சுமந்திருந்தார் ...!!!

அப்போது நா ன் ஹைதிராபாத்தில் பணியாற்றி   வந்தேன்.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் -ஜனவரியில்சென்னை வந்து விடுவேன் . சபாநாடகங்களொன்றுவிடாமல்  பார்த்து விடுவேன் . என் சகோதரர் திருவல்லி கேணியில் வசித்து  வந்தார் . NKT மண்டபத்தில்  நாடகங்கள் நடக்கும். 

1957-62 ம் ஆண்டுகள். பேபி டாக்சி என்று உண்டு."மொறிஸ் மைனர்" கார் டாக்சியாக வரும். குறைந்த பட்ச கட்டணம் 8அணா . அம்மா அண்ணன் குடும்பத்தோடு போவோம். 

சோவின் விவேக் பைன் ஆர்ட்ஸ் அப்போது நாடகம் போட்டுவந்தது. அதில் சநதியா அம்மையார்    நடித்து வந்தார் அவரோடு அவரது மகள் ஜெயலலிதா வருவார்.

ஒன்பஅல்லது பத்து வயது இருக்கலாம். சந்தியா அம்மையார் மகளை  கண் போல வளர்த்து வந்தார். அவருடைய தங்கை வித்யாவதி  விமான பணிபெண்ணாக இருந்தார். தன அக்காவின் மகள்  மீது  பிரியத்தோடு இருப்பார்.பின்னாளில் வித்யாவதியும் திரைப்படங்களில் நடித்ததுண்டு.

சிறு வயதில் ஜெயலலிதா  இளவரசி போல்வாழ்ந்தார் .பின்னாளில் திரை வாழ்க்கையிலும்  கை  நிறைய சம்பாதித்தார் .       

அவர் சமபாதித்த பணமே குடும்பம் என்று இல்லாத  அவருக்கு போதுமானது. அவருடைய தாயார் சந்தியா மறைந்ததும்  கொஞ்ச்ம தனிமை அவரை சிரமப்படுத்தியது. அனால் அவரூடைய  குருவான எம்.ஜி.ஆர்   பாதுகாப்பு மிகுந்த ஆறுதலளித்தது.

அரசியலில் புகுந்தார். எந்த  சமயத்திலும் பணத்திற்காக அவர் எவர் தயவையும் நாட வேண்டியதில்லை என்ற நிலைதான் இருந்தது. 

அவருடைய அரசியலெதிரிகள் அவர் சொத்து  சேர்த்தார் என்று வழ்க்காடிய போதும் அதனை தைரியமாக சந்திக்கவே செய்தார்.

இன்றும் கேடிக்கணக்கான் ஏழை  எளிய மக்கள் அவரை    நம்புகிறார்கள். குடும்பம்,குழந்தை  என்று இல்லாதவர் அவர் யாருக்காக சொத்து சேர்க்கவேண்டும்   என்று அந்த மக்கள்  கேட்கத்தான் செய்கின்றனர் . அவரை சுற்றி இருப்பவர்கள் கொள்ளை ய டித்த பாவத்தை பாவம் எங்கள்   தலைவி சுமக்கிறார் என்றே மக்கள்கருதுகின்றனர் .

அவர் பின்னால் ஆதரித்து நிற்கின்றனர்.

இமாலய வெற்றியை அவருக்கு அளித்துமகிழ்ந்தனர் .

அந்த தீரமிக்க பெண் மணிக்கு இவ்வளவு சீக்கிரம் முடிவு வரும் என்று அவருடைய எதிரிகள்கூட நினைக்கவில்லை .

செங்கீரன் எழுதிய கவிதை வரிகள் தான் நினைவு தட்டுகிறது 


யாரோ ஒரு வீட்டில் ,
               எவரோ தீ  வைக்க ,
தங்க மக(ன) ளன்றோ , 
                தண்ணீர் சுமக்கின்றார்!!


 போதும் தாயே ! நீ சுமந்து போதும் !!

என்று இயற்கையே அவருக்கு  விடுதலை அளித்துவிட்டது !!!



Sunday, December 04, 2016


சிறுகதை

"நெருப்புக்கு தெரியுமா ?"



அரச இலையின் காம்பிலிருந்து நுனி வரை இரண்டாக பிளந்து பாயும் நரம்பு போல நாகபுரி நகரை பாதியாக பிரித்து செல்கிறது "வார்தா" செல்லும் சாலை !


நாகபுரியின் வடக்குப்பகுதியிலிருக்கிறது "வனதேவி" நகர் ! 


சுமார் ஐம்பது அறுவது குடும்பங்கள் வாழ்கின்றன !


  முதல் வீட்டில் ரிஜ்வான் கான் வசிக்கிறான் 1 அவன் வங்கத்திலிருந்து வந்தவன் ! காலையில் நல்ல நீர் மீன் இல்லாமல் அவன் வீட்டில்பொழுது விடியாது! அவன் தாயார் வீட்டு வாசலில் உள்ள பட்டிய கல்லில் மீன உரசி செதில் நீக்கி துண்டு போட்டு வீட்டிற்குள் எடுத்து செல்வாள் !


அவன் அடுத்த வீட்டு தேவ்சந்த் மனவி சாக்கடை சண்டையை ஆரம்பிப்பாள் ! 

அடுத்தவீட்டு பரசுராம் சிங்கும் ,அப்துல் பஷீருக்கும் நிலச்சண்டை எப்போதும் ! பிளக்ஸ் போர்டு,பிளாஸ்டிக் ஷீட்டுகள்  தன் இருவர் வீட்டுக்கும் கூரை ,மற்றும் சுவர்கள் ! பஷீர் வீட்டில் படுத்து கால் நீட்டிக் கொண்டால் பரசுராம் வீட்டில் தெரியும் ! 


இங்கு வசிக்கும் ராம்சந்த் மத்திய பிரதேசத்துக்காரன் ! காலையில் எழுந்து ஐந்து மணிக்குள் குளித்து :ருத்ரம் " சொல்லி வேலைக்குப்வாபோவான் ! காலையில் ஐந்து வீடு ,மதியம்  இரண்டு,இரவு ஐந்து வீடு -வேலை ! ரொட்டி,சப்ஜி (வெஞ்சனம்) செய்வான ! சுத்தமான மத்திய .பிரதேச  பிராமணன் ! சமையல் வேலை !


அந்த வனதேவி நகரில் தான் தீவிபத்து !


2010ம் ஆண்டு நடந்தது ! மறு நாள் மத்திய இந்தியாவின் ஆங்கில இதழான "ஹிதவாதா" வில் தலைப்பு செய்தியாக வந்தது !


றிஜ்வான் வீடு சாம்பலாகி விட்டது ! அவனுக்கு இரண்டு கைகளிலும் தீக்காயம் ! தெவ் சந்த் வீட்டில் கூரை வேய்வதற்காக இரண்டு துருபிடித்த தகர ஷீட்டுகளை வைத்திருந்தான் ! தீபரவாமலிருக்க றிஜ்வான் அதை இழுத்தான் ! தகர மாதலால் சூடு தாங்காமல் அவன் இரண்டு கைகளும் கொப்பளித்து விட்டது !  


தெவ்சந்த் மனைவி தகரப்பொட்டி ஒன்றை எடுத்தாள் ! அதற்குள் தான் சிறுவாடு வைத்திருப்பாள் திறந்து பார்த்தபொது ஏழு எட்டு பத்து ரூ நோட்டுகள்  கருகிக் கிடந்தன ! அவள் கையிலும் சூடு !


பஷீர் ரிங்ரோடில் ஒரு கடயில் சமையல்வேலை செய்கிறான் !

 தன்னர்வ குழுக்கள் வசூல் செய்தனர் !


தேவ் சந்த் தனக்குத்தெரிந்த பலசரக்குகடைகாரரை 12 மணிக்குமெல்எழுப்பி அரிசி, உப்பு, எண்ணை வாங்கிவந்தான் ! 

பஷீர் 'புலவு" செய்தான் ! ரமாகாந்த் பந்திபோட்டன் ! முதலில் குழந்கதைள் ! பின்னர் பெண்கள்  ! எல்லரும் சாப்பிட்டபின்  ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டனர் ! 


"தொஸ்த் ! ஒருவாரம் வேலைக்கு பொகாதே !" என்றான் ரிஜ்வானை நோக்கி தேவ் !


அவனைப்பார்த்து பரிதாபமாக இளித்தான் றிஜ்வான் !


"உன் குடும்ப  சாப்பாடு என்பொறுப்பு ! மீன் மட்டும் கேக்காத" என்றான் ராம்சந்த்1

 எல்லரும் சிரித்தனர் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹிதவாதா" பெப்பரில் இதனை படித்த எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது !


என் வீட்டு வாசலில் பெரிய புளியமரம் உண்டு ! அதன் பரந்த நிழலில் மதிய வேளையில் ஆடோகாரரகள் இளைபாருவார்கள் ! நானும் அங்கு சென்று அவர்களோடு வம்பு பெசுவேன் ! 


கமர் உத்தீன் என்ற ஆட்டோ காரார் என்னிடம் நிறைய பெசுவார் ! 


"சாப் ! கபர் க்யா (செய்தி) ஹை ?" என்று கேட்பார் ! அவ்வப்போது நானும் அவரிடம் அன்றய செய்திய கூறுவேன் !


அன்று வனதேவி நகர் செய்தி நெகிழ்ச்சியாக இருந்ததால் அவரிடம் சொன்னென் !


முடிப்பதற்குள் சவாரி வந்து விட்டது ! கமர் உத்தீன் வண்டியைக் கிளப்பிக் கொண்டே சொன்னார் !

"கியா சாப் ! ஆக் ஜானே கியா ? நெருப்புக்கு தெரியுமா ! இவன் முஸல்மான்.இவன் இந்து ,இவன் தலித் நு!" 



ஆட்டோ பின்னால் வெளியேறிய  புகையை பார்த்துக்கொண்டே நின்றேன் ..



( நவம்பர் 16  "செம்மலர் " இதழில் பிரசுரமான "காஸ்யபன் " எழுதிய கதை.)



Thursday, December 01, 2016






கள்ளப்பணத்தை ,


சிருஷ்டிப்பவர்கள் ,


ஆடிட்டர்கள் ....!!!






1945-50 ஆண்டுகளாக இருக்கும். எனக்கு துரத்து உறவினர் அண்ணன் முறை. அவர்பெயருக்கு முன்னால்  F C A  என்று போட்டிருந்தார். அவர் ஆடிட்டராக பணியாற்றினார். பின்னாளில் அதுவே C A  என்றுஆனதாக சொல்வார்கள்.


ஆடிட்டர் படி ப்புமிகவும் கடினமானது என்பார்கள். மூன்று ஆண்டுகள் ஒரு ஆடிட்டரிடம் அப்ரென்டிசாக இருக்கவேண்டுமாம்.ஆடிட்டர்கள் அவர்கள்வசதிக்கு ஏற்ப  மாணவர்களுக்கு 50-100 என்று சம்பளம் கொடுப்பார்களாம். 


இன்று கதை மாறிவிட்டது.மாணவர்கள் ஆடிட்டருக்கு 50,000-60,000 கொடுக்கிறார்களாம்.


ஒரு மாணவனிடம் தெரிந்துகொள்வதற்காக. இது என்னப்பா படிப்பு என்று கேட்டேன் . மகிழ்சசியோடு சொல்ல ஆரமபித்தான்.


"சார் !  ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆடசி   மாறுகிறது . அமைசர்க  ள் மாறுகிறார்கள்.. அரசின் பணக்ள்கொள்கையும்  வரிக்கொள்கையும் மாறுகிறது. முதல் போட்டு தொழில் செய்யும் முதலாளியால் இதனை புரிந்து கொண்டு செயல்பட முடியாது.இந்த இடைவெளியைப்போக்கி சட்டவரவு நுணுக்கங்களை அறிந்து முதலாளிகளின் கணக்கு வழக்குகளை சரி செய்து கொடுப்பது எங்கள் வேலை" என்றான்.

நாட்டின் வளர்சசிபணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றை செய்கிறார்கள் .


ஆனால் நடப்பது வேறு.

ஒரு சிமெண்டு ஆலையில் ஒரு நாளைக்கு 5000 டன்  உற்பத்தி என்றால் இவர்கள் கணக்கில் காட்டுவது 3000 டன்  மிதி 2000 டன் இயக்குனர்களின் சொந்த கணக்கிற்கு போய்விடும்..  உற்பத்தியின் சிலவு,கூலி ,போக்குவரத்து ,விற்று வரவு எல்லாம் தனி கணக்குக்கு போய்விடும் .இதன் மூலம் கிடைக்கும் லாபம் அரசுக்கு தெரிய வராது>இந்த ஆடிட்டர்கள் கையெழுத்து போட்ட  இறுதி கணக்கை அரசு ஏற்கும் . பணம்  ரகசியம். ஆரம்பகாலத்தில்   பணம் திரைப்படம், போன்ற துறைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இன்று சகல துறையிலும் நடக்கிறது. அரசுக்கு தெரிந்து ஒரு பொருளாதாரம். தெரியாமல் ஒரு பொருளாதாரம் . இதனையே PARALEL பொருளாதாரம் என்கிறார்கள். இதனை கையாள்பவர்கள் தான நாட்டையே  ஆளும் நிலைமை  உருவாக்கி விட்டார்கள் 


இந்த கணக்கில் வராத பணம் டாலர்களாக வெளி நாட்டிலும் ,தங்கம் கட்டிடங்களாக உள்நாட்டிலும் இருக்கிறது. இது அவசர அவசியமாக கண்டிபிடிக்கப்படவேண்டும். கண்டு பிடிக்க அரசுக்கு எத்தனையோ வழிகள் உண்டு.

ரெண்டு ஆடிட்டர்களை பிடித்து நாலு மிதிமிதித்து கேட்டால் கணக்கில் வராத பணம் யாரிடம், எவ்வளவு ,எங்கு இருக்கிறது என்பதை கக்கி விடுவார்கள்.

பிரதமரும் நிதி அமைசசரும் இதனை செய்வார்களா ???


Wednesday, November 30, 2016

1சிறுகதை (மீள் பதிவு )
"அம்பாசமுத்திரம் கந்தசாமி "

"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....

" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.

மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.

அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.

மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .

"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'

. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .

"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.

"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."

பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."


வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .

மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .

"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."

எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது

. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""

கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..

(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)

Monday, November 21, 2016








"பாப்" டிலனுக்கு 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ...!!!







இலக்கியத்திற்கான நோபல்பரிசு"பாப டிலன் "அவர்களுக்கு அளித்தது பற்றி  சர்சசை எழு ந்த்துள்ளது.

இதே மாதிரி சர்சசை வின்சன்ட் சர் சில் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதும் இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் பொது சர் சிலின் பங்கு மகத்தானது.நொறுங்கி விழு ந்து  விட்டது என்று கருதிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஹிட்லரின் பிடியிலிருந்து காப்பாற்றிய பெருமைஅவ்ருக்குஉண்டு. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும்நடந்த தேர்தலில் அதே சர்சில் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண்மை .

இரண்டாம் உலகப்போர் பற்றி அவர் ஒரு நூல் எழுதினார். . ஏழு வால்யூம் கொண்ட அந்த நூலில் பாசிசத்தின் தோற்றத்திலிருந்து அதன் முடிவு வரை சித்தரித்திருப்பார். எனக்கு அவற்றில் இரண்டே வால்யூம் தான் படிக்க கிடைத்தது.   

ஆங்கில எழு த்தாளர்களில் இரண்டு பேருடைய எழு த்து எனக்கு மிகவும்பிடிக்கும். ஒருவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். கடுமையான தத்துவ விஷயங்களையும் மிகவும் தெளிவாக புரியவைக்கும் நடை. அவருடையது.. அதே போல் சர்சில் அவர்களுடைய நடையும் சிறப்பாக இருக்கும்.

பாப் டிலனுக்கு விருது  கொடுத்தது விமரிசிக்கப்படுகிறது.

பாப் டிலன் ரஷ்யாவிலிருந்து வந்த யூத வம்சாவளியை   சேர்ந்தவர் . மேடையில் பாடிவந்த அவர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை வரவேற்றார். முதலாளித்துவத்தை ஏற்காமல்.அதே சமயம் சோவியத் சோசலிச பாணியில்மாற்றங்களைக்கொண்டு வரும் fankfurt school என்ற குழுவை  ஆதரித்தார்.   மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நிற  வெறிக்கெதிரான   உரிமை , சூழலியம்  அமெரிக்காவின் வியட்நாம் போர்    எதிர்ப்பு  என்று செயல்பட்டார்.

நாட்டுப்புற   பாடல்களில் ,சோகம் விரக்தி,,வாழ்க்கை . இருக்கிறது என்று கூறியவர் டிலன் 

கறுப்பர்களின் பாடுகளை விவரிக்கும் அவ்ரத முதல்பாடல் "காற்றில்பதில்பட்டபத்துக் கொண்டிருக்கின்றன " இன்று கறுப்பர்களின் கொடி பாடலாக இசைக்கப்படுகிறது.

" அவன் எத்தனை சமுத்திரங்களை நீந்த வேண்டும் ?
  எத்தனை முறை குண்டுகள் பறக்க வேண்டும் ?
எவ்வளவு எவ்வளவு மரணங்கள் வேண்டும் ?
அவர்கள் அழுகையை கேட்க எத்தனை காதுகள் வேண்டும் ?
நன்பனே !  காற்றில்    பதில் காற்றில் படபட த்துக் கொண்டிருக்கிறது ....


  இந்தியாவில் தலித்துகளை பற்றி எழுதப்பட்டதோ  !

சாகித்யஅகாதமியும், ஞனபிட   விருது வழங்குபவர்களும்  மற்றவர்களும் எழுந்து நின்று விருது அளிக்கவேண்டிய வரிகளல்லவா !!

பாப் டிலனின் மற்றோரு பாடல் 

"காலம் மாறிக்கொண்டிருக்கிறது " 


இந்தப்படலை பிரதமர் மோடி  நேற்று ஒரு கூட்டத்தில் பயன் படுத்திவிட்டு இளைஞர்களை பார்த்து பேசி இருக்கிறார்.

பாப் டிலன் நமது சொந்தக்காரன்.!!

அவனை இந்த பாவிகளிடம் பலிகொடுத்துவிடாமல் இருப்பபோம்.!!! 



  , 




Wednesday, November 16, 2016



உணர்சிகளின் உண்மையும் ,

உண்மை  உணர்சிகளும் ....!!!






ஜப்பானிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி பாவம். என்ன செய்தி கிடைத்ததோ ! என்னவோ ! கோவாவில் பேசும்போது அழுது.தும்மி,இருமி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகளும் ,"பேனா ஓட்டிகளும் "   ஆரம்பித்து  விட்டார்கள். உணர்சசி மிகுந்த மோடியின் வார்த்தைகள் இந்தியாவையே உலுக்கி விட்டது என்று தலையங்கங்கள் எழுது கிறார்கள்.

"True Emotion " ;":Emotional Truth;"   :என்று அவர்களின் ஆங்கில புலமையை காட்டி எழுது கிறார்கள்.அதே சமயம் அவர்கள் "நரேந்திர மோடி "என்று குறிப்பிடுகிறார்கள் தவிர பா.ஜ.க என்று மறந்தும் சொல்வதில்லை .

நடப்பது மோடியின் ஆடசி. என்பதை சகல வழியிலும் நிலை நிறுத்து கிறார்கள்.  மோடி என்ற தனி நபரை  மக்கள் வழிபடவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி   பின்னுக்கு தள்ளப்பட்டு" மோடி " என்ற பிமபம் கட்டமைக்கப்படுகிறது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி வேண்டும் .அவர் பா.ஜ க வில் இருப்பதால் பா.ஜ.கவும் வேண்டும். அதேசமயம்  பா.ஜ.க என்று சொன்னால் இந்திய மக்கள் முன்பு தோன்றும் பிமபம்பற்றி அவர்களுக்கு தெரிந்தே உள்ளது.

பாஜக என்றால்" இந்துத்வா ". பாஜக என்றால் "ஆர் எஸ்.எஸ்" பாஜக என்றால் "காந்தி அடிகளின் படுகொலை". பாஜக என்றால் இந்து மத சார்பு.-சிறுபான்மை இஸ்லாமிய,கிறிஸ்துவ எதிர்ப்பு . இந்திய மக்களின் பெரும்பானமையினார் இதனை ஏற்காத மரபினை கொண்டவர்கள்.

ஆகவே "மோடி " என்ற தனி நபரை தூக்கி வைக்க வேண்டும். அவரை முன் நிறுத்தி தேர்தலசந்திக்கவேண்டும் .

இந்த பஜனையை  துவங்கி விட்டது.

வட நாட்டு பத்திரிகைகளில் இதனை ஆரம்பித்து விட்டார்கள்.





Monday, November 14, 2016







"அதனை அவன் கண் விடல் "








அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தோலைக்காடசி பே ட்டியில் " 1000 ரூ 500 ரூ  பற்றி அமைச்சரவையில்  கூ றிவிட்டுதான்  பிரதமர் அறிவித்தார் " என்று கூறியதாக முகநூலில் தகவல்வந்துள்ளது.


இதனை படித்த எனக்கு அறுவது ஆண்டுகளுக்குமுன் உலகமே வியந்து போற்றிய இந்திய அரசின் அறிவிப்பு ஒன்று நினைவு தட்டியது.

இன்சூரன்ஸ் துறையில் 245 ஐந்து தனியார் கம்பெனிகள் அப்போது இருந்தன..இந்த பணத்தை முதலாளிகள் கபளீகரம் செய்து வந்தனர்.இதனை தடுக்க பெரோஸ் காந்தி அவர்கள்முழு முசசி ல் செயல்பட்டார்கள். ராமகிருஷ்ண டால்மியா கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.. 

அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் சி.டிதேஷ்முக் என்பவர்.இன்சூரன்ஸ் துறையை அரசுடமையாக்க முடிவு செய்தார்.வெளியில் தெரிந்தால் முதலாளிமார் உஷாராகி விடுவார்கள். கம்பெனி பணத்தை தங்கள்சொந்த வாங்கிக்கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்    அதனால் ரகசியமாக செயல்பட்டார். அமைசசரவையில் இதற்கான யோசனைகளை வைக்காமல் பிரதமர் நேருவிடம் மட்டும் தேதிகுறிப்பிடாமல் தகவல் கொடுத்தார் இது பற்றி வானொலியில் பேச நேரம் கேட்கும் பொது கூட என்ன அறிவிப்பு என்பதை சொல்லவில்லை. 

நாடு புராவிலும் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்களை கைப்பற்ற அதிகாரிகளை அனுப்பினார்> அவர்களுக்கு தான் எதற்காக செல்கிறோமென்பதைக்கூட சொல்லவில்லை.அவர்களிடம் சீல்வைக்கப்பட்ட  கடிதங்கள் கொடுக்கப்பட்டன.  கால 10 மணிக்கு அதனை பிரித்து பார்த்து அதில் சொல்லி இருக்கும் உத்திரவுகளை நிறை வேற்றவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளை விடப்பட்டிருந்தது   

1956ம் ஆண்டு ஜனவரி மாதம் 19மத்தேதி இரவு 8.30 மணிக்கு நிதி அமைசர் தேஷ்முக் வானொலியில் இன்சூரன்ஸ் அரசுடமை ஆக்கப்பட்டது என்று அறிவித்தார்.

முதலாளி மார்கள் தங்கள் கைத்தடிகள்மூலம் தகவல் வரும் என்று தொலைபேசிக்காக காத்திருந்தார்கள்.20ம் தேதி காலை அவர்கள் அலுவலகம் இந்தியா முழுவதும் திறக்கப்படும் பொது ஏற்கனவே அனுப்பப்பட்ட அதிகாரிகள் சில் வைத்த கவர்களோடு அலுவலக வாசலில் காத்திருந்தார்கள். அலுவலக கணக்குப்புத்தகத்தை வாங்கி அதில்குருக்கே கையெழுத்து  போட்டுவிட்டு சென்று விட்டார்கள். அன்றைய வர்த்தகம் கூட  தங்கு தடை இன்றி நடந்தது.

உலகம் பூறாவும் தேஷ்முக் அவர்களை பாராட்டியது.அவருடைய செய்நேர்த்திக்காக ! .

வள்ளுவன்" இதனை   இவன் கண் விடல்" என்றான். !!

 அர்த்தம் பொதிந்த வார்த்தை !!!

 

Friday, November 11, 2016







"மனம் ஒரு குரங்கு "






"மனம் ஒரு குரங்கு " என்று ஒரு நாடகம் நடந்தது. "சோ " ராமசாமி அவர்கள் எழுதியது . பின்னர் அது திரைப்படமாகவும்வந்த நினைவு.

சமீபத்தில் தொலைக்காட்ச்சியில் ஒருவயதான அம்மையார் கண்ணீரோடு நின்றார். கையில் 500/- ரூ நாட்டுகளோடு ."எனக்கு மட்டும் முடியுமானால் அந்த தொலைக்காட்ச்சி பெட்டிக்குள் புகுந்து அந்த அம்மை யாருக்கு உதவிஇருப்பேன்.மனம் அவ்வளவு சங்கடப்பட்டது ". என்று ஒரு பதிவர் நிலைத்தகவல் எழுதி இருந்தார்.

பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளை படிக்கும் பொது மனம் பதறத்தான் செய்கிறது .எல்லோருக்குமே இப்படித்தான் இருக்குமா? இந்த கேள்விக்கு  பதில் கிடைக்காது. 

நமது படிப்பு,பட்டறிவு,பண்பாடு, வளர்ந்த விதம் ,சூழல் , என்று பல விஷயங்களை பொறுத்து நம் மனம் செயல்படுகிறது.

நம்முடைய இரக்க உணர்சசி, அன்பு ,பாசம் , கோபம் , எல்லாமாக சேர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் நிலை அது. 

அப்படியானால்மனம் என்பது நம் உணர்வா ? நம் அறிவா ? நம் அனுபவமா ?   நம் மூளையா ?  அது நம்முள் இருக்கும் ஓரு அங்கமா? 

இந்த கேள்விகளுக்கு பௌராணிகர்கள் சொல்லும் பதில் ஒருபக்கம் . அந்த "தலைப்பா " கட்டு சாமியார் சத்குரு விளக்கமளிப்பது ஒருபுறம்.

அறிவியல் ரீதியாக இதனை அணுகுவது ஒரு வகை.

" மனம் " பற்றி மனநல மருத்துவர் ஒருவர் சொன்னது சரியாகவே இருக்கும்.

"Mind is nothing but some chemical reaction in the brain " 

என்கிறார் டாக்டர் .

சரி தானே   !!!

Thursday, November 10, 2016









"ஜார் "  மன்னனின் 

அரண்மனை வாசலில் ....!!!




அந்த பிரும்மாண்டமான அரண்மனையில் தான் "ஜார் " மன்னன் வசித்தான்.அரண்மனையை சுற்றியுள்ள சாலைகளிலும்  சந்து பொந்துகளிலும்  மக்கள் வசித்தனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. வேலை இல்லை. குழந்தைகள் பெண்கள் பட்டினி . மன்னனோ அரண்மனைக்குள் உல் லாச வா ழ்க்கை    வாழ்ந்தான் .

இதனை அந்த பாதிரியாரால் கண்டு கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை . அந்தமக்களிடையே சென்று அவர்களை ஒன்று திரட்டினார்.அரண்மனை வாசலில் "எங்களுக்கு சோறு போடு " என்று கோஷம் எழுப்பினார் .

"ஜார் " மந்திரியிடம் என்ன "சத்தம்" என்று கேட்டான். மந்திரி விளக்கியதும், அந்த மக்களுக்கு தினம் கோதுமை மாவை கொடுக்கவும் உத்திரவு போட்டான்.

சிலமாதங்கள் சென்றன .     பாதிரியார் தலைமையில் ஆர்ப்ப்பாட்டம் நடந்தது."ஜார்" மந்திரியை அனுப்பினான்."மழை காலம் வருகிறது. எங்களுக்கு வசிக்க கூ றையுடன் கூடிய இருப்பிடம் வேண்டும் "என்று கேட்பதாக  .அமைச்சர் சொன்னார் .

" நம்மிடம் அவர்களுக்கு உதவ தளவாடங்கள் இருக்கிறதா  ?"

"இருக்கிறது அரசே "

"அப்படியானால்  அதனை செய்துகொடுங்கள் "ஜார் மன்னன் உத்திராவிட்டான்.

சில மாதங்கள் சென்றன . மீண்டும் ஆர்ப்பாட்டம் . "மன்னா !  குளிர் வருகிறதுகிழிந்த துணிகளூடன் இருக்கிறோம். எங்களுக்கு கம்பளி ஆடை வேண்டும் "என்று கேட்கிறார்கள் என்கிறார் அமைசர். ஆடைகளை  கொடுக்க மன்னன் உத்திரவிட்டான்.

சில மாதங்கள் சென்றன .மீண்டும் ஆர்ப்பாட்டம் . அமைசசரை அழைத்த "ஜாரி"டம் "மன்னா !'  அந்த மக்கள் தங்கள் குழைந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள்  வேண்டு மென்கிறார்கள். உண்ண உணவு,இருக்க இருப்பிடம்,உடுக்க  உடை என்று ஆண்டுமுழு வதும் கொடுக்கும் கொடைவள்ளல் நீங்கள். பள்ளிக்கட்டிடம் ஒருமுறை கட்டினால்போதும் அதனால் பள்ளிக்கட்ட உத்தரவிட்டு விட்டேன் " என்று விளக்கினார் . 

 கோபம் கொண்ட ஜார் மன்னன் " தளபதியை அழைத்து அமைசரின் தலையை வெட்டுமாறு உத்தரவிட்டான். அந்த   பாதிரியாரை பாதாள சிறையில் அடையுங்கள் . ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களை  சுட்டு தள்ளுங்கள் "என்று உத்திராவிட்டான்,

"முட்டாளே ! உணவு கொடுத்தால் என்னை வாழ்த்துவார்கள் . இருக்க இடம்கொடுத்தால் அவர்கள் சந்ததிகள்முதற்கொண்டு என்னை விசுவாசிப்பார்கள். உடுக்க உடை கொடுத்தால்தலைமுறைக்கும் நன்றியோடு இருப்பார்கள்."

"கல்வி கொடுத்தால் ?"அமைசார் குறுக்கிட்டார் .


."அறிவு வளரும்.அறிவு வளர்ந்தால் சிந்திப்பார்கள். நான் ரோட்டிலும் ஜார் மன்னன் அரண்மனையிலும் ஏன்  இருக்கிறான் என்று சிந்திப்பார்கள். அதன் பிறகு பிரளயம்தான் ! எதை வேண்டுமானாலும் கோடு ஆனால்மக்களுக்கு கல்வியை மட்டும்    கொடுக்காதே " என்றான் "ஜார்" மன்னன் .


(மதுரை கோட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் தோழர் தண்டபாணி அவர்கள் கல்வியாளர்களிடையே பேசும் பொது குறிப்பிட்டது.)



Saturday, November 05, 2016







எட்டு பேர் ,

சுட்டு கொலை .....!!!



"போபால் நகரத்தின் அருகில் தீவிரவாதிகள் எட்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர் . இது ம.பிபோலிஸார் தெரிவித்தது. இவர்கள் சிறையிலிருந்து தப்பி உள்ளனர் .அவர்களை தடுத்த சிறை காவலரை குரல்வளையை அறுத்து கொன்றுள்ளனர். பொலிஸாரின் துரித நடவடிக்கை காரணமாக இவர்கள் தப்ப முடியாமல் போய்விட்டது. காவல் துறைக்கு நம் பாராட்டுக்கள் ."  என்று பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகள் எழு து கின்றன. 

இந்த தீவிர  வாதிகளுக்கு ஆதரவாகஎதிர்க்கட்ச்சிகள்,குறைசொல்வது தவறு என்றும் அவை சொல்கின்றன.

இந்த எட்டு பெரும் கொலை கொள்ளைகுண்டுவைப்பு  என்று பல்வேறு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டு விசாராணைக்கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.வழக்கு விசாரிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வரவிருப்பதாக செய்திகள் கூ றுகின்றன.இவர்களானேகமாகவிடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் சிறையிலிருந்து தப்பியது  ஒரு திரைப்படம் போல் இருக்கிறது.பலதேய்க்கும் பிரஷ் ,மற்றும் பலகை களைக்கொண்டு மாற்று சாவி தயாரித்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் அறைகளை திறந்திருக்கிறார்கள் . இந்த தீவிர வாதிகள் எட்டு பெரும் தனித்தனி அறைகளில் இருந்தால் எட்டு சாவி போட்டு எட்டு பூட்டை திறந்து .... 

கிட்டத்தட்ட 30 அடி உயரம் உள்ள மதில் சுவரை ஏறி தாண்டி இருக்கிறார்கள். தங்களுக்கு கொடுத்த போர்வை ஜமுக்காளம் ஆகியவற்றை கிழித்து ஏணியாகி தப்பித்து  இ ருக்கிறார்கள். சுவரில் ஆதாரமாக தொங்கவிட ? ஒருவேளை மதிலுக்கு வெளியே யாரவது நூலேணியை பிடித்து ....? யார் அவர்...?

இப்படி தப்பிக்கும் பொது தடுக்க முயன்ற சிறைக்காவலர் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.எந்த ஆயுதத்தால் அறுத்தார்கள்...?ஏது ஆயுதம்...?

இந்தியாவின் மிகவும்பாதுகாப்பன் சிறைகளில் ஒன்று போபால் சிசிறை சாலை. சுற்றிலும் காமிராக்கள் உண்டு. அருகில் உள்ள புதர்களிலும் காமிராக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதிசயமாக இரவு 2மணியிலிருந்து சம்பவ தினத்தில் காமிரா வேலை செய்ய வில்லை.

சிறைச்சாலையை சுற்றிலும் விளக்குகள்மிகவும்பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் .சம்பவத்தன்று அவை எரியவில்லை.

ம.பி அரசு அதிகாரி தீவிர வாதிகளிடம் ஆயுதங்கள் இல்லை என்று அறிவித்திருக்கிறார் . நிராயுத பாணியிலான இவர்களால் என்ன ஆபத்து வரும் என்று போலீசார் கருத்தினார்களோ தெரியவில்லை .சுட்டு கொன்று விட்டார்கள். 

ஆனாலும் தீவிர வாதி களை நாம் ஆதரிக்கக் கூடாது தான் . 

பின் ஏன் எதிர்க்கட்கசி ளும், மனித உரிமைக்காரர்களும் அரசை நமப மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை . 

புரிந்தவர்கள் விளக்குங்களேன் !!!

  

 

Thursday, November 03, 2016





கலப்படத்தை அனுமதிக்கும் ,

"கலப்பட தடை சட்டம் ".....!!!



விருதுநகர் பக்கம் இருக்கும் கிராமம் ஒன்றுக்கு போயிருந்தேன்.நண்பர் வீட்டில் உதவியாக ஒரு அம்மையார் வேலை செய்து வந்தாங்க.அவருடைய 8 வயது  மகள் புத்தக பை  யோடகூட  வந்தது.திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தது.பின்னர் தன பையிலிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்தது.அதிலஈர     களிமண் இருந்தது. சுற்று முற்றும் பார்த்து விட்டு பாவாடையை வில க்கி தன் துடையில் அந்த களிமண்ணை நூலாக உருட்ட ஆரம்பித்தது .நூலாகவும் இல்லாமல், க யிராகவும் இல்லாமல் ,கழு த்தில் போடும் தாலிக்கயிறு தண்டிக்கு உருட்ட ஆரம்பித்தது.ஒரு முழம் ஆனதும் அதை எடுத்து நிழலில் உணர்த்தியது.

ஆசச ரியத்தையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் விசாரித்ததில் இப்படிப்பட்ட களிமண் உருண்டைகள் கிட்டங்கிகளில் ஐந்துபைசா பத்து பைசா என்று வாங்கப்படும் என்று அறிந்தேன். உளுந்து,அரிசி முட்டைகளில் இவை கலக்கப்படுவதையும் தெரிந்து கொண்டேன்.

மிளகோடு அந்தி மந்தாரை விதைகளும், டீ  துளோடு மஞ்சனாத்தி இலையும் கலக்கப்படுகின்றன.

இதனை தடுக்க கலப்பட தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. வட நாட்டில் இருக்கும் நான் நல்ல "நல்லண்ணை " தான் பயன் படுத்துவேன். குறிப்பாக அந்த பிராண்டு நல்லெண்ணெய்தான் என்வீட்டில் பழக்கம் . அதுதான் நான் செய்த "Himalayan blunder ". 

பத்திரிகையில் விலாவரியாக வந்திருந்தது.

எள்ளு கிலோ 110 ரூபாயாம் .நான்கு கிலோ ஆட்டினால் ஒருகிலோ எண் ணை கிடைக்குமாம். அதாவது 440 ரூ அடக்கவில்லை.அப்படியானால் அந்த பிராண்டு எப்படி 400 ரூ கிலோ என்று கொடுக்கமுடியும்.?

இங்குதான் கலப்பட தடை சட்டம் இந்தவியாபாரிகளுக்கு உதவுகிறது. உண்ணும் பொருள்களில் 20சதம் க்ல ப்படம் செய்யலாம்.ஒரே நிபந்தனை கலக்கப்படும் பொருளும் உண்ணும்பொருளாக இருக்க வேண்டும். இதுதான் சட்டம்.

பருத்தி விதை யை ஆட்டி எண்ணை எடுக்கிறார்கள் . இந்த எண்ணையை நல்லெண்ணெயோடு கலக்கிறார்கள் இது சட்டப்படி குற்றமில்லை.

இங்குதான் சர்வதேச வியாபாரி வருகிறான். இந்தியாவில் g m பருத்தி விதை அனுமதித்து விட்டார்கள். பருத்தி துணிகளுக்கானது> அது உண்ணும்பொருள் அல்ல .அதனால் g m விதைகளை அனுமதிக்க வேண்டும் என்று பன்னாட்டு கம்பெனிகள் கேட்க "ந ம்ம " அரசு அனுமதித்து விட்டது. இந்த புதிய பருத்தி விதை முளைக்காது. அதனை மலடாக்கி விட்டார்கள். அவர்களுக்கு அப்போது தானே விதை  விற்பனை நடக்கும். இந்த மலடாக்கப்பட்ட விதையை தான் இப்போது ஆட்டி நல்லெண்ணெயோடு கலந்து விற்கிறார்கள்.

இது மனித உணவல்ல.!!

 ஆனால் சட்டம் அனுமதித்த உணவு !!!
















Monday, October 31, 2016










"மூலதனம் "





சென்னையில் மூலதனம் நூலை வகுப்பு நடத்தி சொல்லி கொடுக்கிறார்கள்.குறிப்பாக தாம்பரம் பகுதியில் தோழர் .பிகே ராஜன், தேவ பிரகாஷ் ,ஆகியோர் இதில் முழுமையாக இறங்கி பணியாற்றுகிறார்கள். நான் ஆரம்ப காலத்தில் "மூலதனம் நூலை ஒரு முறை படித்திருக்கிறேன். அதில் புரிந்து கொண்டதை வீட புரியாதது தான் அதிகம்பின்னர் ஆத்ரேயா வின் வகுப்புகளின் மூலம் கொஞ்சம்தெளிவு பெற்றேன்.

குன்றக்குடி அடிகளார் (sr ) அவர்கள் உரையை கேட்டு இருக்கிறேன். பணம் ,பண்டம், என்று அவர் M , M 1, M 2 ,என்று அவர் எளிமையாக விளக்கி சொல்வார் .

மூலதனம் பற்றி தெரிந்து கொண்டதை வீட அதனை படிக்கும் பொது அந்த தொழிலாளர்களும் ,இளம் உழைப்பாளிகளும் பட்ட துயரம் தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது.

17ம் நூற்ரான்டில் தொழிற் புரட்ச்சி ஏற்பட்டதும் பட்டறைகள் உருவாகின.பொருள் உற்பத்தியில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.இதற்கான ஆலைகள் ,தொழிற்சாலைகள் உருவாகின. இதனை உருவாக்க  நிறைய மூலதனம் தேவைப்பட்டது.

அப்போது பிரிட்டன்,ஸ்பெயின் ,பெல்ஜியம் போன்ற நாடுகள் பலமான கடற்படையை வைத்திருந்தன. 

கரிபியன், ஆபிரிக்க, அரேபிய ,இந்து சமுத்திர பகுதியில் செல்லும் வியாபாரகப்பல்களை கொள்ளையடிக்க இந்த கப்பற்படை தளபதிகளை பிரிட்டன்போன்றநாடுகள்அனுப்பின.இவர்கள்கொள்ளையடித்தவைகளை தங்கள் நாட்டில் தேவைப்படும் மூலதனமாக்கிக் கொண்டன.இந்த கொள்ளையடித்த தளபதிகளுக்கு "சர் " பட்டம் கொடுத்து மகிழ்வித்தன 

"மூலதனம் " தன கருவிலேயே குற்றமிழைத்த ஒன்று .

  







Saturday, October 29, 2016

"நெருப்புக்கு தெரியுமா "



நேற்று முன் இரவு 8.45 மணிக்கு மதுரையிலிருந்து தொலைபேசி வந்தது.

"ஹலோ ! டாக்டர் செல்வராஜ் பேசறேன்!" பரஸ்ப்பரம் விசாரித்தபிறகு "உங்கள் கதையை படித்தேன்." செம்மலரில் " இப்பதான் வந்தது ,"

"என்கதையா ?"

"ஆமாம் ! "நெருப்புக்கு தெரியுமா " தலைப்பு "

2010 ஆண்டு எழுதியது. நாகபுரியில் நடந்த உண்மை சம்பவம்,இங்குள்ள பத்திரிக்கையில் வந்ததை அப்படியே எழுதி இருந்தேன், கடைசி இரண்டு பத்தி மட்டும் கொஞ்ச்ம கற்பனையோயோடும்முடித்திருந்தேன்..என்னுடைய "பிளாக் " ல் இடுகையாக எழுதி இருந்தேன். பல நண்பர்கள் இதனை பெயர் குறிப்பிட்டு பிரபலமான பத்திரிகைக்கு அனுப்பும்படி கேட்டிருந்தனர் .செம்மலர் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு வேறுபத்திர்கைக்கு அனுப்பாமல் இருப்பதுதான் சரி என்று நினைத்திருந்தால் வேறு பத்திரிகைக்கு இது வரை அனுப்பியதில்லை. ஒய்வு பெற்று விட்டாலும்  என்னவோ மனம் ஒப்பவில்லை.பேசாமல் பெட்டிக்குள்போட்டு விட்டேன் .சமீபத்தில் எதோ தேடும் பொது  கிடைத்தது. செம்மலருக்கு அனுப்பலாம் என்று தோன்றியது .அனுப்பினேன். ஆசிரியர் sap அவர்கள் நவம்பர் இதழ் முடிந்து விட்டது. டிசம்பரில் பார்க்கலாம் என்று கூறினார்.

ஒருவாரம் கழித்து தோழரசோழ  நாகராஜன் நவம்பர் இதழில் வருவதாகவும் என்  முகவரியை தரும் படியும் கூறினார் .

செல்வராஜ் பாராட்டியது மனதுக்கு இதமாக இருந்தது.

மதுரை பசசரிக்கார சந்தில் த.மு,  எ. ச 80 களில் கவி அரங்கம் நடத்தியது. குண்டாக ,குழந்தை  முகத்தோடு அந்த சிறுவன் கவிதை வாசித்த்தான். 

அவர்தான் டாக்டர் செல்வராஜாக  மதுரையில் மிளிர்கிறார். அவருடைய காதல் திருமணம் அண்ணா நகரில் நடந்தது .இன்று அவர் மகள் isro வில் ஆராய்சசி  மாணவியாக இருக்கிறார். விரைவில் லண்டன் சென்று முனைவர் பட்டம் பெற திட்டமிட்டு இருக்கிறார்.

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது . 

செம்மலர் தபாலில் வரும் . கிட்டத்தட்ட 20 நாளாவது  ஆகும்.

முடிந்தால் நண்பர்கள் ஒரு பிரதியை சென்னையிலிருந்து அனுப்பினால் மகிழ்வேன் .

(kashyapan ,201,Nirman Envclave , 86-A ,Gajanan Nagar ,Nagpur 440015.)









 

  







Friday, October 21, 2016






விவசாயிக்கு விதைக்கத்தான் தெரியும் !

விதைக்கு முளைக்கத்தான் தெரியும் .......!



  "Sincere and faithful  wishes will never fail " என்று ஒரு சொலவடை உண்டு . என் பேரன்கள் பற்றி நான் இட்டிருந்த நிலைத்தகவலுக்கு கிட்டத்தட்ட ஐநூறுக்கும்மேற்பட்ட வாழ்த்து  செய்திகள் குவிந்துள்ளன. மனம் நிரம்பி தளும்புகிறது.

நிஹால் காஷ்யப்,,அபினவ் H .R  இருவருமே கைக்குழைந்தையாக  இருந்ததிலிருந்து என்னிடம் வளர்ந்தவர்கள். அதிலும் சின்னவன் அவன் தாயார் படிக்கும் காலத்திலேன்னோடேயே வாரக்கணக்கில் இருந்தவன்.பல சந்தர்ப்பங்களில் அவனை மூத்தவன் வீட்டுக்குக்கொண்டு சென்று அவர்கள் இருவரும் விளையாடும் அழகை ரசித்தவன்.அவர்களின் செல்ல சண்டையும்,விட்டுக்கொடுப்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. 

அவர்கள் பள்ளி செல்லும்காலங்களிலும் அவர்களோடு பேசுவேன். விவாதிப்பேன். சாதி,சமயம்,சமநீதி என்று பேசுவோம். எந்த தயக்கமும் இன்றி என்னோடு எதைப்பைப்பற்றியும் பேசுவார்கள். ஒரே ஒரு விகுயத்தில்மட்டும் முரண்படுவார்கள். Reservation  இட ஒதுக்கீடு விஷயத்தில் ஏற்கமாட்டார்கள்." தாத்தா ! நான் 90 மார்க் வாங்கி பாஸாகிறேன்.  இன்னொருத்தன் 40 வாங்கி பசிக்கிறான். ரெண்டு பேர் திறமையும் வித்தியாசம் இல்லாயா ? " என்பார்கள். கொஞ்சம்  subjectivisym  இருக்கிறது. நான் அதற்கு பதில்சொல்லமாட்டேன்.

"உங்கள் வகுப்பில் ஒதுக்கீடு பெற்ற நண்பர்கள் உண்டா ?" 

"உண்டு "

"அவங்க கிட்ட இது பற்றி பேசி இருக்கீர்களா ?'

"இல்ல "  

"ஒதுக்கீடு வேண்டாம் கிறது ஒந்தரப்பு நியாயம் "வேணும்ங்கிறவன் நியாயத்தை கேக்கணும் இல்லையா? அப்பதான் முழுமையேயான விவரம் கிடைக்கும் "

ஒன்பதாவது படிக்கும்போது இத சொன்னேன். கொஞ்சம்  கொஞ்சமாக  அது பற்றி பேசுவது குறைந்தது .ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கலாம்.

இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்.சின்னவன் 11 th படிக்கும் பொதுபெரியவன் 12 th .இருவருமே cbse  stream .

"சீதாராம் எசுரி  யார் னு தெரியுமாடா ?"

"தெரியுமே 1 உங்க கடசி தலைவர் " என்றான பெரியவன்.

சின்னவன்" பாட்டி எழுதின  சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை எழுதினார்னு நீங்க சொன்னிங்க "என்றான் 

அவரவர் தளத்திலிருந்து விஷயங்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் .

"சீத்தரமும் cbse தான் "

"அப்படியா ?"

"எப்படி பாஸ்பண்ணினார் தெரியுமா ?"

"எப்படி ? '

"natinal merit list ல number one " இந்தியாவிலேயேமுதல் மாண வனாக"

"நீங்க இப்படி பாஸ்பண்ணுவிங்களாடா ?"

"வாசிஸ்சுருவோம் "என்றான் மூத்தவன்.சின்னவன் மண்டைய ஆட்டினான் ."செஞ்ச்ருவம்  தாத்தா " என்றான்.

"ஜவஹர்லால் பல்கலையில்படித்தார். சக  மாணவர்களுக்காக நின்றார். இந்திரா அம்மையார் விட்டு முன்னால் பல்கலைக்கழக கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவருக்கு வயது 21 தான். "

பிரமிப்போடு இருவரும் கேட்டார்கள்.. 

"மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் தெரியுமா ?"

"பாட்டி சொல்லியிருக்காங்க "

"அவங்க அமெரிக்காவில் படி சங்க .  அமெரிக்காவுல "குயூபா " னு சொன்னாலே உள்ள போட்டுருவான் அவ்வளவு கெடுபிடி . மைதிலி அம்மா சர்க்காருக்கு தெரியாம சரக்கு விமானத்துல    சரக்கோடு சரக்கா "குயூபா  " போய்  பத்துநாள் தங்கி பத்திரிகைல எழுதினங்க  ."

பேரன் பேத்திகளோடு ஊடாடுவது ஓர் அருமையான அனுபவம்.

நீங்களும் உங்கள் மகன்   மகள் பேரன் பேத்தி களோடு பேசுங்கள்..

விவசாயிக்கு விதைக்கத்தான் தெரியும்.!

விதைக்கு முளைக்கத்தான் தெரியும் !!

சரிதானே !!! 











































Saturday, October 15, 2016






தமிழகத்திற்கு ,

"பெரியார் " கொடுத்த 

"கொடை ".......!!!



தமிழ் ,தேசியம் என்று கூறிக்கொண்டு சில குழுக்கள் முக நூலில் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல்போய்க்கொண்டு இருக்கிறது. இவர்கள் பெரியார் அவர்களை திட்டுவது என்பது நாகரிக எல்லையை  தாண்டி அருவறுப்படைய செய்கிறது.பெரியார் அவர்கள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் இவர்களின் எழுத்து விமரிசனமல்ல. அவதூறு.

நூற்ண்டுறாண்டுகளாக பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த  தமிழ்  சமூகம் கொஞ்சம் நிமிர்ந்தது என்றால் அது பெரியாரால் தான். மராட்டிய நண்பர் ஒருவர் கூறினார்" ஜோதிபா புலாவும்,அம்பேத்காரும் செய்ய முடியாததை பெரியார் செய்தார். பார்ப்பன ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து விட்டது என்பதல்ல. அது மட்டுப்படுத்தப்பட்டது. அதற்காக அவர் செய்த ராஜ தந்திரம் வெற்றி பெற்றது. பிராமணரல்லாதவர்களை ஒன்று படுத்தி, அவர்களை போராட செய்வது என்பது சாதாரணமான காரியமல்ல . நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள் "என்கிறார்.

இதன் காரணமாக பார்ப்பனர்கள் பெற்று வந்த சலுகைகள் தமிழகத்தில் மட்டுப்படுத்தப்பட்டது. பார்ப்பனரல்லாத மக்கள் சில சலுகைகளையும், உரிமைகளையும் பெறறார்கள். நம் கண்முன்னால்நடந்தசமூக  மாற்றங்கள் இவை .  

இதன் அரசியல் லாபத்தை தன தாக்கி கொண்டவர்அறிஞர் அண்ணா ஆவர்கள். அதனை ரொக்கமாக்கிக்கொண்டவர் கருணாநிதி அவர்கள்.

இதில்வெடிக்கை என்ன வென்றால் பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டிப்  புதைத்து விட்டு தி.மு.க  என்ற கட்ச்சியை ஆரம்பித்து  நட்த்தினார்கள் .  

"கடவுள்  இல்லை ! இல்லவே இல்லை! " என்று தெருத்தெருவாக, கிராமம் கிராமமாக,ஊர் ஊராக  பிராசாராம்  செய்தவர் பெரியார். இது திமுகவின் அரசியலை பாதிக்கும் என்பதால் " ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் " என்று கூறினார் அண்ணாதுரை ,பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கொடூரத்தை சித்தரிக்க "பாம்பையும் ,பார்ப்பனனையும் கண்டால் பாம்பை விடு ! பார்ப்பானை அடி " என்கிறார் பெரியார். நாங்கள் பார்ப்பானரை  எதிர்க்கவில்லை பார்ப்பணியத்தை தான்   எதிர்க்கிறோம் என்று   சமரசம் செய்து கொண்டார் அண்ணாதுரை அவர்கள்.

சென்ற சட்டமன்ற தேர்தலின் பொது கொங்கு வேளாளர் கடசி யிலிருந்து, மண்பாண்ட கலைஞ்ர்கள் வரை ஸ்டாலினுக்கும் , கலைஞருக்கும் துண்டு போட்டு ஆதரவு கூறியதை நாம் பட காடசியாகப்பார்த்தோம். பிராமண ரல்லாதோரின் ஒன்றுபட்ட தன்மையை அழித்தவர்கள் இவர்கள்.

பெரியார் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லைபிராமணரல்லாதோருக்கு கிடைத்த பங்கில் நூறில்  ஓருபங்கு  தலித்துகளுக்கு போகவில்லையே " ஏன் ?

இன்று "போலி பெரியாரிஸ்டுகளின் " பேய் நடனம் தாங்கமுடியவில்லை. எல்லா  இயக்கங்களிலும் முற்போக்கு ,பிற்போக்கு, வலதுசாரி,இடது சாரி என்று ஊடுருவி குழப்பி  வருகிறார்கள்.இவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் "பார்ப்பன ஆதிக்கம் " என்கிறார்கள்.

கவர்னர்கள் எத்தனைபேர் பார்ப்பனர்கள்,? நீதிபதிகள் எத்தனை பேர் பார்ப்பனர்கள்? துறை வாரியாக மத்திய மாநிலரசுபதவிகளில் உயரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் ?என்று கணக்கு கேட்கிறார்கள். 

தமிழக அரசு ஊழியதில்    40000 காலி இடங்கள் உள்ளன, நியமனம் செய்ய அரசுமறுக்கிறது. கருப்பையா என்ற ஊழியர் வழக்கு  போட்டார் தலித்துகளுக்கு பதவி உயர்வு கொடுக்க கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பை அரசு காட்டு கிறது. நியமனம் வேறு. பதவி உயர்வு வேறு. இதில் 24000 இடங்களில் தலித்துகளுக்கானது. அதனை போடுங்கள் என்று நிதி மன்றம்  திர்பளித்தது . அரசு இதுவரை போடவில்லை. 

தலித் தலைவர்கள் வாய் முடி மவுனம் சாதிக்கிறார்கள். ஓட்டப்பிடாரம்  தொகுதியில் நான் எம்.எல்ஏ ஆனால் தலித்துகள் சுகவாழ்வு  காண்பார்கள் என்கிறார் தலைவர். காலையிலும்  மாலையிலும் சான் தொலைக்காகாட்ச்சியில் நான் வந்தால் பொதும்  என்கிறார் இளம் தலித் தலைவர்.

பாவம் ! தோல் திருமாவளவன் தனிக்கட்டையாக போராடி வருகிறார் .முடியவில்லை .

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நணபர்கள் சிலரை தொடர்பு கொண்டேன்.

தலித்துகளுக்காக அவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக வகுப்புகளை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.கள் "நாங்களும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகிறோம்.75 பேர் வருவார்கள். அடிதடி,கொலை  என்றால் 120 பேர் வருவார்கள். 90சதம்  பேர் தலித்தல்லாதவர்கள்  .தலித் கள்  நம்மை நம்ப மறுக்கிறார்களோ என்று தோன்றிகிறது. உங்களுக்கென்ன ! ஆர்ப்பாட்டம் முடிந்து நாங்கள் எங்கள்கிராமத்திற்கு செல்லவேண்டும்.அங்கு தமிழக "ஜாட் "களும் ,பிள்ளை,முதலி என்று ஆதிக்க சாதிகளின் தயவில்லாமல் நாங்கள் வாழ முடியாது "என்கிறார்கள்.   

 சமூக நீதி என்பதை social engineering என்கிறர்கள்.

உள்ளே புகுந்து படிக்கும் பொது ஆசசரியங்கள்  தான்  மிஞ்சுகின்றன !!! 





Sunday, October 09, 2016





மீண்டும் தஞ்சையில் ,

நாடக விழா .....!!!




"வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் தஞ்சையில் தென்மண்டல நாடக விழா நடத்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்  சங்கம்முடிவு செய்துள்ளது. அதற்கான 105 பேர்கொண்ட வரவேற்புக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது "என்று தலைவர் தமிழ்செல்வன் அறிவித்ததாக திண்டுக்கல் மணி இரவு 10மணிக்கு மேல்நேற்று பதிவிட்டிருந்தார்.

இனிக்கும்நினைவுகளோடு 40 ஆண்டுகளுக்குமுன்னால் இதே தஞ்சையில் 1977ம் ஆண்டு த.மு.ஏ.ச நடத்திய  நாடகவிழா  இரவு முழு வதும் கண்முன் விரிய மகிழ்ந்திருந்தேன்.

கோமல் சுவாமிநாதனின் மக்கள் தாரிணி அவர்கள் எங்களுக்கும்பங்கு உண்டா என்று விசாரித்ததும் தெரிந்தது.

அன்று எஸ்.வி .சகஸ்ரநாமம், கர்நாடக குழு  சமுதாயா வின் தலைவர் பிரசன்னா ,கேரளத்து பணிக்கர் ஆகியோர் வந்து சிறப்பு செய்தனர்.

தமிழகம் முழுவதிலிமிருந்து எழுத்தாளர்களும்.கலைஞர்களும் வந்திருந்தனர். சென்னைக்கலைக்குழு வாடகை வீ டு  எனவிதி நாடகம்  போட்டதாக நினைவு."இசை சிற்பம் " என்ற புதிய வடிவத்தை தந்தவர்கள் அவர்கள். அவர்களுடைய "ஏகலைவன் பெருவிரல் " மிக முக்கியமான ஒன்று.

தணிக்கை செல்வன்  "கம்சவதம் "என்ற நாடகத்தை தந்தார். புராணத்திலிருந்து ஒரு துளியை எடுத்துக்கொண்டு தற்கால அரசியலை விமரிசிக்கும் architypal  form  அது. 

பரம்பை செல்வன் , நடித்து இயக்கிய நாடகத்தில் ஜேம்சன்,கந்தர்வன் ஆகியோர் நடித்தனர்.40நிமிடங்கள் நடக்கும்நாடகம் வசனமே இல்லாமல்ல் முழுவதும் mime முறையிலரங்கேற்றப்பட்டது.விழாவில் பாராட்டப்பட்ட நாடகங்களில் இதுவுமொன்று.

"மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸ்'குழுவினர் ஜெயந்தனின் "நினைக்கப்படும் "என்ற   முழு நீள நாடகத்தை அரங்கேற்றினர். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர் ராஜ குண சேகர் இதில்  நடித்து இயக்கியிருந்தார். சிறப்பான வரவேற்பை பெற்ற நாடகம் இது.

கையூர் தியாகிகளின் போராட்டத்தை,கன்னட   எழுத்தாளர் நிரஞ்சனா "சிராஸ் ஸ்மரனே "  நாவலாக எழுதியிருந்தார் அதனை பி ஆர் பரமேஸ்வரன் அவர்கள் "நினைவுகள் அழிவதில்லை " என்ற ஒப்பற்ற நாவலாக மொழிபெயர்த்து இருந்தார்.வெல்லூரிலிருந்து  வந்த நாடகக் குழுவினர் இதனை நாடகமாக்கி அரங்கேற்றினர் .இதில் நடித்த இளம் வாலிபர்கள் பின்னாளில் பலம் பொருந்திய அரசு ஊழியர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்களாவர். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர்கள் ஜெகதீசனும், செல்வராஜும் இந்த குழுவின் பின் பலமாக நின்றனர். விழாவின்  சிறப்பான நாடகமாக இது பாராட்டுப்பெற்றது.

மாசுகோ ஆர்ட் தியேட்டரையும், மாற்ற நாட்டு நாடக மேடைகளைப்பற்றியும்  எஸ்.வி சகஸ்ரநாமம் தன பேசில் குறிப்பிட்டார்

அபத்த நாடகத்திலிருந்து நாடகங்களின் பல்வறு வடிவங்கள்பற்றி சமுதாயாவின் பிரசன்ன விளக்கினார்.

"திரவமாக     இருக்கும் வரைதான் கோழி முட்டை வடிவம் கொள்ளும். திடமாகி விட்டால் ஓட்டை உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளியே வந்து விடும் " என்று தர்க்கவியலோடு இணைத்து தொழார் கே.ரமணி "உள்ளடக்கம் தான் வடிவத்தை தீர்மானிக்கும் "என்று கருத்தரங்கில் பேசியது இன்றும்காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தென் மண்டல நாடக விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!. 



Friday, October 07, 2016








"சொல்லுங்கண்ணே 

சொல்லுங்க ".......!!!




அந்த பையன் மதுரை மாவட்டம்  கமபம்  நகரை சேர்ந்தவன் .பள்ளிப்பருவ காலத்திலேயே மாணவர் இயக்கம் னு அலைந்தவன். படிப்புமுடிந்ததம் ,கடசி கம்பு னு போக ஆரம்பமானான் .

நல்ல வசதியான குடும்பம். டீ எஸ்டேட் உண்டுதோட்டமதுரவு னு ஏகப்பட்ட வசதி.வீட்ல கட்டுப்பாடு அதிகமாசுசு .பையன் திமிறினான். வீடு கேக்கல .ஒருநா பையன் கம்பியை நீட்டிட்டான். தேட  ஆரம்பிசாங்க . 

இரெண்டாம்  உலகயுத்தம் நடந்து கிட்டு  இருக்கிற நேரம் . royal air force க்கு பிரிட்டிஷ் காரன் ஆள் செத்துக்கிட்டு இருந்தான். பங்களூருவுல இருந்தது முகாம்.பையன் அங்க போய் சேந்துட்டான்.

அப்பம் எல்லாம் ஒருமாதம் சொல்லி கொடுப்பாங்க .மாசக் கடைசில பரிதிசை வைப்பாங்க.பாசாகிட்ட இன்னு ஆறுமாத "கவாத்து "சொல்லி கொடுத்து "War " க்கு அனுப்புவாங்க . பரிட்சையில  பெயில் ஆயிட்டா அடுத்தமாதம் எழுதி பாஸாகலாம். பிரிட்டிஷ் காரனுக்கு ஆள் வேணுமில்லா !

நம்ம பையனும் பரிசசை  எழுதினான்  . பெயிலாகிட்டான்.திருப்பியும் எழுதினான திரும்பவும் பெயில் . ஆறுமாதமா பெயிலாகிட்டு இருக்கான்.பிரிட்டிஷ் அதிகாரி யோசிசான் . விசாரிக்கும் பொது  இவன் வேலை தெரிஞ்துசு . royal air force க்கு உள்ள கடசி கிளையை உருவாக்கிட்டு இருக்கான் னு .

ஒரே அமுக்கா அமுக்கிட்டான் .' "எப்பா ! நான் யுத்தம் பண்ண வரல ! கடசிய வளக்க வந்தேன்கான் " பையன் . வீட்டுக்கு தெரிஞ்சு எப்படியோ வெளில  வந்தான்.

மார்க்சிஸ்க்காட்ச்சியின்,செயற்குழு  உறுப்பினரும் , "தீக்கதிர் " தலைமை நிர்வாகியும், நாங்கள் "அத்தா " என்று அழைத்து காலடியில் அமர்ந்து பாடம் கற்ற அப்துல் வஹாப் அவர்கள் தான் அந்த பையன் .

95 வயதான "அத்தா' கம்பம் நகரில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். முப்பது வருடத்திற்கு முன்னாள் அவருடைய நேர்முக பேசசை வண்ணக்கதிரில் எழுதி இருந்தேன் . இப்ப எதுக்கு திருப்பி எழுதி வக்கிய ? கேக்கலாம்.  

தூத்துக்குடில புத்தகம் வாங்கப்போன இடத்துல "ராணுவ அதிகாரி ச.தமிழ் செல்வன் "னு நாறும்பூநாதன் எழுதி இருந்தார்  ல. தமிழ் செல்வன் ராணுவத்துல இருந்தாரு உண்மை.

டார்ஜிலிங் ல இருந்தாரு. சிக்கிம்ல இருந்தாரு இந்திய சின எல்லைல இருந்தாரு.பருப்பாரில  இருந்தாரு. நக்சிலபாரில இருந்தாரு .

அங்கெல்லாம் இருந்த பொது பெரிய தலவர்கள்  கூட பழகி  இருக்காரு. அவர்பெயர் ....ஆத்தாடி நான் சொல்ல மாட்டேன் ....அதெல்லாத்தையும் எழுத  சொல்லுங்க னு பின்னுட்டம்  போட்டிருந்தேன் மணியும் நாதனும்   அதுக்கு "like "  போட்டிருந்தாங்க .!

 உங்க "like " யாருக்கு வேணும் .!

எழுத சொல்லுங்க அண்ணே !

சொல்லுங்க !




 

Wednesday, October 05, 2016






ராஜாஜியும் ,பெரியாரும் ,

ஆழமான நட்பின் ,

சின்னங்கள் .....!!!



ராஜாஜி ஆத்திகர் .நம்பிக்கைக்கையாளர். பெரியார் நாத்திகர். நம்பிக்கையற்றவர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடியவர் ராஜாஜி. பிரிட்டிஷார் ஆளட்டும் என்றவர் பெரியார்.

இருவருமே சாதி சமய சழக்கை ஒதுக்கியவர்கள்.இருவரின் நட்பும் இதிகாசத்தன்மை வாய்ந்ததாகும். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை 

வயதின் காரணமாக இயலாமையின் காரணமாக பெரியார் சோர்வு ற்றிருந்தார். தான் கொண்ட கொள்கை தனக்கு பின்னும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான நிதி ஆதாரங்களை   உருவாக்கி வைத்திருந்தார். அவை  தனக்கு பின்பு தன இயக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு வாரிசு இல்லாததால் அவை அவருடைய சகோதரர்களுக்கு செல்லும்.இது தான் சட்டம். உறவினர்கள் இயக்கத்திற்கு போவதை விரும்பவில்லை . அன்றே அது கோடிக்கணக்கில் இருக்கும். யார்தான் விரும்புவார்கள்..?

பெரியார் சட்ட ஆலோசகர்களை கலந்து கொண்டார்.இதற்கான தீர்வாக அவர்கள் பெரியார் திருமணம் செய்து கொள்வது தான் ஒரே வழி என்று கூறினார். 70 வயது நெருங்கும் அவரை யார் திருமணம் செய்து கொள்வார்கள்.

நோய் நொடியில் அன்றாடம் சிரமப்படும் பெரியாரை கவனித்துக் கொள்ள மணியம்மை என்ற அம்மையார் இருந்தார்."இந்த திருமணம் என்பது சட்டத்திற்கான ஒன்றுதான்நான் அவரை தீர்மானம் செய்து கொள்கிறேன்,வழக்கம் போல்  அவருக்கான  பணிகளை செய்கிறேன்." என்று அவர் அறிவித்தார்.  அவருடைய ஆப்த நண்பர் ராஜாஜியையம் பெரியார் கலந்து  கொண்டார்.

இந்தியா  சுதந்திரம் அடைந்திருந்த நேரம். மவுண்ட்பாட்டன் பிரபு போய்விட்டார் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்தார். மிகவும்  உ யர்ந்த பதவி . அதன் மாண்பும், மரபுகளும் காக்கப்படவேண்டும்.தனிநபர் விருப்பு வெறுப்புக்கு உட்படாதநிலை எடுக்க வேண்டும் .

ராஜாஜி தன நண்பனுக்காக நின்றார். "நாயக்கர் அவர்களே ! இந்த திருமணம் வேண்டாம்.இது உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும்.உங்கள் இயக்கத்தையும் சிதறடித்து விடும் "என்று ஆலோசனை கூறி கடிதம் எழுதினார்  தன்   பதவியின்மாண்பை  கருதி கடிதத்தின் மேல் "confidential" என்று குறித்து அனுப்பினார் .

1949ம் ஆண்டு ஏப்ரல்மாதம் பெரியார்-மணியம்மை திருமணம் நடந்தது.

1950 ஆண்டு ஜனவரி 26 இந்தியா குடியரசாகி ராஜேந்திர பிரசாத் குடியரசுத்தலைவராகும் வரை ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தார்  

பெரியாரின் திருமணத்தை எதிர்த்தவர்கள் திமு.கவை  உருவாக்கினர். முன்னணி தலைவர்களில் சிலர் இந்த திருமணம் ராஜாஜி செய்த சதி என்று மனதார நம்பினார்கள்.சரமாரியாக ராஜாஜி விமரிசிக்கப்பட்டார். குல்லுக பட்டர், குலக்கல்வி நாயகன் , என்று வசை பாட தொடங்கினர் . 

இதில் ராஜாஜியின் ஆதரவாளர்கழும் கலந்து கொண்டனர்.பிராமண விசுவாசிகளான இவர்கள், "பெரியாரை ஏமாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த சாணக்கியன்.பெரியாரையும்.நாத்திக இயக்கத்தையும் சிதறடித்தவர் " என்று முட்டாள் தனமாக புகழ்ந்தனர் .

இந்த திருமணத்தை எதிர்த்தவர் ராஜாஜி என்பது பெரியாருக்கும் ராஜாஜிக்கும்மட்டுமே தெரியும். இருவரும் மாண்பினை காத்தனர்.  

ரேஷன் காலம் அது ராஜாஜி  மக்கள் படும் துயரம் தீர  இறைவன் புகழ்  பாடுவோம் என்கிறார் .

"பஜனை செய்வோம் கண்ணன் நாமம் ! -  பட்டினி கிடந்து 
பஜனை செய்வோம் கான்னன்நாமம் " 

என்று பராசக்தியில் கருணாநிதி வசனம் எழுதினார்.

மழை  இன்றி தவித்தபோது 

"வருணபகவானுக்கு கட்டுக்கட தனது அனுப்பி இருக்கிறோம் மகாராஜா "

என்று பராசக்தியின் சிவாஜியை பேசுசெய்தார்.

கருணாநிதி நமபிக்கையாளர் இல்லை. சாதி சழக்கை  விட்டொழித்தவர்தான்.  ஆனாலும் அவர் தன்    மகளை தன உறவினரான மருமகனுக்கு கட்டி கொடுத்தார்.

ராஜாஜி நம்பிக்கையாளர் . அவர் மகளை பஞ்ச்கசம் , உத்தரீயம் போட்டு  குடுமி வைத்த தர்ப்பை புல்லோடு வரும் பாப்பானுக்கு கொடுக்கவில்லை. பூணுல் போடாத பணியாவான காந்தியின்மகனுக்கு தான் கொடுத்தார்.

இந்த ஆத்திர முட்டல்கள் பெரியாரையும் சரி ராஜாஜியையும் சரி பாதிக்கவே இல்லை. 

இந்த ஒருவருக்குமட்டும்தெரிந்த ரகசியம் வேறு ஒருவருக்கும் தெரிந்திருந்தது . ராஜாஜியின் நண்பரான ரசிகமணி டி .கே சிதம்பர நாத முதலியார் தான் அது.ராஜாஜி அவரை "வாயை திறக்கக்கூடாது" என்று அடக்கி விட்டார். 

முதலியார் பெரியாரை சந்தித்தார். என் நண்பர் . "ரகசியம் என்று சொன்னதை நான் வெளிப்பிப்படுத்த மாட்டேன் " என்று கூறிவிட்டார்.

1973ம் ஆண்டு டிசம்பர் 26ம் திதி ராஜாஜி மறைந்தார் ! அவருடைய இறுதி நிழசசியில் அந்த 93 வயது பெரியார் என்ற கிழட்டுசிங்கம்  அடக்கமுடியாமளவிம்மி விம்மி அழுததை  பார்த்தவர்கள் வியந்தனர்.

அது அழுகை அல்ல !

நட்பின் ஆழம் !!!




Monday, October 03, 2016







(விமரிசனமல்ல )







                                    "பிங்க் "

                                                ( இந்தி திரைப்படம் )





மினல் மற்றும் அவளது தோழிகள் நீதிமன்ற கூண்டில் நிற்கிறார்கள். கொலை முயற்சி,விபசாரம் என்று கடுமையான குற்ற சாட்டுகளுடன்  அவற்றிற்கு உடந்தை என்று வழக்கு . இவர்களுக்காக வக்கீல்  தீபக் சககல்  ஆஜராகிறார்.

மன்றத்தில் பொது மக்களும் அமர்ந்திருக்கிறார்கள். வக்கீல் சககல் வாதாட ஆரம்பிக்கிறார். கூண்டில் நிற்கும் மினல் பதில் சொல்ல   தயாராகிறார்.

"மினல் நீங்கள் கன்னிதானா ?"

மினல்  தயங்குகிறாள். நீதிபதி "இது என்ன கேள்வி தீபக் ?" என்று கோபமாகக்கேட்கிறார்.

"மினல்  என்கேள்விக்கு பதில் சொல்லுங்கள் " 

தயங்கியபடியே மினல்  "இல்லை "என்கிறாள்.

"எப்போது உங்கள்கன்னித்தன்மையை இழந்திர்கள் ?"

"பத்தொன்பது வயதில்."

"after becoming major note this your honour "

"யார் அந்த பையன் ?"

"உறவுக்காரன் "

"பணம் கொடுத்தானா ?"

"நாங்கள் விரும்பியே ஈடுபட்டோம் "

"அதன் பிறகு இப்படி நடந்தது உண்டா?"

"வெவ்வேறு  நண்பர்களோடு இரண்டுதடவை "

"பணம் வாங்கினாயா?"

"என்விருப்பத்தின் பேரில் நடந்தது. வாங்கவில்லை "

"மூன்று முறை நடந்துள்ளது .நான்காவதாக "சிங் " கூப்பிட்டபோது ஏன் போகவில்லை ?"

"விருப்பமில்லை "

"அவனிடம் என்ன சொன்னாய் " 

"No "

"அவன்  என்ன செய்தான் ?"

"என்னை தொட்டான் "

"your honour ! வேசியானாலும், தோழியானாலும்,காதலி ஆனாலும்.ஏன் மனைவி ஆனாலும்  no என்றால் no  தான் "


படத்தின் பெரும்பாண்மை காட்ச்சிகள் நீதி மண்றத்தில்நடக்கிறது. வக்கீலாக அமிதாப்  அவருடைய அந்த baritone அடிக்குரலில் பேசுவது பார்த்து அனுபவிக்க வேண்டியதாகும்.

இளைஞர்கள் ,மாதர் அமைப்புகள், வாலிபர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். படம் இந்தியில் இருக்கிறதே !

பரவாயில்லை !

பார்த்துவிடுங்கள் !! 


Friday, September 30, 2016









"கார்கில் " போரும் ,

போர்  நிறுத்தமும் ...!!!





பிரதமர் வாஜ்பாய் .  பாதுகாப்பு அமைசர் பெர்னாண்டஸ்.  ஆடு மேய்க்கும் சிறுவன் கார்கில் குன்றுகளின்  மேலே பாகிஸ்தான் ஆட்கள்   நடமாட்டமோருப்பதாக சொன்னான்.

ஜம்முவில் இருந்து காஷ்மீர்,லெபோன்ற பகுதிகளுக்கு செல்லும்சாலை அந்த குன்றுகளேஅருகே இருந்தன.ராணுவத்திற்கு செல்லும் "தளவாடங்கள் "செல்வது தடைபடும்.

தீவிரவாதிகளிடமிருந்து அந்த குன்றுகளை  பிடிக்க ராணுவம் விரும்பியது .மிகப்பெரிய மோதலுக்கு பிறகு அது நிறைவேறியது.அதே சமயம்மிக அதிகமான உயிர் சேதம் இந்திய ராணுவத்திற்கு  ஏற்பட்டது.

இதே நிலைமை மீண்டும் உருவாகாமல் இருக்க ராணுவம் திட்டம் தீட்டியது .அதன்படி குன்றின் மறுபக்கம் இறங்கி   அங்குள்ள தீவிர வாதிகளின் முகாம் களை  அழிக்க வேண்டும். அங்கு இந்திய ராணுவ நிலைகளை வைக்க வேண்டும். இது ஊடுருவலை தடுக்கும். காஷ்மீரும் நிம்மதியாக மூசசு விடும் . இத்திட்டம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ள அனுமதி வேண்டி அனுப்பட்டது.  

பாகிஸ்தான் இதனை மோப்பம்பிடித்துவிட்டது.இதனை தடுக்க வேண்டும். அவர்களால் முடியாது>காரணம்  இந்திய  ராணுவத்தின் பெரும்பகுதி இங்கே  நிலை கொண்டுள்ளது.அவர்களை  பாக்கிஸ்த்தானால் எதுவும் செய்யமுடியாது . 

வடக்கே இருந்து இந்திய ராணுவத்தை திசை திருப்ப வேண்டும்.தெற்கே  ராஜஸ்தான் பகுதியில் ஒரு போர் முனையையை உருவாக்கினால் வடக்கிலிருந்து படைகள் தெற்கே அனுப்பப்படும்.இது  அழுத்தத்தை குறைக்கும்  என்று பாகிஸ்தான் கருதியது.ராஜஸ்தான் எல்லையில் உள்ள பிகானீர் தேர்ந்த்டுக்கப்பட்டது. எந்த ராணுவ நடவடிக்கை யானாலும் முதல் தாக்குதல் கேந்திரமான தொழிற்சாலைகள் தானே இருக்கும்.பிகானீரிலிருக்கும் 15000கோடி முதலீட்டிலிருக்கும் அம்பானியின் எண்ணை சுத்திகரிப்பு ஆலைமுக்கியமானதொன்றாகியது.அம்பானிக்கு  தகவல் போனபோது ஆலையா ,போர் நிறுத்த ஓப்பந்தமா என்ற கேள்வி எழுந்தது.

அம்பானி வாஜ்பாயை சந்தித்தார்.வாஜ்பாயாய் பிரிஜேஷ் மிஸ்ராவை சந்தித்தார். அம்பானியின் தனி விமானத்திலன்று இரவு பிரிஜேஷ் மிஸ்ரா  ராவல்பிண்டி சென்றார்.போர் நிறுத்த ஓப்பந்தம் கையெழுத்தானது.

வாஜ்பாய் அரசு ஆண்டு தோறும் "கார்கில் " வெற்றியை கொண்டாட முடிவு செய்தது. 


Thursday, September 29, 2016






"surgical strike "






இந்திய ராணுவம் தீவிர வாதிகளின் முகாமுக்குள் புகுந்து அழித்தது . இது முற்றிலும் உண்மை.

இந்திய ராணுவம் எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று பாகிஸ்தான் கூறி  உள்ளது .இதுவும் உண்மை . 

காஷ்மீரில் ஒவ்வொரு ஐந்து ஆண்டும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் கமிஷன் மொத்தமுள்ள  124 தொகுதிகளுக்கும் அறிவிக்கும். தேர்தல் 100 தொகுதிக்கு மட்டுமே நடக்கும். மிசமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் 24 தொகுதிகளில் தேர்தல்நடத்தமுடியவில்லை என்று தேர்தல் கமிஷன் "பைலை" மூடிவிடும்.70 ஆண்டுகளாக இது  தான் நடக்கிறது.

பஞ்சாபிலிருந்து கராசி  போனால் சர்வதேச எல்லையை கடக்கவேண்டும். ராஜஸ்தானிலிருந்து சிந்துமாகாணம் போக சர்வதேச  எல்லையை கடக்க வேண்டும். காஷ்மீரின் குப்வாராவிலிருந்து கட்டுப்பாட்டு எல்லையை  தாண்டினாலே  ஆஜாத் காஷ்மீர் வந்து விடும் .இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கும் புகவில்லை  என்பதும் உண்மை .ஏனென்றால்   ஆஜாத் காஷ்மீரும் இந்திய பகுதிதான்.அது தாவாவில் இருக்கிறது.

பாகிஸ்தான் தலைமையும்-இந்திய தலைமையும் ஆட்டும் ஆட்டம்  தான் இது. குமரியில்,கோவை யிலும்,திருப்பூரில் நாலு விடலைகள் "பாரத் மாதா கி ஜெ' என்று கோஷம்போடமாட்டுமே  உதவும்.

அப்படியானால் காங்கிரஸ் கடசி ஏன் இதனை செய்யவில்லை ?

2007ம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டுவரை இரண்டு முறை இந்திய ராணுவம் "surgical  strike  நடத்தி இருக்கிறது . முந்தாநாள் இரவு முழுவதும் மோடி தண்ணீர்குடிக்காமல்  நல்ல செய்திக்காக முழித்திருந்ததாக ஒரு தொலைக்காட்ச்சி புலம்புகிறது. ஆனால் மன்மோகன் சிங் நன்றாக தூங்கினார். இது சாதாரணமாக நடப்பது என்பதால். அதே சமயம் 1971ம்ஆண்டுநடந்தவங்கதேசவிடுதலையை மறக்க முடியாது.

அமெரிக்க enterprice கப்பல் இந்துமகாசமுத்திரத்திற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நுழைந்த பொது, "வங்க விரிகுடாவுக்குள் நுழையாதே நுழைந்தால் உலக யுத்தம் தான் " என்று சோவியத் யூனியன் எசரித்தது  இந்திய ராணுவமும் வங்கதேசமக்களும் வீரம்செறிந்த விடுதலைப்போரை நடத்னதினர்அதற்கு மேற்கு வங்க மக்கள்  முழு ஆதரவையும் தந்தனர். 

அதன் பிறகு இந்திய நாடாளுமன்றம்  கூடியது. இந்திரா அம்மையார் நாடாளுமனறத்திற்குள் நுழைத்த பொது பிரும்மாண்டமான கரகோஷம் எழுந்ததுதலைவர்கள்பாராட்டினர்.அப்பொதுக்குட்டி தலைவராயிருந்த வாஜ்பாயாய் கூறினார்.

" கம்பிரமாக பிரதமர் வரும் பொது நான் இந்திரா அம்மையாரை பார்க்கவில்லை ! துர்கா தேவியை தரிசித்தேன். she Made history and also geography " என்றார். இந்திய துணைகாண்டத்தில் பூகோளத்தையே மாற்றினார்கள்.

சக்கரத்தின் "டயரில் " காற்றுபோய்க்கொண்டிருக்கிறது.

"பஞ்ச்சர் "பார்ப்பதால்பயனில்லை.

புதியதாக வாங்குவோம் !!!

Tuesday, September 27, 2016






" புளுகுணிகள் "





நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஐந்து மாடிகள் உள்ளன> அந்த மனிதர் ஐந்தாவதுமாடியில் இருந்தார்.  ஜிப்பா,பைஜாமாபோட்டிருப்பார். சிலசமயம் வடநாட்டு பஞ்ச்கசம் அணிந்திருப்பார். நெற்றியில் சந்தனகோடு நடுவில் குங்குமம்.சுத்தமான சுயம் சேவக். இவரைப் பொறுத்தவரை  தான் சுயம் சேவக் என்பதை காட்டிக்கொள்வதில் பிரியம் கொண்டவர்.

எங்கள்  யார்ட்டிவீ ட்டி லாவது  பூஜைமணி அடிக்கும்   சத்தம் கேட்டால் அந்த வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து விடுவார்அவருக்கு தெரிந்த பாடல்கள்,ஸ்லோகங்கள் என்று பாட ஆரம்பித்து விடுவார்.சில சமயம்பிரவசனங்கள்செய்ய ஆரம்பித்து விடுவார்.பாதி  தப்பாக இருக்கும். இங்கு விநாயக சதுர்த்தி, விஜய தசமி என்று கூட்டு வழிபாடு நடக்கும்.பந்தலில் அமர்ந்தால்  லேசில் எழந்திரிக்க மாட்டார்.   

நான் காலையில் "இந்து" பத்திரிக்கை படிப்பவன். ஹைதிராபாத் பதிப்பு. நேற்றைய பதிப்பு நாளை வரும். தலையங்கம், நடுப்பக்க  கட்டுரை, சிறப்பு கட்டுரை ஆகியவற்றுக்காக வாங்குவேன். சிலசமயம் வரவில்லை என்றால் கீழே சென்று செக்க்யுரிட்டியிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.

ஒருநாள் அப்படி வாங்கி வரும்போது இந்தமனிதர்  எதிர்ப்பட்டு விட்டார். "இந்து" பத்திரிகையா? என்று விசாரித்தார்.

"ஆம்" "

"நானும் வாங்க வேண்டும் "

"வாங்குங்களேன் "

"இந்து" தர்மம் பற்றியும் இந்து மதம் பற்றியும் நிறைய கட்டுரைகள் வரும் .அதனால்தான்"

இந்த கிறுக்கன் என்ன சொல்கிறான் என்று யோசித்தேன்..பத்திரிகையின் பெயர் " இந்து"ஆகவே அப்படித்தான் இருக்குமென்று நினைத்து விட்டான்.நின்றால்  ஆபத்து என்று கருதி லிப்டுக்குள் புகுந்து  விட்டேன்.

மதியம் தான் கட்டுரைகளை படிப்பது வழக்கம் . ஒருநாள்  அப்படி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தமனுஷன் எட்டி பார்த்தார் .  " வாருங்கள்"என்றேன்  அமர்ந்தார்.

"நான் சிறு வயதிலேயே "இந்து" ஆசிரியர் சொற்பொழிவை "ரஷிம்பாக்கில்" கேட்டிருக்கிறேன்.அருமையாக பேசுவார் : "

"யாரு ? அவர் N .ராம் .அவருக்கு வயது 60 அல்லது 61 தானே இருக்கும் !" 

ரஷீம் பாக் பாக் எனபது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் இருக்கும் இடத்திலுள்ள மைதானம்.

"ஆமாம் இல்ல ! அவருடைய தந்தை நாராயண் !'

"அவர் பெயர் நரசிம்மன்."

"ஆமாம் .அவர்தான்.  மைதானத்தில் பெரும் கூட்டம். அவர் அற்புதமாக பேசினார்.அருகில் அவர்மகன் சின்ன பையன் ராம் பூணுல் போட்டு நின்று கொண்டு சுலோகம் சொன்னான் " 

என்முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கஆரம்பித்து விட்டது. "இந்தாங்க ! போன் " என்று கூறி முத்து மினாடசி கை  பேசிய நீட்டினாள். எடுத்துக்கொண்டுவெளியேறினேன். போன் சத்தமேயில்லை ." அந்த ரூம்ல போய் இருங்க .இந்த ஆளு போனப்புரேம் வாருங்க " .என்று சமாளித்தார் .

மறை ந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் கூறுவார் ." ஒரு கூடை செங்கல்லும் "பிடாரி"னா என்ன செய்யமுடியும்டா சாமா ? "என்பார் 

"ஒரு அரசன்  இருந்தான். தனக்கே தனக்கு என்று அரண்மனை கட்டினான் .அவன் குடிபுகுமுன் அங்கு பேய் குடிபுகுந்து விட்டது. மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதியா அழைத்து  பேய் ஓட்ட ஏற்பாடு செய்தான்.மந்திரவாதி என்ன  செய்தும் பேயை ஓட்டமுடியவில்லை.

"மகாராஜா ! நீங்கள் அரண்மனை சுவருக்கு செங்கல் வாங்கினீர்கள் இல்லையா ? அவை அத்தனையிலும் பேய் புகுந்துவிட்டதுஇதனை ஓட்டமுடியாது " என்றான் மந்திர வாதி..

நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலம் போனார் "அங்கு உங்கள்நாட்டு இளவரசி ருக்மனியை எங்கள் கிருஷ்ணன் மணந்தான் " என்றார் நாகபுரியில் உள்ள 8ம் வகுப்பு சிறுவன் " விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி  அது நாகபுரியை சுற்றி உள்ள தேசம்."என்று பிரதமருக்கு பதிலளித்தான்.

பிரதமராகுமுன் மோடி திருசி  வந்தார்." வ.உ.சி தலைமையில்நடந்த உப்புசத்த்யாக்கிரகம் "என்று கூறி புதிய சரித்திரமெழுதினார் ..

கூடை செங்கல்லும் பிடாரி என்றால் என்ன செய்ய முடியும்.!!!

அறியாமை வேறு .!

புளுகுவது வேறு !!

இவர்கள் புளுகுணிகள்.!!!



 

 

   

     


Sunday, September 25, 2016






சமஸ்கிருதத்தை ,

பா.ஜ .க . வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது ...!!!---10.





இந்துத்வா காரர்கள் "சம்ஸ்கிருத பாரதி " என்ற அமைப்பின் மூலம் சம்ஸ்கிருத வளர்சசி என்று ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில மதுரை கிழக்கு  தொகுதியில் மட்டும்  நிறைய டியூஷன் வகுப்புகள்  இவர்களால்நடத்தப்பட்டான்.இந்துத்துவா அதிகாரத்திற்கு வந்ததும் தமிழகம்  பூராவும்இவை  நடந்து வருகின்றன.

இந்தமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது . மொத்தம் நான்கு தேர்வுகள்.நான்காவது தேர்வு முடிந்தவுடன்  சான்றிதழ் தருகிறார்கள்.

இந்த சான்றிதழை வைத்துக் கொண்டு பல்கலையில் சம்ஸ்கிருத பட்டப்படிப்பில் சேரலாம்.

சான்றிதழ் தேர்வு வீட்டிலிருந்தே எழுதலாம்.டெல்லியிலுள்ளதலமை அலுவலகத்திற்கு மனு செய்தால்  அவர்கள்  பாடங்களைஅனுப்புவார்கள்.

தேர்வுக்கு உண்டான கேள்வித்தாள்கள் உங்கள்வீட்டிற்கு அனுப்பப்படும். நீங்கள் உங்கள்வீட்டில் அமர்ந்து கொண்டு தேர்வு  எழுதலாம். உங்களை கண்காணிக்க உங்கள் மனசாட்ச்சி மட்டுமே.

இப்போது புதிதாக தமிழ் மக்களுக்கு ஒரு சலுகை அளித்திருக்கிறார்கள். இந்த சம்ஸ்கிருத தேர்வை சம்ஸ்கிருதத்தில் தான் எழுத  வேண்டும் என்பதில்லை . உங்கள் தாயமொழி தமிழிலேயே சம்ஸ்கிருத தேர்வு எழுதி வெற்றி பெறலாம்.   இப்படி இவர்கள் சம்ஸ்கிருதத்தை வளர்ப்பது என்பது "இந்துத்வாவை " கொண்டு செல்வது தவிர வேறொன்றுமில்லை .

இந்த போலிகளை எதிர்த்து நிழற்சண்டை போடுகிறார்கள்.  "இந்துத்வாவை " அதன் கோரமுகத்தை எதிர்ப்பதை விட்டு மொழியை , எதிர்க்கிறார்கள்.

நாம் என்ன செய்யப்போகிறோம் ???








சம்ஸ்கிருதத்தை ,

பா.ஜ .க. வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது ...!!!--- 9





"கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை !!" என்று தெருவெங்கும் கூவியவர்கள் அந்த இல்லாத கடவுளுக்கு அருளிய மொழிதான் சம்ஸ்கிருதம். அது  தேவ பாஷையாம்.

சாதீயை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் மொழிக்கே  சாதியை கொடுத்தார்கள்.சம்ஸ்கிருதம் பிராமனபாஷை என்கிறார்கள்.

மதமாற்றத்திற்காக திருசபையினர் கூறிய பொய்யை ஏற்றுக்கொண்டவர்கள்   இவர்கள்.  இந்த" பகுத்தறிவாளர்க"ளுக்கு  இது தெரியும் .இருந்தும் தங்கள் அரசியல் லாபத்திற்காக  அதனை பயன்படுத்திக் கொண்டார்கள். 

கேரளத்தில் உள்ள ஆதிசங்கரர் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கம்நடந்தது.அந்த கேரளத்து "புத்திராட்சஸன் " மறைந்த இ.எம்.எஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். "The  relevence of Adhi Sankara " என்பது தலைப்பு.

( 2010 ஆண்டு social scientist இதழில் முழு  பேசசும் வந்திருக்கிறது)

மன்னன் மூன்று மணிநேரம் பேசினார்   வேதத்திலிருந்தும் , உபநிஷத்திலிருந்தும் ,.ஸ்மிருதியிலிருந்தும் மேற்கோள்களை காட்டி மழையாக பொழிந்தார். பார்வை யாளர்கள் மெய்ம்மறந்து பிரமித்திருந்தனர்.

கூட்டம்முடிந்து அவர் மேடையிலிருந்து இறங்கும் பொது பார்வையாளர் ஒருவர் அவரை நெருங்கி " வேதம், உபநிஷத் ,என்று படித்த நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட்  ஆனிர்கள் ? "என்று கேட்டார்.மிகவும் நிதானமாக " "படித்ததால் தான் " என்றார்இ.எம்.எம். எஸ். 

ஆதி சங்கர சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பஞ்ச்கசம் , அங்கவஸ்திரம் அணிந்து கையில் தர்ப்பைப்புல் கொண்டு திதி சொல்ல   போகும் பாப்பான் அல்ல. ஜவகர் பல்கலையிலும், வெளிநாட்டு பல்கலையிலும் வரலாற்று பேராசிரியராக இருந்த கே.என். பணிக்கர்.  

சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு உரியது என்பது  பொய் . ஆப்பிரிக்க அரேபிய இந்தோஅய்ரோப்பிய மொழிகளைகலந்து கட்டி கொசைமொழியில்பேசிக்கொண்டிருந்ததை சீராக்கி செம்மைப்படுத்தி சம்ஸ்கிருதத்தை உருவாக்கினான் பாணினி என்பவன். பாகிஸ்தானில் உள்ள தக்க சீலம் பலகலை அருகில் உள்ள கிராமத்து காரன்அவன் . பிராம்மண மத்தை சேர்ந்தவனா என்பது கூட சந்தேகமாகவுள்ளது என்கிறார்கள் வரலாற்றாளர்கள்.கிட்டத்தட்ட இதேகாலத்தில் தான் தமிழு க்கு வரிவடிவமும், இலக்கணம் மம் கொடுத்தார் தொல்காப்பியர்.என்ற சமணர்(கி மு 3--5  ம்நூற்றாண்டு)  தமிழையும்,சமஸ்கிருதத்தையும் கொடுத்தவர்கள் பிராமணர்கள் இல்லை .

நான் முழுமையாக சம்ஸ்கிருதம் படித்தவன் இல்லை.எல்.ஐ.சி யில் பணியில் செந்தபிறகுஅந்தமொழியின் நுணுக்கங்களையும், செவ்வியல்  தன்மையையும் நண்பர் மூலம் கற்றுக்கொண்டேன் .அதனை கற்றுத்தந்தவர் பெயர் வீர கணபதி. அவர் பிராமண ர் அல்ல.  மதுரையில் உள்ள கல்லூரியில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருப்பவர்  பிராமணர் அல்ல.

சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் போலியான கருத்துக்களோடு அதனை வளர்ப்பதாகாச சொல்லும் இந்துத்வா வாதிகளின் அழிசசாட்டியமும் சேர்ந்து  நிற்கிறது.மொழித்திணிப்பு எதிர்க்கப்பட வேண்டியது தான்.

இந்தி திணிப்பை நாம் எதிர்த்தோம். அதே சமயம் "என் பேரனுக்கு சரளமாக ஆங்கிலம்,தமிழ் மட்டுமல்லாமல் "இந்தியும் " பேச முடியும் .அவனுக்கு அதனால் அமைசர் பதவி வேண்டும் "என்ற தாத்தாவை பார்த்தவர்கள்நாம் . 

"குறளோவியம் " என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் மொழி பெயர்க்க பட்டதாக தளம் என்ற பத்திரிகையில் படித்தேன். தனித்தமிழ் இயக்க தலைவர் ஒருவரின் உறவினரான கண்ணன் என்பவர் அதன்முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ..  

( தொடரும்)

  


Saturday, September 24, 2016







சமஸ்கிருதத்தை ,

பா.ஜ .க  வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது ....!!!---8




dr .முரளி மனோகர் ஜோஷி அவர்களுக்கு அறிவியலை வீட இந்துத்வா முக்கியமாக பட்டுவிட்டது.

இது தான் அவர்களின் மன நிலை.(MINDSET ). வெள்ளாவி வைத்தாலும் போகாத அழுக்கு ! என்ன செய்ய முடியும். புது டெல்லி அருகில் உள்ள ஜான்டேன்வால் என்ற இடம் தான் அவர்களுடைய தலைமையகம்.அங்குதான் அவர்களுடைய அத்துணை அமைப்புகளின் அலுவலகம் உள்ளது.அதிலொன்றுதான் சம்ஸ்கிருத பாரதி. சம்ஸ்கிருத மொழியை பரப்ப  உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.இந்தியா புறாவும் இதற்கு கிளை உள்ளது. செம்மொழி துறை மூலம் இதற்கு நிதி கிடைக்கிறது.

 வளர்ந்த மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். அதன் உயிர் நாடியான அறிவியலை அதன் அருகில்கூட வரவிடாமல் இவர்கள் வளர்க்கபோகிறார்கள்என்பதிலிருந்தே   புரிந்துகொள்ளலாம்.மகாராஷ்டிராவில் அம்பெத்கார்  மூலம் லட்க்கணக்கானவர்  பௌத்தமதத்தை தழுவினர்.இவர்கள பாலி ,மொழியையும் சமஸ்கிரதத்தையும் படித்து தேர்ந்தவர்கள். பலர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். உரைநடையில் அந்த மொழியில் பல பரிசோதனைகளை செய்து வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் சம்ஸ்கிருத பல்கலைக்கழகமும் மற்ற அமைப்புகளும் இந்துத்வா காரர்கள் வசம் உள்ளது.

அந்த பேராசிரியர்களோடு ஊடாடிய பொது மொழி உருப்படும் வாய்ப்பு இல்லை என்றே தொண்றுகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

எழுத்தாளரும் ,மொழிபெயர்ப்பாளருமான முத்து மீனாட்ச்சி அவர்கள் சம்ஸ்கிருதத்தில் மேடையில் பேசும் அளவுக்கு புலமை பெற்றவர். உரைநடையில்  "செம்மலர் "  பத்திரிகையில் வந்த முற்போக்கு கதைகளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்;அதனை பெங்களூருவிலிடுந்து வரும் "சம்பாஷணை சந்தேஷ் " என்ற சம்ஸ்கிருத பத்திரிகைக்கு அனுப்பினார். மிகவும் பாராட்டிய அவர்கள் பத்து கதை வாக்கில் பிரசுரித்தனர் .

இந்த கதைகளை தொகுப்பாக கொண்டுவர முனைந்த பொது, பல்கலைக்கழக  பேராசிரிய பெருந்தகைகளை  நாடினோம். சிலகதை களை  பிரசுரிக்க அவர்கள் மறுத்தார்கள்.

"சிறுவயதில் கர்ணனைப்பற்றி கேள்விப்பட்ட திரௌபதி சுயம்வர த்தில் கர்ணணன்  வெற்றி பெறுவதை விரும்புகிறாள். பின்னாளில் சொர்க்கவாசலில் காவலாளியிடம் இதனை சொன்ன திரௌபதியை  அவன் சொர்க்கத்தின் கதவுகளை மூடிவிட்டு அவளை நரகத்திற்கு தள்ளுகிறான். செம்மலரில் வந்து பரவலாக பேசப்பட்டகதை  இது.

அதே போல் 12 வயதே ஆன குந்தி முனிவருக்கு பணிவிடை செய்யப்போனவள் அவரால் கர்ப்பிணியான கதை . இதுசம்ஸ்கிருத பத்திரிகையிலும், வண்ணக்கதிரிலும் வந்தது இத்தனையும் எடுத்துவிட வேண்டும் என்றார்கள .  அதன் பிறகும் வெளியிட எந்த பதிப்பகமும் தயாராக இல்லை. 

இது பற்றி ஆந்த்ரா தோழர் வி.சந்திர  சேகர் அவர்களிடம் கலந்து கொண்டேன். மார்க்சிஸ்டுகடசியின் தினசரியான  "பிரஜாசக்தி "பத்திரிகையின் திருப்பதி பதிப்பின் நிர்வாகியாக உள்ளவர் அவர்.  நகலை வாங்கி பிரஜாசக்தி பதிப்பகத்தின்முலம் தொகுப்பை வெளியிட்டு உதவினார்.

இந்துத்வா வாதிகள் சம்ஸ்கிருதத்தின அருகில்  எவரும் குறிப்பாக முற்போக்காளர்கள்வருவதை விரும்புவதில்லை.மொழியில் அறிவார்ந்த விஷயங்கள் வருவதையும் அவர்கள் விரும்புவதில்லை . மொழி மக்களை நெருங்கவிடுவதில்லை.   

தமிழகத்தில் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் செய்யும் தவறுகளில் முக்கியமானது ....

(தொடரும் )