Friday, December 28, 2018
Monday, December 24, 2018
"முதலாளிகளிடமிருந்து ,
முதலாளித்துவத்தை ,
காப்பாற்றுவோம் "!!!
நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டபோது தொழிற்புரட்ச்சி ஏற்பட்டதாக கூறுவார்கள். அதன் அடி வயிற்றிலை பிறந்தது தான் முதலாளித்துவம் .
மனிதகுலவரலாற்றில் இதற்கு முன் கண்டிராத வளர்ச்சியும் ,கண்டுபிடிப்புகளும்,சுபிட்சமும் கிடைத்ததும் இந்தகாலகட்டத்தில்தான். உணவு,இருப்பிடம், உடை ,மருத்துவம்,கல்வி என்று பரந்துபட்ட மக்கள் தொகுதிக்கு , கிடைத்ததும் இதே காலத்தில் தான்.
Adam Smith போன்ற பெரியவர்கள் இந்த வாழ்க்கைமுறையை முதலாளித்துவ முறையை போற்றிப்புகழ்ந்ததும் இதனால தான். இந்தவாழ்க்கை முறையின் அடிவயிற்றில் பிறந்தது தான் ஏகாதிபத்தியம். முதலாளித்துவத்தின் உச்சகட்டம் தான் ஏகாதிபத்தியம் .
இதன் மற்றோரு பகுதி தான் காட்டு மிருகங்களைப்போன்ற அடாவடித்தனம் . ஒருபக்கம் செல்வ செழிப்பும் மற்றோருபக்கம் தாங்கமுடியாத வறுமையும் இணைந்தே சகவாழ்வு வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.
இந்தமிருகத்தனத்தை கட்டுக்குள் கொன்டுவர உருவானது தான் நுறு ஆண்டுகளுக்கு முன் உருவான சோவியத் புரட்ச்சி. முதலாளித்துவம் என்ற மிருகத்தை கம்பி போட்ட கூண்டுக்குள் அடைத்து வைத்தது தான் அந்த புரட்ச்சியின் அடிநாதம் .என்ன செய்ய ?
சோவியத் யூனியனின் வீழ்ச்சி இந்த மிருகம் கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வர உதவியது.தாராளமயம்,தனியார்மயம்,உலகமயம் என்று கோஷம் எழுப்பிக்கொண்டு "எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் " என்று கண்டதை தின்று இன்று அஜீரணக்கோளாறினால் "பங்குசந்தையில் " மரண ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது .
கரிசல் காட்டு புதரில் சாராயம் காய்ச் சிக்கொண்டிருந்தவன் இன்றி ரியல் எஸ்டேட் முதலாளி.கிழக்கிந்திய கம்பெனிக்காக கஞ்சா விற்றவன் Multy National Corporate முதலாளி.
சிக்குபிடித்த முதலாளித்துவத்தின் மரணத்தை தவிர்க்க அதன் விசுவாசிகள் முயற்சிக்கிறார்கள். டாகடர் ரகுராம் ராஜன் "Save Capitalism from Capitalist "என்று அலறுகிறார் . உஜ் வல் படேல் ராஜினாமா செய்கிறார் .
வடக்கு ஐரோப்பிய நாடுகள் மக்களுக்கு உணவு ,உடை ,இருப்பிடம் கல்வி மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக அளித்துவருகின்றன. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள் .
மீதமுள்ள 600 கொடிமக்களின் பார்வை இவர்களைநோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
ஒரு பெறும் போர் வரவிருக்கிறது .!
இந்தியாவில் அதற்கான ஒத்திகை நாள் தான் 2019 மே மாதம் நடக்க விருக்கும் தேர்தல் . !!
Saturday, December 22, 2018
பா.ஜ.க ,
காங்கிரஸ் ,
தி.மு.க !!!
"ராகுல் காந்தி அவர்களே வருக !நல்லாட் சி தருக " என்று தி மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.அதுமட்டுமல்லாது 2004ம் ஆண்டு அவருடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி அவர்கள் "இந்திராவின் மருமகள் சோனியா காந்தி அவர்களே வருக " என்று அழைத்ததையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
தமிழக தொலைக்காட்ச்சிகள் இதையே பத்து நாட்களாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள். நல்ல காலம்! நடிகர்கள் குள்ளமணியும் ,தவக்களையும் இல்லை ! இருந்திரூந்தால் அவர்களின் கருத்துக்களையும் நமக்கு தந்திருப்பார்கள்.
2004 மாண்டு சோனியா பிரதமர் ஆவர் என்று கணித்தவர்கள் அதிர்சசி அடைந்தனர். இந்தியாவின் பிரதமராக யார் ஆகி வேண்டும் என்பது பற்றி அமெரிக்க பங்கு சந்தையின் வெளியீடான Wall Street Journal தலையங்கம் எழுதியது.
அதில் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர்களாக மூன்று பெயரை குறிப்பிட்டிருந்தார்கள்..மன்மோகன் சிங் , மண்டேக் சிங், சிதம்பரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை> காங்கிரஸ்கட்ச்சியில் உறுப்பினராக இல்லாத மன்மோகன் சிங் அவர்களை பிரதமராக்கினார்.சிதம்பரம் நிதி அமை ச்சர். பொருளாதார துறை யின் முக்கிய புள்ளியாக மாண்டேக் சிங் .
2014 ம் ஆண்டு மோடியையோ பிரதராக்கியது யார் ?
சந்திரபாபு நாயுடு காரு நாந்தான் என்று கூறலாம் .! அவர் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் .
கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை முடிவு செய்கிற விஷயமாகி விட்டது. மோடி அவர்களுக்கு பயன்படுவார் என்றால் அவர்தான் பிரதமர் .அவருக்கு அடுத்ததாக இந்திய அரசியலில் அவர்கள் கணக்கு போடுவது பழனியப்பன் சிதம்பரம் அவர்களை!
கடந்த நான்கு நாட்களாக தமிழக வலைத்தளங்களில் பழனியப்பன் சிதம்பரத்தின் கதை என்று ஒளிபரப்பாவதை கவனிக்க வேண்டும். அதில் முக்கியமாக சிதம்பரம் இளம் வயதில் மார்க்சிய நூல்களை கற்றார் . என்று விளக்குகிறார்கள் .என் ராம், மைதிலி சிவராமன் ஆகியவர்களோடு இணைந்து செயல்பட்டார்.என்று அவர்கள் படத்தையும்போட்டு ஒளிபரப்புகிறார்கள். இந்த காடசியின் பின்னணியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னம் பொரித்த கொடி அசைந்தாடுகிறது. இவர்களோடு சிதம்பரம் நடத்திய Radical Revciew பத்திரிகையும் காட்டப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரம் அவர்கள் பிரதமர் வேட்பாளர் ப ற்றி கட் சி எந்தமுடிவும் எடுக்கவில்லை என்றுகூறியுள்ளார் .
இதனை பா.ஜ கட்ச்சியும் உணர்ந்தே இருக்கிறது . சிதம்பரம்,கார்த்திக் சிதம்பரம்,நளினி சிதம்பரம் என்று அவர் குடும்பத்தையே நீதிமன்ற் வாசலில் மத்திய அரசு நிற்கவைப்பதை பார்க்கும் பொது நிலைமை தெளிவாகிறது .
அதேசமயம் இந்திய அரசியல் வானில் வலதுசாரிகள் கை ஓங்கி இருக்கிறது என்பதும் அவர்கள் தான் நிகழ்ச்ச்சி நிரலை நிர்ணயிக்கிறார்கள் எனதும் தெளிவாக புலப்படுகிறது.
Friday, December 21, 2018
சாமியே ...!
சரணம்.....!!
நாகபுரியிலிருந்து என் குடும்பத்தினர்கள் சபரிமலை புறப்பட எத்தனம் செய்தனர் .தகராறான இந்த நேரத்தில் போகவேண்டாம் என்று சொன்னலும்கேட்கும் ஜென்மங்கள் இல்லை. திட்டப்படி டிசம்பர் 14ம் தேதி பெங்களூர் விமானப்பயணம். அங்கிருந்து கோட்டயம்.ரயில்.
என் மகன் கேரள முதலமைசார் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிலைமை பற்றி விசாரித்தான். அதிகாரி விபரங்களை சொன்னார் .
கோட்டயத்திலிருந்து வாகனம் மூலம் நிலைக்கல் வரை போகலாம் .அதன் பிறகு தனியார் வாகனத்திற்கு அனுமதி இல்லை. நிலாக்கல்லி ருந்து அரசு போக்குவரத்து மட்டுமே என்று அதிகாரி விளக்கினார்.
சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அங்கேயே தங்குவார்கள். காலை 4மணிக்கு நெய் அபிஷேகம் பார்த்து விட்டு கீழே இறங்குவது வழக்கம். இந்தத்தடவை 144 தடை உத்திரவு போட்டு அங்கே யாரும் தங்கமுடியாது . என்று அரசு அறிவித்து விட்டது> ஆனால் இரவு 12மணிக்கு பஸ் ரெடியாக இருக்கும்மலை ஏறும்போது நான்கு மணி சரியாக இருக்கும் .சொகுசு பஸ் ,மற்றும் ஏசி பஸ்வசதி யை அரசு செய்திருக்கிறது.
கூட்டம் கட்டுபாட்டிலிருக்கிறது . அரசு பெருந்தில் அங்கங்கே கடுமையான செக்கிங் ! இன்ஸ்பெக்டரும், கண்டக்டர்களும் கேட்கும் கேள்விகள் மூலமும், பார்வைகள் மூலமும் போலி "ஐயப்பாமாரை " கீழே இறக்கி அனுப்பி விடுகிறார்கள் .
என் குடும்பத்தினர் 18ம் தேதி நாகபுரி திரும்பினார்கள்
எந்த ஆண்டும் இல்லாதவாரூ இந்த ஆண்டு மிகவும் சவுகரியமாக சென்றுவந்தோம். என்றான் என் மாப்பிளை.
"எல்லாம் அய்யப்பன் பாத்துப்பான் ! சாமிசரணம் !! என்று முடித்தான்.
"இல்லைடா பயித்தரா ! பினராயி சரணம் " என்று நான் சொல்லிக்கொண்டேன்.
Wednesday, December 12, 2018
அக்பர்,தேஜ் பால்
பத்திரிகை ஆசிரியர் சங்கத்திலிருந்து
வெளியெற்றப்பட்டனர்!
தன்னோடு பணியாற்றிய பெண்களீடம் தவறாக வாலாட்டிய குற்றசாட்டிற்காக பிரபல பத்திரிகை ஆசிரியர்களான M.J..அக்பர் , மற்றும் தருண் தெஜ்பால் ஆகிய இருவரும் பத்திரிகை ஆசிரியர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் .
அக்பர் பா.ஜ.க அமைசரவையில் இருந்தார்.. அமைசர் பதவியை அவ்ர் ராஜினாமா செய்ய வெண்டியதாயிற்று. அதெபோல தெகல்கா என்ற பத்திரியையில் தெஜ்பால் ஆசீயராக இருந்தார. அவரும் ராஜீனாமா செய்தார்.
இவர்கள் மீது பல பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டியதால் இருவரும் ஆசிரியர் சங்கத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
அக்பர் 2013 ஆண்டு வாக்கில் தன்னொடு பெண் பத்திரிகையாரை பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதே போல் தேஜ்பால் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது .
சமீபத்தில் "Me Too " என்ற இயக்கம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் பற்றி ய "சங்கதிகளை "
அம்பலமாக்கி வருகிற.து. பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைர முத்து மிது குற்றம் சாட்டி இருந்தார்.
அதிலிருந்து அவ்ரை எந்த பொது நிகழ்சியிலும் அழைக்கப்படாமல் இருக்கிறார்.. இசை அமைப்பளர்களும் அவரை அழைக்க தயங்குவதாக சொல்லப்படுகிறது . .
Tuesday, December 11, 2018
RBI கவர்னருக்கும்
அரசுக்கும் என்ன
கருத்து வேறு பாடு ?
1984ம் ஆண்டு என்று நினைக்கிறென்.கென்னடி மறைந்த நேரம். என் மாமா பையன் அப்பொது டல்லாஸ் நகரத்தில் இருந்தான். Chester Bowles எழுதிய new dimention of peace என்ற புத்தகத்தை வாங்கி அனுப்பினன் .அதன் விலை 1 டாலர். அப்பொது டாலரின் இந்திய ரூ மதிப்பு 13 ரூ ஆகும்.
அதுவே என்னிடம் டாலராக இருந்தால் இன்ரு அதன் மதிப்பு கிட்டத்தட்ட 80 ரூ ஆகும் .
நான் 80 ரூ க்கு சொந்தக்காரன் என்று சொல்லமுடியாது. டாலரின் மதிப்பு வீழ்ந்து ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் என் இருப்பு டால்ரின் மதிப்பும் குறைந்து விடும் .
கடன் உடன் வாங்கி இந்தியாவிடம் 75000 கொடி டாலர் இருப்பதாக் சொல்கிறார்கள். இதன் இன்றய மதிப்பு கிட்டத்தட்ட 30லட்சம் கொடி.
ப.ஜ.க இது அதிகமான இருப்பு.இதிலிருந்து ஒரு பகுதியை அதனி,அம்பானி கடன்களுக்கு பதிலாக கஷ்டப்படும் வங்கிகளுக்கு கொடுக்கலாம் என்கிறது.
பொருளாதர நிபுண்ர்கள் இது தவறு. உன்மையான் மதிப்பு இதுவல்ல அதனல்கொடுக்கக்கூடாது என்று கூறுகிறாரகள்.
RBI யும் கூடாது என்கிறது.!
Saturday, December 08, 2018
பிடிவாதக்கார இயக்குனர்
லெனின் பாரதி ....!!!
அதிகாலை நேரம் .மழை கொட்டுகிறது. "ரங்கா ... ஏல ..ரங்கா ...எந்திரி " என்கிறார் அந்த அம்மையார் . ரங்கன் எழுந்து .மழை நீரில் வாய் கொப்பளித்து " ஆத்தா ! நாளை பத்திரம் பதிவு.சாக்கு போக்கு சொ ல்லாத. காலைல வந்திடு . நல்ல சேலைய உடுத்திகிட்டு வா ! "என்கிறான்.
இருட்டில் உருவங்கள் புலப்பட வார்த்தைகள் காதில் விழுகின்றன. "மேற்கு தொடர்சசி மலை" படம் ஆரம்பமாகிறது. 35 நிமிடம் படம் ஒட்டிய பிறகு கங்காணி "நாளை பத்திரம்ப்பதிவா " என்று கேட்கிறார் .
வெளிர் நீல சட்டை, கருநீல கால்சாராயில் ரங்கன் ஸ்டூலில் அமர்ந்திருக்க காற்றாலையின் ராட்சச சக்கரங்களின் பின்னணியில் ரங்கன் தூரத்து கழுகு பார்வையில் தெரிய " குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் நிலமற்றவர்களுக்கு காணிக்கை "என்று படம்முடிகிறது.
இந்த படத்தின் one line இது தான்.
ஏலத்தோட்டத்து சுமகாரர்களின் வாழ்க்கையை பார்வையிடும் சாட்ச்சிகளாக்கி நம்மை ஒன்ற செய்கிறார் இயக்குனர் லெனின் பாரதி .
சுமைக்காரர்கள் மலைமேல் ஏறுகிறார்கள். என்ன நுணுக்கமான ஒலி ப்பதிவு. அவர்களின் குரலோசை மூலம் அவர்களுக்கு இடையே உள்ள தூரத்தை பதிவு செய்கிறார்கள் .
தேனீ சுந்தர் மற்றுமொரு பிடிவாதக்காரர். படம் முழுக்க ஒரு குளோசப்.அல்லது டைட் இல்லை. அந்த வாழ்க்கையை வாழ அதனைப்பார்க்கும் சாட்ச்சிகளாக நாம் . மேற்குமலையின் முகடுகளில் நாம் ஏறி நிற்கிறோம்.அங்கு வீசும் காற்று ,குளிர், பட்சி களின் இரைசல் அத்தனையும் நமக்காக காத்திருக்கின்றன.
இரண்டுமணி நேரம் ஓடும் படத்தின் இசைக்கோர்வை 20 நிமிடம் கூ ட இருக்காது. இபடத்தின் இசை கோர்வையை மட்டும் கேட்டுக்கொன்டே தூங்குங்கள். இளையராஜா எந்த உயரத்தில் இருக்கிறார் என்பதை உணருவீர்கள்/அற்புதம்.
இந்த படத்தை விஜய் சேதுபதி என்ற முன்னணி நடிகர் தயாரித்துள்ளார்.அவரை நடிக்க வேண்டாம் என்று சொன்ன லெனின் பாரதி பிடிவாதத்தக்காரர்தான். ஆனால் அவரை வீட\ பிடிவாதக்காரர் என்று தன்னை நிரூபித்து விட்டார் சேதுபதி.
இத்தகைய பிடிவாதக்காரர்கள்
வாழ்க ! வளர்க !!
Sunday, December 02, 2018
இருந்த போதும் அள்ளி கொடுக்கும் !
இறந்த போதும் அள்ளி கொடுக்கும் !!!
2004 ம் ஆண்டு என் துணைவியார் பணி ஒய்வு பெற்றார். முதுமைக்காலத்தில் யாருக்கும் சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைப்பார் அவர் .திடீரென்று இறந்தால் மகன் ,மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைத்தார் .சனாதன குடும்பம் என்பதால் "சாங்கியங்கள் " எப்படியும் 50000 /- ஆகும். வருடாந்திர நினைவேந்தலுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஆகலாம் . இவற்றிற்காக 85000ரூ க்கு ஒரு பாலிசி எடுத்து அதன் பயன் மகனுக்கு என்று சொன்னார்> அதே போல் மகளுக்காக 50000 /- ரூபாய்க்கு ஒரு பாலிஸ் எடுத்தார் .
நான் 1996ல் ஒய்வு பெர்றேன்.3 லட்சம் ரூபாயை fd ஆக போட்டேன் .அது குஜராத்தில் செயல்படும் மருந்து காமப்பேணி. வட்டி அதிகம் தந்தார்கள் . மூன்று ஆண்டு க்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளலாம் .வட்டி ஒழுங்காக வந்தது .மூன்று ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க நேரம் வந்தது> அப்போது கம்பெனியிலிருந்து கடிதம் வந்தது .கம்பெனி சட்டப்படி கம்பெனி முதிர்வு பணத்தை ஆண்டுக்கு 20 சதம் விதம் ஐந்து ஆண்டுகளில்கொடுக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அறிவிப்பு வந்தது .வட்டியும் இல்லை என்று அறிவிப்பு வந்து விட்டது
என் துணைவியார் எடுத்த பாலிசி ANNUITY ! மாதம் 600 /- ஒரு பாலிசியில்,மற்றோன்றில் மாந்தம் 413 /- ர்பாயும் வந்து கொண்டிருக்கிறது . அதாவது மாதம் 1013 x 12 x 14 விதம் இதுவரை சுமார் 170000 /- வந்து விட்டது. என் துணைவியார் இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக நன் நினைக்கிறன்.
Ij anything untowerd haappens my son and daughter will get benifit of 85000 /- and 50000//-
என் துணைவியார் LIC ல் பாலிசி எடுத்துள்ளார்.
lic இருப்பு தொகை 30 லட்சம் கோடி என்கிறார்கள். இதனை அம்பானிக்கும்.,அதானிக்கும் கொடுக்க சதி நடப்பதாக சொல்கிறார்கள். lic பாலிசிதாரர்களிலிருந்து, chairman ,அதிகாரிகள் ,ஊழியர்கள், வளர்சசி அதிகாரிகள், முகவர்கள் மற்றும் மக்கள் இணைந்து போராடி தடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
இருந்தும் அள்ளி கொடுக்கும் ,இறந்தும் அள்ளி கொடுக்கும் lic ஐ காப்பாற்றுவோம்.!!!
Monday, November 12, 2018
"மா பூமி"யும்,
"கவுதம் கோஷு"ம் ...!!!
வங்கத்தில் 1950 ஆண்டு பிறந்தவர் கவுதம் கோஷ. குறும்படங்கள் தயாரித்துக்கொண்டிருந்த கவுதம் 1979ம் ஆண்டு முழுநீள கதை ப்படம் தயாரிக்க விரும்பினார்..
இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான பகுதியை இந்தியாமுழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்று விரும்பினார்.
இநதியா முழுவதும் சுற்றி வந்து தேடினார் விக் ட்டோரியா லைப்ரரியில் உள்ள ஆவணங்கள், கெஜேட்டுகள் என்று படித்து பார்த்தார்.
சாம்பரான் விவசாயிகள் போராட்டம், அவர் கவனத்தை கவர்ந்தாலும் முழு திருப்தி கிடைக்கவில்லை.
அப்போது தான் தெலுங்கானாவில் விவசாயிகள் நிஜாமை எதிர்த்து போராடினது பற்றி தெரியவந்தது .மீண்டு லைப்ரரியில் சரணடைந்தார். ஒரு கட்டத்தில் ஆந்திர மாநிலம் ஹைதிராபாத் சென்று தகவலை சேகரிக்க விரும்பினார். ஹதீராபாத்,கம்மம், நந்தியால்,வாரங்கல் என்று அலைந்தார் . ஹைதிராபாத்தில் Policeaction என்ற பெயரில் ஒரு போராட்டம் நடந்ததாக பலர் சொன்னார்கள் . ஆயுதம் தாங்கிய புரட்ச்சி நடந்த இடத்துலே அதற்கு அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் அமுக்கப்பட்டு இந்தவீரியமிக்க போராட்டத்தை ஆயுதப்புரட்ச்சியை முதலில் அந்த தெலுங்கு மொழிபேசும் மக்களுக்கு சொல்லி வீட முடிவு செய்தார் "மா பூமி " யை தெலுங்கில் உருவாக்க முடிவெடுத்தார்.
உண்மையான அந்த தளபதி பி.சுந்தரய்யா எழுதிய telungaanastrugle என்ற நூலை படித்தார். ராஜசேகர ரெட்டி எழுதிய நூலை யும் படித்தார்.படப்பிடிப்பை ஆரம்பித்தார்.
இந்த படத்தில் விவசாயிகள் ஜமீன்களையும்,ஜாகிரகளையும் விரட்டியடிப்பார்கள்.அவர்கள் ஜமீனை விட்டு ஹைதிராபாத்த்ல் தஞ்சமடைவார்கள்.பின்னாளில் கர்னல் சவுத்திரியின் தலைமையில் இந்திய ராணுவம் வந்து புரட்ச்சியை நசுக்கிய பின்னர் ஜமீன்தார்கள் காங்கிரஸ் கடசியில் சேர்ந்து ராணுவம் புடை சூழ கதரகுல்லா கதர் ஜிப்பாவோடு ஜமீனுக்குள்நுழைவார்கள் .இதற்காக பிலிம் டிவிஷனின் படசுருளை பயன்படுத்தி இருப்பார் .
தணிக்கையில் இதை அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்த்திர்கள் என்று கேட்ட பொது " படம் எடுக்கும் போதே நான் எதற்கு சமரசம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தடுத்தால்பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். மேலும் தணிக்கைக்குழுவின் intelectual level பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருந்தது. அவர்களின் அறிவு பற்றி நான் கொண்டிருந்த எண்ணம் சரியாகவே இருந்தது"என்றார் கவுதம்.
கவுதம் இந்தியில் எடுத்து சர்வதேச விருதுகளை வென்ற படம் "பார் " என்பதாகும் . பன்றி வளர்க்கும் சக்கிலிய தம்பதிகள் பற்றிய படம் .பன்றிகளை கங்கை ஆற்றை கடக்க படகில் ஏற்றமாட்டார்கள் . ஆற்று நீரில் நீந்த விட்டு மேய்த்துக் கொண்டு செல்லவேண்டும். மிகவும் ஆபத்தான பணி .சோத்துக்கு வழியில்லாத சகிலிய தம்பதி இந்த பணியை ஏற்றுக்கொண்டு செல்வார்கள் . நசுருதின் ஷாவும்,ஷபானா ஹஷ்மியும் நடிப்பார்கள்.சர்வதேச விருது சிறந்த நடிப்புக்காக பெற்ற படம் அது.
(பி.கு . தெலுங்கானா புரட்ச்சியை பின்புலமாக கொண்டு ஒரு நாவல் எழுத விரும்பினேன். அதற்காக குண்டூர்,விஜயவாடா, வாரங்கல் , நந்தியால் என்று அலைந்து தகவல் பெற்றேன். தோழர்கள் சுந்தரய்யா,சிந்து பூந்துறை அண்ணாசி ஆகியோரையும் கதையில்சேர்த்தேன். ஆனால் குறுநாவலாக தான் அவசரத்தில் எழுதினேன் . "கிருஷ்ண நதிக்கரையில் இருந்து " என்ற இந்த நாவலை ncbh பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை தெலுங்கிலும் இந்தியிலும் மொழிபெயர்க்க முயற்சி ஆரம்பமாகியுள்ளது.
மதிப்பிற்குரிய SAP அவர்கள் இந்த பின்புலத்தில் நாடகம் எழுதி அதனை மதுரை எம்.பி ராமசந்திரன் நாடகமாக போட்டார் . )
Saturday, November 10, 2018
"சர்கார் " திரைப்படத்தை
முன் நிறுத்தி ......!!!
அரசியல் படம் பற்றிய சர்சசையில் ஈடுபடுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.நான் அறிந்த அரசியல் படம் பற்றி சொல்வது தான் நோக்கம்.
அப்போதெல்லாம் சர்வதேச திரைப்பட விழாக்கள் டெல்லியில்நடக்கும்.பின்னர் மும்பை,கல்கத்தா,சென்னை என்று நடத்தினார்கள்.
பங்களூருவில்நடந்தது .பிரான்சு,பிரிட்டன்,அமெரிக்கா ,ரஷ்யா, என்று சர்வதேச படங்கள்வரிசையாக நின்றன. அந்த ஆண்டு மிகசிசிறந்த அரசியல் படம் தேர்ந்தெடுக்கப்பட இருந்தது.
இந்த போ \ட்டியில் மிகசிறந்த படமாகதெலுங்கில் வந்த படமான "மா பூமி " என்ற படம் தேர்ந்தெடுக்கப்பட்டது .
நிஜாம் ஆட் சியில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியில் ஈடுபட்டு ஜமீன்களையும் ஜாகீர் ர்களையும் விரட்டிவிட்டு அந்த நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளித்துவிடுகிறார்கள் . நிஜாமின் சௌதி அரேபிய கூலிப்படையை எதிர்த்து மூன்று ஆண்டுகள் ஆட்ச்சியை நடத்து கிறார்கள். இந்த போட்டாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் தான் சுந்தரய்யா, ராஜசேர்க்கர் என்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் .நிஜாம் தவித்து நின்றபோது நேருவும் ராஜாஜியும் சதி செய்து இந்திய ராணுவத்தை அனுப்புகிறார்கள். கர்னல் சௌத்திரியின் (பின்னாளில் ஜெனரல் ) தலைமையில் ஹைதிராபாத்திற்குள் நுழைந்த இந்திய ராணுவத்திடம் நிஜாம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். புரட்ச்சி நசுக்கப்பட்டு நிலம் மீண்டும் ஜமீன்களிடம் கொடுக்கப்படுகிறது.
"மா பூமி " (என் நிலம் ) என்ற இந்த படத்தை எடுத்தவர் கவுதம் கோஷ் என்ற வங்கத்தைஸ் சேர்ந்த இளைஞர்.
சிறந்த விமரிசகரான ஷிவ்குமார் இதனை DOCOFICTION என்று வகைப்படுத்தி பாராட்டசினார்.
விரட்டியஅடிக்கப்பட்ட ஜமீன் களும் ஜாக்கிரகளும் இந்திய ராணுவம் புடை சூழ மீண்டுவந்து நிலங்களை பெற்றுக்கொள்வார்கள் . இந்தியா பிலிம் டிவிஷனிலிருந்து வந்த படசுருளை கவுதம் கோஷ் இதில் பயன்படுத்தி இருப்பர் .
இது ஒரு சர்வதேச பிரச்சினை யாகிவிடாமல் தடுக்க இந்தியா இதனை இது ஒரு POLICEACTION என்று உலகிற்கு அறிவித்தது.
இன்றைய தெலுங்கானா மக்களுக்கு policeaction என்றுதான் தெரியும். அது ஒரு ஆயுதம் தாங்கிய புரட்ச்சி என்பது அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனப்பதற்காகத்தான் இந்தபடத்தை எடுத்தேன் என்கிறார் கவுதம் கோஷ் .
அரசியல் படத்திற்கும், போஸ்டர் படத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுய தருணம் வந்துவிட்டது.
Saturday, November 03, 2018
நான் என்ன
தப்பு செஞ்சென்
அண்ணே ?
- ராஜலட்சுமி .சிறுமி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவள் முச்சுக்குழல் அறுபட அவள் பேச்சு நின்றது. கழுத்தை அறுத்து வாகனத்தை நோக்கி சென்றிருக்கிறான் !
ஒருபய கேக்கல ! அரசு இருக்கிறது.! அதற்கு ஒரு அரசியல் தலைமை யிருக்கிறது!கேக்க நாதியில்லை !
20 மாவட்டத்துல தலித்துகள் கலக்டறா இருந்தா !
25 மாவட்டத்துல பட்டியல் இனத்தவர் dsp யா இருந்தா !!
50 தசில்தார் தாழ்த்தப்பட்டவர் இருந்தா !!
100பேர் ரெவின்யூ இன்ஸ்பெக்டரா இருந்தா !!
"--காளி " இப்படிநடந்திருக்குமா ?
empowerment ! அதிகாரத்தில் பங்கு !அதுதான் முக்கியம் !
அதற்கு என்ன வழி !
மாநில அரசு ஊழியர் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றே திரை வேண்டும்.
இதனை ,சிவப்பும் நீலமும் இணைந்து போராடி பெறவேண்டும் !
கருப்பு ?
வரும் ...ஆனா.. வராது !!!
Tuesday, October 30, 2018
கதை ,
கற்பனை ,
திருட்டு !!!
"சர்கார்" திரைப்படம் பற்றிய சர்ச்சை ! வருண் ராஜேந்திரன் தன்னை அங்கிகரிக்க வேண்டும் என்கிறார். முருகதாஸ் என் கதை என்கிறார். இருவரும் சமாதானமாகிவிட்டார்கள்.
நான் இந்த அசிங்கம் பற்றி எழுதப்பபோவதில்லை."கற்பனை என்பது இல்லை "(there is no fiction ) என்கிறார் கார்ல் மார்க்ஸ்.
இது அறிவியல்.
இல்லாததை கற்பனை செய்யமுடியாது. இந்த உலகம் நமக்கு வெளியே இருக்கிறது. இதை நாம் எப்படி அறிகிறோம்.நமக்கு அது எப்படிப்புலப்படுகிறது .
பார்க்கிறோம். கேட்கிறோம்.நுகர்கிறோம்.ருசிக்கிறோம். தொடுகிறோம். ஆகவே புலப்படுகிறது.
நமக்கு வெளியே இருப்பதை நாம் நம்புலன் களின் வழியாக உணர்கிறோம்.இந்த உணர்வின் முதிர்ச்சியில் அறிகிறோம்.
வெளியே இருப்பது உண்மை .அப்படி இருப்பதால் தான் நமக்கு புலப்படுகிறது .இல்லாதது புலப்படாது. புலப்படாததை கற்பனை செய்யமுடியாது.
இந்த கட்டுரையை படிப்பவர்கள் ஒரு பரிசோதனை செய்யலாம்.
ஐந்து வினாடிகள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து பாருங்கள். அது நீங்கள் இதுவரை பார்த்திராத ,நுகர்ந்திராத,கேட்டிராத,ருசித்திராத தொட்டிராத ஓன்றாக இருக்கவேண்டும்.
முடியுமா ?
முடியாது.
அதனால் தான் இல்லாத கடவுளுக்கு கூட இருக்கும் மனிதனின் கண்,மூக்கு,கை ,கால்,சிங்கம்,யானை என்று தெரிந்ததாய் உருவகப்படுத்துகிறோம்.
இல்லாத ஒன்றை கற்பனை செய்ய முடியாது.
கற்பனை என்பது இருந்த ஒன்று.
அப்படியானால் copy right எப்படி வந்தது?
நானும் நீங்களும் உணவு விடுதிக்கு போகிறோம்.உனவு அருந்திய பின் கடையில் வெற்றிலை போடுகிறோம். விடுதியின் பக்கத்தில் வீசி எறியப்பட்ட எச்சில் இலையில் மிதமிருப்பதை ஒருவன் எடுத்து உண்கிறான். அதனைப்பார்த்த நீங்கள் பரிதாபப்படுகிறீர்கள்.அது உங்கள் மன தை வாட்டுகிறது .அதனை ஒருகவிதையாக,கதையாக கட்டுரையாகஎழுதுகிறிர்கள். . நான் அதை பற்றி கவலையில்லாமல் கட்டமண்ணாக இருக்கிறேன். உங்களையும் என்னையும் வேறுபடுத்த எழுதிய உங்களுக்கு அந்த உரிமை கொடுக்கப்படுகிறது.
கலை இலக்கியம் கற்பனை என்று அந்த ஜெர்மனிய கிழவன் எழுதியதை படிக்கப்படிக்க பிரமிப்பாக இருக்கிறது
Saturday, October 13, 2018
பிரான்சு நாடும் ,
சுவிஸ் நாடும் !!!
பிரான்ஸ் நாடு தயாரிக்கும் போர்விமானம் ரஃபேல் என்பதாகும். இந்தியா இதனை வாங்க ஒப்பந்தமாகியிருக்கிறது.
இந்தவிமானத்தை டசல்ட் என்ற காமப்பேனி தயாரிக்கிறது.
பிரான்சுநாட்டு அச்சு மற்றும் மின்ணணு ஊடகங்கள் இந்த ஒப்பந்தத்தை விசாரித்து கிழித்து தொங்க போட்டுள்ளன.
மத்திய அமைச்சர் நிர்மலா அவர்கள் டசல்ட் கம்பெனி தொழிற்சாலையை பார்க்க அவசர அவசரமாக பிரான்ஸ் போயிருக்கிறார்
பாடகி சின்மயி அவர்கள் சுவிஸ்நாடு போயிருந்தார்.
இசை நிகழ்ச்சியில் பங்கு பெற.
இந்த நிகழ்சசியின் இசை இயக்குனர் இனியவன் என்பவர்.
சின்மயி மற்ரும் உள்ளவர்கள் சுரேஷ் என்பவர் வீட்டில் தங்கினார்கள். உன்னி மேனன்,வைரமுத்து ஆகிய இருவரும் விடுதியில் தங்கினார்கள்எனறு இனியவன் குறிப்பிட்டுள்ளார்.
சின்மயி புகாரில் கூறியது போல் எந்த சமபவமும் நடக்க வில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் சுரேஷ் என்பவர்.
ஈழமக்கள் உதவிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்ச்சி இது.
சுரேஷுக்கு தமிழைவிட ஜெர்மன் மொழி ஆளுமை அதிகம்.
வைரமுத்து தங்கியிருக்கும் விடுதிக்கு தன மகளை தனியே அனுப்பவேண்டாம் என்று ஜெர்மன் மொழியில் கூறி உள்ளார்.
சின்மயிக்கு ஜெர்மன் மொழி எழுத பேச படிக்க தெரியும்.
சினமயி சொன்ன புகார் எதுவும் நடக்க வில்லை .வைரமுத்தது தங்கி இருந்தவிடுதி நுறு மெயில் தள்ளி உள்ளது என்று சுரேஷ் கூறினார்.
இசை நிகழ்ச்ச்சி மிகசிறப்பாக நடந்ததாக சுரேஷ் கூறினார்.
மகிழ்ச்ச்சியடைந்த வைரமுத்து தன்பயணசெலவு,தங்கும் செலவை மட்டும் வாங்கிக்கொண்டு தனக்கு என்று எதுவும் வேண்டாம என்று கூறியதாக சுரேஷ் குறிப்பிட்டார்.
அதனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை வீட அதிகமாகசின்மயி அவர்களுக்கு சம்பளம் கொடுத்ததாகவும் சொன்னார்.
பாவம் அமைசர் நிர்மலா சீதாராமன்!
பாவம் சின்மயி அவர்கள்.!
ரொம்ப பாவம் வைரமுத்து அவர்கள் !!
Wednesday, October 10, 2018
"Me too"
and
"திரை உலக பிரபலங்கள் "...!!!
இந்தி தொலைக்காட்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் திருமதி சின்மயி அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார் .தான் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டது பற்றி அந்த பேட்டியிருந்தது.
களப்பிரர் காலம்பற்றி ஆராய்ந்து எழுதிய தமிழ் அறிஞர் மு.ராகவஅய்யங்கார் குடும்பத்தை சேர்ந்தவர் சின்மயி. பலசரக்குக் கடையில் பெருச்சாளியை அடித்து தூக்கி எறிவது போல "அந்த பாப்பாத்தி " சொன்னதை தூக்கி எறிந்துவிடலாம் தான் .ஆனால் சில உண்மைகளை சுடத்தான் செய்கின்றன.
sex என்பது ஒரு taboo என்ற மனநிலையில் உள்ள சமூகத்தில் நம் விட்டு குழந்தைகள் அது பற்றி அறிந்து கொள்ளும் ஒரே வழி இப்படித்தான் என்று இருக்கும் பொது இது சகஜமான ஒன்றாக கருதப்படுகிறது.
தன தங்கையின் பாவாடையை தூக்கி பார்க்காத அண்ணன் ,அண்ணி குளிக்கும்போது எட்டிப்பார்க்காத தம்பி, கூட்டமும் நெ ரிச்சலும் மிகுந்த "பஸ் " சில் பெண்ணின் மார்பகத்தை இடிக்காத ஆண்மகன் இந்த பூலோகத்தில் இருக்க முடியாது . இடிவாங்கியதை உலகம் முழுக்க சொன்ன பெண்ணும் இங்கு இல்லை.
ஆனாலும் இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
"Me too " ஆண்கள் எழததயாரா ? ஒவ்வொருத்தனம் பக்கம் பக்கமாக எழுதவேண்டியதிருக்கும்.
தான் மிகவும் மதிக்கும் குடும்பத்து பெரியவர் நடந்து கொண்டதை பார்த்து நடுங்கி அடங்கிய சிறுமிகள் எத்தனை எத்தனை ?
விழிப்புணர்வு பெரும் சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளும்போது இத்தகைய சர்சசைகள் எழத்தானே செய்யும்.
அமைதியாக இதனை கடந்து போவது தான் உத்தமம் !
Tuesday, October 09, 2018
(விமர்சனம் அல்ல )
"பரி ஏறும் ..." திரைப்படத்தை ,
முன் நிறுத்தி ,
டாக்டர் ரவிகுமாருடன் .....!!!
நான் "பரி ஏறும் ..." படம் பார்க்கவில்லை.பார்க்கும் வாய்ப்பும் இல்லை/ ஆனால் வலைத்தளத்தில் இந்த படம் பற்றிய விமரிசனங்கள், write up கள் , கட்டுரைகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த படம்பற்றிய நேர்மறையான எழுத்துக்கள் சிறப்பாக உள்ளன.
இந்த படம் பற்றி திரைப்பட ஆய்வாளர், கவிஞர்,ஓவியர் ஸ்ரீரசா என்று அன்போடு அழைக்கப்படும், டாக்டர் ரவிக்குமார் அவர்களோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன் .
மிகவும் வித்தியாசமான விமரிசனத்தை வைத்தார்.
"திரைப்படங்களில் சாதி பிரசினை இதற்கு முன்பும் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.திரைப்பட தயாரிப்பாளர்களும் சரி, இயக்குனர்கள்,மற்றும் எழுத்துத்தாளர்களும் சரி ஒரு தலித் இளைஞன் மேல்சாதி அல்லது இடைநிலை சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து சுகமாக வாழ்கிறான் என்பதை மட்டும் சித்தரிப்பதில்லை " என்றார் .
வலைதளத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் . " மதுரை வீரன் காலத்திலிருந்து இப்படியான சித்தரிப்புகள் தான் நடந்து வருகிறது. .சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் நாயக்கர் அரண்மனை பெண்ணை காதலித்தால் கால்மாறு கைம்மாறு வாங்கப்படுவான் என்று வருகின்றது.பாரதி கண்ணம்மா , பருத்தி வீரன், என்று பார்த்தாலும் இதுதான் நிலைமை . ரஞ்சித் தயாரிப்பிலமாரி செல்வராஜ் தயாரிப்பிலும் இது தான் நிலைமை .ஏன் ? " அவர் கேள்விக்கு பதில் சொல்பவர் இல்லை.
பள்ளர் சாதி இளைஞர் பிராமணப்பெண்ணை மணந்து கொண்டு சுகவாழ்வு வாழ்வதும் அரசியல் பிரமுகராக வருவதும் என் இவர்கள் கண்களில் படமறு க்கிறது. பயமா ?
இதோடு நானா நிற்கவில்லை> எனக்கு தெரிந்த மனநல மருத்துவரை கேட்டபோது அவர் சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது."பலநூறு ஆண்டுகளாக இந்த மக்கள் சாக்கடைப்புழுக்களாக நடத்தப்பட்டனர்.இப்போது தான் அதுவும் கடந்த 60து 70து ஆண்டுகளாகத்தான் கொஞ்சமாக மிகவும் கொஞ்சமாக கல்வி அறிவு பெற்று மிகசிறு பகுதியினர் மனிதர்களாக நடத்தப்படுகின்றனர் .தங்களுக்கு விடிவுகாலம் வரதா என்று ஏங்கி தவிக்கின்றனர் ."அடித்தால் திருப்பி அடி " என்று சொல்ல அவர்களிடையே ஒரு சீனிவாசராவ்,ஏ .பாலசுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி இல்லையே .தங்களுடைய வாரிசுகளுக்காவது இந்த இழிநிலை கூடாது என்று நினைக்கிறார்கள் . தங்கள் வாரிசுகளாவது மேல்சாதி அல்லது இடைநிலைசாதியில் மணவாழ்க்கையை அமைத்துக்கொணடால் இதை தாண்டிவிட முடியுமா என்று பார்க்கிறார்கள் . தங்கள்வாரிசுகள் சாதி மறுப்பு திருமணம் செய்வதை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ செய்கிறார்கள் " என்று விளக்கினார் .
எனக்கு ஒரு கருத்து உண்டு . பட்டியல் இணைத்து பையன் ஒரு ராஜ்குமாரியைத்தான் மணமுடிப்பேன் என்று அலையவில்லை. இளவரசனும்,சங்கரும் உலகமகா அழகி என்பதற்காக காதலிக்கவில்லை. மனம் ஒப்பி நமது பக்கத்துவீட்டு,எதித்துவிட்டு பெண்போன்ற வரைதான் காதலித்தார்கள். மணம் செய்து கொண்டார்கள் .
பரியன் பழகும் பெண் மூக்கும் முழியும் கறுப்பாகஇருந்தாலும் நாம் அவர்களை இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்.
திரைப்படங்களில் ஏன் இப்படி உலகமகா அழகியாக சித்தரிக்கிறார்கள் ?
அதே சமயம் இந்த "பரி யேறும் பெருமாள் " சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் ஒரு உரையாடலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்,வாலிபர்,மாதர் இயக்கங்கள் இந்த உரையாடலை பரவலாக கொண்டுசெல்லவேண்டும். !!!
Tuesday, September 18, 2018
திரைப்படம்
ஒரு கலைவடிவமா..?---5
எனக்கு இப்போது 83 வயது ஆகிறது> நான் சிறுவனாக இருந்த பொது தி.லி டவுன் ராயல் டால்க்கீசில் பள்ளியிலிருந்து அழைத்து சென்று ஒரு படம் காட்டினார்கள் .சிறப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தோம். ஊ ஞ்சல் ஆடுபவரின் கால்கள் நம் முகத்தில் இடிக்கும் வரை வரும். ஓ என்று கத்திக்கொண்டு கண்ணாடியை எடுப்போம். அதாவது அப்பொழுதே மூன்றாவது பரிமாணம் பரிசோதனை முயற்சியாக வந்துவிட்டது.
கதைப்படங்கள் பின்னர் வந்தன . இப்போது வட ஐரோப்பாவில் சில அலைவரிசையில் 3d ஒளிபரப்பாகிறது. முப்பரிமாணம் வந்து விட்டது .
அதற்கு அடுத்தபடியாக ஒரு இளைஞனும் அவன் காதலியும் ரோஜா தோட்டத்தில் சநதிக்கிறார்கள் என்றால் பார்வையாளர்கள் நாசியில் ரோஜாவின் நறுமணம்வீசும். அளவுக்கு முன்னேறியிருக்கிறது.இது பரிட்சார்த்தமான நிலையில் உள்ளது.
"தாகம் "என்னும் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சி நடந்தது> அதனை தயாரிப்பில் நானும் செயல்பட்டேன். "தீக்கதிர் "பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தோழர் முத்தையா அவர்களை ."நிபெரிய நடிகனாகவுன்னைஅனுப்பலை ஐயா ! அங்க ஒரு "யூநிட்" ஆரம்பிக்க முடியுமா னு பாரும் " என்று சொல்லி அனுப்பினார் .
அந்தப்படத்தில் நான் நடித்தேன்> திரைப்படம் பற்றி பல விஷயங்களை நேரடியாக கற்றேன்.
ஒரு இணை இயக்குனர்,லட்சுமிநாராயணன்> ஒரு இணை காமிராக் கலைஞர் கோபால் ஓப்பனை கலைஞர் கோபி என்று சிலரை அணுகி ஒரு யூனிட் ஆரம்பிக்க முயன்றேன்.
திரை உலகிற்குள் சென்று சிராய்ப்பு இலாமல் வெளிவந்தவர்களில் நானும் ஒருவன். மிகவும்முக்கியமான பணி என்றால் தொகுப்பாளர் பணியைத்தான் சொல்லவேண்டும் .என் அனுபவம் ஒன்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன் .
அவர் ஒரு தொகுப்பாளர். ஒரு பாடல்காட்ச்சிய தொகுத்துக் கொண்டிருந்தார். மிகவும்பிரபலமான நடிகர் வரும் காட்ச்சி. பாடலின் வரிகளும் LIPMOVEMENT ம் சரியில்லை. எடிட்டர் ஒருநாள் புறாவும் கஷ்டப்பட்டு சரியாகவில்லை . எரிசசலில் தன் பக்கத்தில் இருந்த உதவியாளரை ஒரு காப்பி வாங்கிவர செய்துவிட்டு தனியாக போய் அமர்ந்து விட்டார் . உதவியாளர் 18 வ ய து. ஆர்வக்கோளாறில் இவரிடம் வந்துள்ளார். காபியை குடித்த எடிட்டர் சோபாவில் அயர்ந்து விட்டார் . உதவியாளர் மூவியாலோ வில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார் . எடிட்டிங் ஆபிசில் ng SHOT என்று ஒரு டப்பா வைத்திருப்பார்கள் .நோ குட் ஷாட் என்பார்கள் . அதில் எப்போதோ வேண்டாம் என்று போட்ட ஒரு strip இருந்தது.அது TRAOLY யில் . எடுக்கும் பொது தவறாக எடுக்கப்பட்ட ஒன்று> ஓரூரின்கண்ணமும்.கழுத்து நரம்பும் மட்டும் தெரியும் துண்டு படம் .பையன் அந்த துண்டை எடுத்து ஒட்டி பார்த்தான். உதட்டசைவும் குரலும் ஒன்று சேர்ந்தன .பையன் கத்த எடிட்டர் எழ பிரசினை முடிந்தது..அந்தப்படம் வெளியானதும் பத்திரிகைகள் அந்த நடி \கரின் கன்னமும்,கழுத்த்து நரம்புகளும் நடித்த கதையை விலாவாரியாக எழுதி சிலாகித்தன .
திரைப்படம் என்பது ஒரு கலைவடிவமா? ஆம் !
அது ஒரு தொழில் நுணுக்கப் புரட்சியா ? ஆம் !
திரைப்படக்க்கல்லூரியில் படித்த ஒரு மாணவனை கேளுங்கள்.!
திரைப்படம் என்றால் என்ன ?
what is cinema ?
it is sound and light !!
என்பது தான் அவன் பதிலாக இருக்கும் !!!
(நிறைவுற்றது)Wednesday, September 12, 2018
திரைப்படம்
ஒரு கலைவடிவமா ...?---4
சலனப்படம் வந்ததும் தன்னுடைய தகவல் தொடர்பு சாதனம் ஒரு முழுமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மனிதன் நினைத்தான் .அது தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் அதில் கதைப்படங்களை சலனப்படமாகவே எடுக்கவும் செய்தான்." சௌகார் -கி -பாஷ் " என்ற படம் அதில் முக்கியமானது .
மத்திய மும்பையில் ஒரு நூற்பாலை. தொழிலாளர்கள் அதற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்> அவர்களில் வயது முதிர்ந்த ஒருவரும் செல்கிறார். வாசலில் நிற்கும் காவலாளி அவரைத்தடுக்கிறான். உனக்கு வயதாகிவிட்டது. உன்னை ஓய்வுகொடுத்து அனுப்பி விட்டார்கள் என்று காவலாளி தடுக்கிறான்.தொழிலாளி நான் போவேன் என்று சீ றுகிறான்தள்ளுமுள்ள நடந்து அவனை காவலாளி தள்ளி விடுகிறான். அந்த முதியவன் கல்லில் அடிபட்டு விழுகிறான்> தொழிலாளியின் மகன் ஓடிவந்து அவனை தான் மடியில்கிடத்திக்கொள்கிறான்.காட்ச்சி மாறுகிறது.
புனே அருகில் உள்ள கிராமம்> விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்சசி கொண்டிருக்கிறான். அவன் மனைவி அவனுக்கு கஞ்சி காய்ச்சி கொண்டு வருகிறாள்.அவனுடைய மகன் மம்பிட்டியால் வாய்க்காலில் ஓடும்நீரை ஒழுங்கு படுத்து கிறான் .விளை ந்த பயிரை அறுத்து விவசாயி முட்டை காட்டுகிறான். அப்போது சௌகார் வந்து முட்டைகளை தன அடியாட்களை முலம் பறித்துக்கொள்கிறான். நிலத்தையும் ஆர்ஜிதம் செய்து விவசாயியை வெளியேற்றுகிறான் காட்ச்சி மாறுகிறது.
மடியில் கிடத்தப்பட்ட தொழிலாளி தன மகன் முகத்தையே பார்க்கிறான். மகனே கந்துவட்டி காரணிடம் கடன் மட்டும் வாங்காதே என்று கூறி மரி க்கிறான்.
பாபுராவ் பெயிண்டர் விவசாயியாக நடிக்கிறார் .அவர் மகனாக சாந்தாராம் நடித்தார். சித்தார்த் காக் என்ற ஆராய்ச்சியாளர் cinema என்ற பத்திரிகையில் எழுதியுள்ளார்.
நல்லகாலம் " மேற்கு தொடர்ச்சி மலை" படத்தை விமரிசித்தவர்கள் அப்போது இல்லை .இருந்திருந்தால் நமக்கு சாந்தாராம் என்ற இயக்குனர் கிடைத்திருக்க மாட்டார்.துவைத்து புதைத்திருப்பார்கள்.
சலனப்படம் பேச ஆரம்பித்தபோது அதனை எதிர்த்தவர்கள் உண்டு. நகைசுசுவை மற்றும் சோக நடிப்பில் உச்சத்தை தோட்ட சார்லிசாப்ளின் பேசும்படத்தை எதிர்த்தவர்களில் முதன்மையானவர். பேச ஆரம்பித்தால் நடிப்பின் தரம் குறைந்து விடும் என்று அவர் நமபினார்.
பின்னாளில் மாறினார் இந்த நூறு ஆண்டுகளில்மிகசிறந்த பத்து படமென்று எடுத்தால் அவரின் Great Dictator அதில் ஒன்றாகும் .
சலனப்படம் பேசும்படமாக மாறினாலும் மனிதனின் தேடல்நிற்கவில்லை.
திரையில் நீளமும் அகலமும்தான் புலப்படுகிறது.மூன்றாவது பரி மாண மான ஆழம் இல்லையே.?
தேட ஆரம்பித்தான்...
(தொடரும் )
Monday, September 10, 2018
திரைப்படம்
ஒரு கலைவடிவமா...?---3
தான் பார்த்த பொருள்களின் அசைவுகளை சித்தரிக்க மனிதன் காத்திருக்க வேண்டியதிருந்தது.
பிரான்சு நாட்டில் குதிரை பண்ணை களப்போது நிறைய இருந்தது.அவற்றை வளர்த்து பயிற்சி கொடுத்து குதிரைப்பந்தயத்தில் ஓட விடுவார்கள் . அப்படி உள்ள ஒரு பண்ணையில் மிருக வைத்தியர் ஒருவர் ஆராய்சசி யாளராக இருந்தார்.குதிரை நடப்பதையும் அது ஓடுவதையும் அப்போது அதன் சதைகள் எவ்வாறு அசைகிறது என்பது பற்றி ஆராய்ந்து வந்தார்
ஒருகட்டத்தில் ஒரு அய்ம்பது கேமிராக்களை வைத்து அதன் ஒவ்வொரு அடியின் போதும் ஏற்படும் தசை மாறுதல்களை கண்காணித்தார். அந்த still போட்டோவை எடுத்து ஒவ்வொன்றாக கவனித்தார் அதனை எளிமையாக்க அந்த பொட்டோக்களை ஒட்டி வைத்தார். பார்த்துக் கொ ண்டிருக்கும் பொது அந்த போட்டோக்கள் வேகமாக திரும்பத்திரும்ப பார்த்தார்> அப்போது அவருக்கு குதிரைகளின் அசைவு தாவி தாவி ஓடுவது போல்தெரிந்தது.வித்தியாசமான இந்த நிகழ்வு பற்றி ஆராய்ந்த பொது ஒரு விஞ்ஞான உண்மை தெரிய வந்தது.
ஒரு பொருளை நாம் பார்த்து விட்டு கண்ணை முட்டிக்கொண்ட பிறகும் அந்த பொருளின் பிம்பம் நமது பார்வையில் ஓரி வினாடியில் 48 ஒரு பா கம் தொடர்கிறது என்ற உண்மைதான் அது.
persistance of vision என்ற கொட்டப்பட்டு உதயமாகியது. அதாவது "பார்வையின் தொடர்சசி " என்ற உண்மை கிடைத்ததும் .இதன் மூலம் அசைவுகளையும் நிரந்தரமாக புகைப்படமாக முடியுமென்று கண்டனர்
languuage of cinematogrphy பிறந்தது.குமரிக்கடற்கரையில்நின்றால்காற்றில் அசையும் உடை மட்டுமல்ல சீ ரிப்பா யும் அலைகளையும் அப்படியே சித்தரிக்க முடியும் என்று மனிதன் கண்டுகொண்டான்.
அவனுடைய தகவல் தொடர்பு சாதனம் ஒரு பாய்சசலை கொண்டதாக மாறியது .
அப்போதும் அவனுக்கு குறை இருந்தது. காற்றின் சலசலப்பு, அலையின் ஓசை பதிவு செய்யப்படவில்லையே என்பது தான் அது> ஆம் movie வந்து விட்டது ஆனால் talkie வரவில்லை
அவன் தேடல்தொடர்ந்தது.!!!
(தொடரும்)
Saturday, September 08, 2018
திரைப்படம் என்பது
ஒரு கலைவடிவமா ...? -----2
ஓவியம் ஒரு மொழியாக கையாளப்பட்டு வந்த பொது மனிதன் தன்னுடைய தகவல் தொடர்பு சாதனத்திற்கு கிடைத்த மற்றுமொரு வசதியாக பயன்படுத்தினான் ஓவியர்களும் ஓவியகலை யும் பெரும் வளர்சசி பெற்றது. டாவின்சியும்.ராம்பிரண்டும் ,போற்றி புகழப்பட்டார்கள்
.டசசு நாட்டை சேர்ந்த ராம்பிராண்ட் மிகசசிறந்த ஓவியர். தன நாட்டின் மலைகளையும்,மரம்செடிகொடிகளையும் ,நீரோடைகளையும் அற்புதமாக வரைவார்> டச்சு மன்னர் "ராமபிரானின் ஓவியங்களைப்பார்த்த பிறகுதான் என் நாடு இவ்வளவு அழகானதா என்று நான் பிரமித்திருக்கிறேன் "என்று குறிப்பிட்டுள்ளார்..
ஆணாலும்மனிதனுக்கு திருப்தி வரவில்லை. ஓவியனின் திறமை அல்லது திறமையின்மை ,அவனுடைய உணர்வுகளை அவன் பார்க்கும் கோணம் ஆகியவை உள்ளதை உள்ளபடியே சித்தரிக்கிறதா என்ற சந்தேகம் இருந்தே வந்தது. தான் பார்த்ததை in its concrete form வெளிப்படுத்தமுடியவில்லையே என்ற குறை அவனுக்கு இருந்து கொண்டே வந்தது. அவன் காத்திருந்தான்.1760ம் ஆண்டு வாக்கில் ஒரு விஞ்ஞன கண்டுபிடிப்பு அவனுக்கு உதவி செய்தது. வெளிச்சம் அல்லது ஒளி சில ரசாயனங்களின் மேல்பட்டால் அது கறுப்பாகிறது என்பதை கண்டு கொண்டான் .ஏற்கனவே கடலோடியான அவனுக்கு ஆடிகளை (lens ) பற்றி தெரிந்திருந்து. ஆடி களின் முன் இருக்கும் பொருள்களின் மீது விழும் ஒளி ஆடிகள் வழியாக சென்றால் ரசாயனம் தடவிய பொருளில் கருப்பு ப வெள்ளையாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டான. அந்த கருப்பு வெள்ளை மாற்றங்கள் அந்த ஆடி யின் முன்னால் உள்ள பிம்ப த்தின் மறுவடிவமாக அதேபோன்று அச்சு அசலாக வருவதையும் கண்டான்.இது தனக்கு தகவல் தொடர்புக்கான மற்றுமொரு வழி என்று நினைத்தான் .language of Photography பிறந்தது.
நான் சோவியத் யூனியன் சென்றதில்லை.ஆனாலும் அந்த படத்தை பார்த்தால் இது கிரெம்ளின் மாளிகை ,இது லெனின் சதுக்கம், என்று எளிதாக கூறமுடியும்.காரணம் புகைப்படம் உள்ளதை உள்ளபடியே காட்டுகிற ஒரு ஊடகமாகமாறிவிட்டிருந்தது.நான் குமாரி கடற்கரையில் என்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது கடற்கரையை,பின் தெரியும் சமுத்திரத்தை காந்திமண்டபத்தை அப்படியே காட்டும் இது அவனுடைய தகவல் தொடர்புக்கு மிகவும் அனுசரணையாக இருந்தது> ஒருகட்டுரையை எழுதி,அதில் ஒரு புகைப்படத்தையும் போட்டால் பார்வையாளனின் புரிதல் மேன்மையடைகிறது இதனால் தான்.
ஆணாலும்மனிதனுக்கு திருப்தியேற்படவில்லை.புகைப்படம் சமுத்திரத்தை,மனிதர்களை அப்படியே காட்டுகிறது என்பது உண்மைதான் .ஆனாலும் கடலின் அலைகள் அசை கின்றன. படத்தில் நிற்கும் மனிதனின் உடைகள் காற்றில் அசைகிறது .இந்த அசைவுகளை சொல்ல முடியவில்லையே புகைப்படம் என்பது ஒரு still .அசைவுகளை வெளிப்படுத்துவதில்லை.
மனிதன் தேட ஆரம்பித்தான்.
( தொடரும்)Friday, September 07, 2018
திரைப்படம் என்பது
ஒரு கலைவடிவமா..... ?
புனே திரைப்பட கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன் பட்ட மளி ப்பு விழா நடந்தது உலகப் . புகழ் பெற்ற மிரினாள் சென் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார் .
" கட்டிடக்கலை, போர்க்கலை நாட்டியம் ,நடனம்,நாடகம்,நடிப்பு, இசை ஓவியம் சிற்பம், என்று அத்துணை கலைகளையும் விழுங்கி செரிமம் செய்து, தன்னையே ஒரு தொழில்நுணுக்க புரட்ச்சி மூலம் ஒருகலை வடிவமாகவும் ஆக்கிக்கொண்டதுதான் திரைப்படம்."என்றார் .
திரைப்படம் 70 சதம் விஞ்ஞானம் .30 சதம் கலை. 30 சத்தத்திற்குள் . முற்போக்கு,பிற்போக்கு, கலை ,இலக்கியம், என்று பார்க்க முடியும்.
மின்சாரம் இல்லை என்றால் திரைப்படம் இல்லையென்பது தான் நிலை.தமிழகம் மின்சாரமயமாக்கப்பட்டது திரை த்தொழிலுக்கு சாதகமாக அமைந்தது என்பது மிகை அல்ல. இதே சமயத்தில் தான் ஹரியானா மின்சாரமயமாகியது என்பதை நினைவில் கொள்வது நல்லது.மனிதகுலதகவல் தொடர்பு வளர்சசி என்பதின் ஒரு அம்சம் தான் திரைப்படம்.
மாமேதை லெனின் மக்களுக்கு போதனை செய்ய திரைப்படத்தை பயன் ப டுத்தினார். அதனால் திரைபடத்தை கல்வித்துறையின் ஒரு பகுதியாக வைத்தார் .நம் நாட்டில் அதனை பொழுது போக்காக கருதுகிறோம். அடிப்படையில் மனிதன் தன சகமனிதனோடு தொடர்பு கொள்ள ஒரு சாதனத்தை தேடினான்.தன் கருத்தை தன் சக மனிதனுக்கு உள்ளதை உள்ளபடியே மடை மாற்றுவதற்கு அவனுக்கு அன்று கிடைத்த கருவி தான் "பேச்சு மொழி "(verbal language ). பேசு வதின் மூலமா மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியாது என்று அதன் போதாமையை உணர்ந்தான். மொழிக்கு மாற்றாக அல்லாமல் அதற்கு அனுசரணையாக ஒரு கருவி அவனுக்கு தேவைப்பட்டது.
உதாரணமாக என்நண்பர் என் வீட்டுக்கு வர விரும்புகிர்றார் . நான் தெருவின் பெயரை சொல்லி அந்த தெருவில் மரம் இருக்கும்,அதன் அருகிலிருக்கும் விடு என்கிறேன்.
அங்கு இரண்டு வீட்டின் முன்னாலும் மரம் இருக்கிறது.நண்பர் திகைக்கிறார். ஒருமரம் தென்னை.மற்றோ ன்று வெப்ப மரம் . நான் ஒரு காகிதத்தில் தென்னை மரத்தை படமாக காட்டி ருந்தால்நண்பர் சிரமம் குறைந்திருக்கும் . அதாவது பேசசு மொழிக்கு அனுசரணையாக ஓவியம் கிடைத்தது .இதனை language of drawing என்று வகைப்படுத்தினார்> மனிதனின் தகவல் தொடர்பு சாதனத்தில் ஒரு சிறு வளர்சசி உருவாகியது.
(தொடரும் )
Wednesday, August 29, 2018
வலைத்தளமும் ,
எகிப்திய எழுச்சியும்....!!!
2011 ஆண்டு. ஹாசினி முபாரக் எகிப்து நாட்டின் அதிபராக இரு ந்தார். சுமார் முப்பது ஆண்டுகளாக இருக்கிறார் . மக்களிடையே அதிருப்தி. லஞ்சம் ஊழல் என்று குற்ற சாட்டு .
கெய்ரோவிலும்அலெக்ஸ்சாண்ட்ரியாவிலும்ஆர்ப்பாட்டங்கள்.மெள்ளமெள்ளநாடுமுழுவதும் பரவுகிறது.
மாணவர்கள் இளைஞர்கள் அரசு ஊழியர்கள்< குடும்ப பெண்கள், ஆசிரியர்களை என்று மக்கள்வெள்ளம் உற்சாகமாக இந்த போராட்டத்தில்பங்கெடுக்கின்றனர்.
முபாரக் திணறுகிறார். ராணுவத்தின் முலம் அடக்கநினைக்கிறார் .200 க்கும் மேற்பட்டவர் இறந்தனர். போராட்டம் ஓயவில்லை . போராட்டத்திற்கு மோர்சி என்பவர் தலைமை தாங்குகிறார். முபரகவேறு வழியில்லாமல் பதவி விள்குகிறாரா. மோர்சி அதிபர் ஆகிறார்.
islamic brotherhood என்ற இயக்கத்தை சேர்ந்தவர் மோர்சி> சவுதி அரேபிய போல் எகிப்தையும் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக அறிவிக்க அமெரிக்காவும், பிரிட்டனும் செய்த சதியின் பயன் அது> ஆனால் முழுவதும் வலைதளத்தின் மூலம் மக்களை திரட்டியுள்ளார்கள் .
மோர்சி எகிப்தின் அரசியல் சட்டத்தை மாற்றி இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு எடுக்கிறார். மக்கள் அதனை விரும்பவில்லை. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை./ராணுவத்தில் உள்ள இளம் அதிகாரிகள் ஒரு ராணுவப்புரட்ச்சியின் மூலம், மோர்ஸிய பதவியை விட்டு இறக்குகிறார்கள்.எகிப்து காப்பாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம்நடந்தது .இது பற்றி இயக்குனர் லெனின் பாரதி ( ஏற்குதொடரசசி மலை பட இயக்குனர் ) இது ஒரு அனுமதிக்கப்பட்ட போராட்டம் என்று கூறினார் .இது முற்றிலும் உண்மை.பத்து நாள் நடந்த போராட்டம் .11ம் நாள் என்ன நடந்ததுஎன்பதை நாம் பார்த்தோம்.காவல் துறையை சேர்ந்த பெண் கடைகளுக்கு தி வைப்பது பார்த்தொம்.
எகிப்தும் ,மெரீனாவும் வலைத்தளத்தால்மட்டுமே நட த்தப்பட்டது என்பது மிகவும் பாமரத்தனமான புரிதல். அப்படியானால் தூத்துக்குடியில் நூறாவது நாள் துப்பாக்கி சூ டு நடத்தி 13 பெரை கொல்வானேன்.
வலைத்தளம் என்பது ஒரு safty valve ஆக பயன்படுத்தப்படுகிறது> மக்களின் ஆதங்கத்தை,கோபத்தை, வேறுப்பை பயன்படுத்த ,சிதறடிக்க உருவாக்கப்பட்ட ஒன்றுதான்.
கருத்துரிமை,என்று சொல்வதெல்லாம்பம்மாத்து.
கட்டுப்பாடு மிகுந்த இடது சரி இளைஞ்ர்களும் தன ஸ்தாபனத்தையே எதிர்க்கும் அளவுக்கு உரிமை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்களே என்று நினைக்கும் பொது பயமாக இருக்கிறது .
பேசுவோம் ! விவாதிப்போம் !!
Monday, August 27, 2018
கெட்ட வார்த்தைசொல்லி
திட்டனும் போல இருக்கு ..!!!
சுமார் 9000 கோடி கடன வாங்கிப்போட்டு மல்லையா லண்டன் போய்ட்டான் .அவனை கொண்டுவர மத்திய அரசு லண்டன் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கு. மல்லையா சொல்லுதான் அவன் சனாதன பிராமண குடும்பத்துலபொறந்தவனாம். அதனால அவனை ஆசாரமான சிறையிலதான் அடைக்கணுமாம். அப்படி சிறை இந்தியாவில் இல்லை> அதுனால என்னை இந்தியாவுக்கு அனுப்பிடாதிங்க " ஞான் கோர்ட்டுல.
ஒரே படுக்கைல நாலு பொம்பள பிள்ளைல பாக்கற பய இந்தநாயி சொல்லுது.
முமபைல ஆர்த்தர் ரோட்டுல சிறைசாலை தனியாக ஒரு அறை ஒதுக்கி இருக்காங்க அதுல rest room கூட எ/சி பண்ணியிருக்கோம். அவனுக்கு என்ன சௌகரியம் வேணுமோ அத செய்யரோம் னு நம்ம மோடி அரசு லண்டன் கோர்ட்ல சிறைச்சாலை படத்தை அனுப்பி வேண்டி இருக்காங்க .
மல்லையா,நீரவ் மோடி,இன்னொரு மோடி னு ஓட்டிப்பாணவனாஅதிகமா > உள்ளூர்ல திரியறவங்க அதைவிட அதிகம். அவங்க பேரை சொல்லுங்கடா நூ கேட்ட சொல்லமாட்டிங்க>
ஏல அவனை சிரசேதம்ண்ணு னா கேக்கோம். - அவம பெரா சொல்லுன்னு தான கேக்கோம். பேரை சொல்லிட்டா எ ன்ன செய்ய போற உன்னால ஒன்னும் முடியாது னு பதில் சொல்லாரானுவ .
பெயர் தெரிஞ்ச்சதுன்னா "அதோ கார்ல வப்பாட்டியோட போராம்பாரு "தாயொளி" அவன் தான் ஸ்டேட்பாங்குல 9000 கோடி கடன் வாங்கின பய இதோ இந்த "வெக்காளி" பஞ்சாப் வாங்கில 12000 கோடி கடன் வாங்கிட்டு ஏசி கார்ல போராம்பாரு "னு திட்டிகிட்டு ஆறுதலாவது கிடைக்குமே னு தான் கேக்கோம்,
இந்த ஆசையையாவது நிறைவேத்துங்க "மோடி சார் "
(மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).
கெட்ட வார்த்தைசொல்லி
திட்டனும் போல இருக்கு ..!!!
சுமார் 9000 கோடி கடன வாங்கிப்போட்டு மல்லையா லண்டன் போய்ட்டான் .அவனை கொண்டுவர மத்திய அரசு லண்டன் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கு. மல்லையா சொல்லுதான் அவன் சனாதன பிராமண குடும்பத்துலபொறந்தவனாம். அதனால அவனை ஆசாரமான சிறையிலதான் அடைக்கணுமாம். அப்படி சிறை இந்தியாவில் இல்லை> அதுனால என்னை இந்தியாவுக்கு அனுப்பிடாதிங்க " ஞான் கோர்ட்டுல.
ஒரே படுக்கைல நாலு பொம்பள பிள்ளைல பாக்கற பய இந்தநாயி சொல்லுது.
முமபைல ஆர்த்தர் ரோட்டுல சிறைசாலை தனியாக ஒரு அறை ஒதுக்கி இருக்காங்க அதுல rest room கூட எ/சி பண்ணியிருக்கோம். அவனுக்கு என்ன சௌகரியம் வேணுமோ அத செய்யரோம் னு நம்ம மோடி அரசு லண்டன் கோர்ட்ல சிறைச்சாலை படத்தை அனுப்பி வேண்டி இருக்காங்க .
மல்லையா,நீரவ் மோடி,இன்னொரு மோடி னு ஓட்டிப்பாணவனாஅதிகமா > உள்ளூர்ல திரியறவங்க அதைவிட அதிகம். அவங்க பேரை சொல்லுங்கடா நூ கேட்ட சொல்லமாட்டிங்க>
ஏல அவனை சிரசேதம்ண்ணு னா கேக்கோம். - அவம பெரா சொல்லுன்னு தான கேக்கோம். பேரை சொல்லிட்டா எ ன்ன செய்ய போற உன்னால ஒன்னும் முடியாது னு பதில் சொல்லாரானுவ .
பெயர் தெரிஞ்ச்சதுன்னா "அதோ கார்ல வப்பாட்டியோட போராம்பாரு "தாயொளி" அவன் தான் ஸ்டேட்பாங்குல 9000 கோடி கடன் வாங்கின பய இதோ இந்த "வெக்காளி" பஞ்சாப் வாங்கில 12000 கோடி கடன் வாங்கிட்டு ஏசி கார்ல போராம்பாரு "னு திட்டிகிட்டு ஆறுதலாவது கிடைக்குமே னு தான் கேக்கோம்,
இந்த ஆசையையாவது நிறைவேத்துங்க "மோடி சார் "
(மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).
Friday, August 24, 2018
ஆடிட்டர் பேசியதில் ,
பாதிதான் உண்மை !
மீதி .................................!!!
சமீபத்தில் மதுரையில் ஆடிட்டர்கள் கூட்டம் ஒன்று நடந்தது.அதில் வட மாநிலத்திலிருந்து வந்த ஆடிட்டர் ராஜிவ் குமார் என்பவர் பேசினார் .கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய ஆட் சி செய்த நடவடிக்கைகள் பற்றி வானளாவ புகழ்ந்து தள்ளினார்.இது போல் இந்தியாவில் எந்த ஒரு ஆட்ச்சியும் செயல்பட்டதில்லை என்று பேசினார் . அவர் ஆங்கிலத்தில் பேசினதை தமிழில் ஒருவர் மொழிபெயர்த்தார்.
அந்த மொழி பெயர்ப்பை வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்." 2004ம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுவரை வங்கிகள் 38 லட் சம் கோடி கடன் கொடுத்துள்ளது. மன்மோகன் சிங் மற்றவர்கள் வாய் வார்த்தையாக சொன்னதின் பேரில் இந்த கடன் கொடுக்கப்பட்டுள்ளது>ஒருநாட்டி ன் பொருளாதாரத்திற்கு வங்கிகள் எவ்வ்ளவு முக்கியமானவை என்பது நமக்கு தெரியும் .அந்தக்கடன் வசூலாகவில்லை> அதனை வசூலிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது." என்று அடித்தார்.
வங்கிகள் நாட்டுடமையானது 1969ல். ஏழைஎளியவர்களுக்கான "லொன்மேளா "நினைவிருக்கலாம் .முதலிலேயே முதலாளிகளுக்கு கடன் கொடுத்தால் சிக்கல் வரும் என்று எளியவர்களுக்கு "கிள்ளி"கொடுத்தார்கள்.பின்னர் முதலாளி மார்களுக்கு அள்ளிகொடுக்க ஆரம்பித்தார்கள் .
இதில் காங்கிரஸ்,பாஜாக என்று பேதம் பார்க்க முடியாது. மோடியின் விமானப்பயணத்தில் முதல் சிட்டு அதா ணிகளுக்கும் அம்பாணி களுக்கும் தான் .அதாணிக்கு ஆஸ்திரேலிய சுரங்கத்திற்காக ஸ்டேட்வங்கி 6000 கோடி கொடுக்க பிரதமர் உத்திர விட்டார்> வங்கி சேர்மன் முடியாது என்றார். அவர் வெளிநாட்டு சென்றிருக்கும் பொது ஒரு குட்டி ஆபிசர் முலம் கடனை அளித்தார் நமது நிதி அமைசசர் !
ராஜிவ் குமார்ப்பேசும் பொது சேவை மற்றும் சரக்கு வரி பற்றி குறிப்பிட்டார். அத்தனையும் half truth ! 2019ம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்தில் இந்த படித்த தொழில் வல்லுநர்களை பயன் படுத்த போகிறார்கள் . அதற்கான பிரம்மாண்டமான தயாரிப்பு வேலைகள் ஆரம்ப மாகிவிட்டன.
Monday, August 20, 2018
Glory
T O
A I I E A !!!
மதுரையிலிருந்து அந்த லாரி புறப்படுகிறது. 1 1/2 டன் அரிசி ,காய்கறி,பலசரக்கு சாமான்கள்.,பாய்விரிப்புகள்,போர்வைகள் பிஸ்கட் பாக்கட்டுகள் என்று மூன்று லடசம் ரூ பெறுமானமுள்ள நிவாரணப்பொருள்களுடன் புறப்பட விருக்கிறது தஞ்சை பகுதி இன்சுரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி கொடி அசை த்ததும் புறப்படலாம். லாரியில் பொது இன்சூரன்ஸ்ஊழியர் சங்க தலைவர் பாலா, மாதர் சங்க தலைவர் பொன்னுத்தாய் ,எழுத்தாளர் சங்க தலைவர் பருவத வரத்தினி ஆகியோர் உள்ளனர். அப்பபோதுஅழுக்கு வெட்டியும் காக்கைச்சட்டையும் அணிந்த இருவரை ஓடிவருகின்றனர்> அவர்களை கையில் சீல் உடைக்கப்படாத 10லிட்டர் சமையல்எண்ணை கென் இரண்டு இருக்கிறது.ஐயா எங்கள் சார்பில் இதனை கேரள சகோதரர்களுக்கு கொடுக்க முடியுமா? என்று கூ றி நீட்டுகிறார்கள. கொண்டுவந்தவர்கள் ஆட்டோ தொழிலாளர்கள் அதனை இன்சூரன்சுழியர் சங்க செயல்பாட்டாளர் லாரியில் ஏற்றுகிறார்.அவர் கண்கள் கலங்கி இருக்கிறது.
மதுரைப்பகுதி இன்சூரன்சுழியர்கள் அனுப்பும் லாரி கேரள த்திற்கு நிவாரணப்பொருள்களோடு கிளம்புகிறது. மழைக்கு அந்த பெண்கள் தாற்பலினால் முடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்>அவர்கள் பீர்மேடு செல்ல வேண்டும் சாலை சேதமடைந்துள்ளது. அரைமணி நேரத்தில்செல்லும் இடத்திற்கு ஐந்து மணிநேரம் சுற்றி போகவேண்டியதாகிறது.
பீர்மேட்டில் சாந்தியின் வீ டு முழுவதும் சகதி. கதவை திறக்க முடியவில்லை> அவர் வந்த நிவாரணப்பொருள்களை பள்ளிகூடம்மற்றும் தேவையான இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாரா.அவர்தான் பஞ்சாயத்து தலைவர் பள்ளியிலும்பாட சாலைகளிலும் தங்கி இருப்பவர்கள் இவர்களை தங்கள் உறவினர்களாக பாவிக்கிறார்கள் .வயதான பாட்டி ஒருவர் இந்த மழையிலும் வெள்ளத்திலும் எங்களை பார்க்க வந்ததே சந்தோசம் மகளே என்று வர்த்தினியின் கையை பிடித்துக்கொள்கிறாள்.வர்த்தினியின் தொண்டை அடைக்கிறது. பேச முடியாமல்கண்கலங்கி நிற்கிறார்.
துப்புரவு தொழிலாளி, ஆசிரியர்,அரசு ஊழியர், சுகாதாரத்துறை ,தீயணைப்பு,காவல் துறை என்று அத்துணை பெருமை காண துஞ்சாது மெய்வருத்தம் பாராதுமக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்>அவர்களிடையே எந்த பேதமும் இல்லை>
மதுரை மாவட்டம் திருபத்துரில் மதுரை சங்கத்தின் 62வதுமாநாடு நடக்கிறது மேடையில் அகிலஇந்தியாய் சங்கத்தலைவர் தோழர் கிரிஜா பேசுகிறார் .
அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஊழியர்கள் தங்களொருநாள் ஊதியத்தை நிவாரணப்பணிக்கு தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.அதனை பிடித்தம் செயது அனுப்பும் பணியை நிர் வாகம் ஏற்றுக்கொள்கிறது என்று அறிவிக்கிறார்.
கரவொலியோடு சார்பாளர்களும் மற்றவர்களும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
கிட்டத்தட்ட 10கோடி வசூலாகும் என்பது என்போன்றவர்களின் நம்பிக்கை
நான் எல் ஐ சி யிலிருந்து ஒய்வு பெற்று 22 வருட ம் ஆகிறது. தோழர்கள் நாராயணனும்,தண்டபாணியும்,பாஸ்கரனும்,"எல்லாம் சங்கத்திற்கே" "என்று சொல்வார்கள்> நாங்கள் அவர்கள் பின்னால் ஓடினோம் .இன்று சாமிநாதனும்,ஜிஎம்ஸ் சம்,புண்ணியமூர்த்தியும் "சங்கம் எல்லாருக்கும் " என்கிறார்கள் .
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறேன் !
glory to aiiea !!!
Thursday, August 16, 2018
தண்ணீர் விட்டு
வளர்க்கவில்லை ....!!!
சுதந்திர போராட்டத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களைப்போல் சித்திரவதையை தாங்கி \யவர்கள் எவரும் இல்லை என்பார்கள். ஒரு பெரிய பனிக்கட்டி பாளத்தின் மீது அ வரை படுக்க வைத்து கட்டி இருந்தார்கள் . காங்கிரஸ் சோஷலிசகடசியின் செயலாளராக இருந்த அவரிடமிருந்து சில தகவல்களை பெற பிரிட்டிஷார் முயன்றார்கள் பனி பாளம் உருகியது உறுதியான நெஞ்ச்ம கொண்ட ஜெ.பி யை பணியவைக்க முடியவில்லை .
அவருடைய மனைவியின் பெயர் பிரபாவதி தேவி.சுதந்திர போரில் ஈடுபட்டுள்ள நாம் குடும்பம் பிள்ளை குட்டி என்று வாழ வேண்டாம் . நம்மக்குள் தாமபத்திய உறவு வேண்டாம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்தனர் அப்படியே வாழ்ந்தனர்
சுதந்திர போரில் ஈடுபட்ட பல தலைவர்கள் சுதந்திரம் கிடைத்தால் தான் திருமண வாழ்க்கை ? அதுவரை குடும்பம் என்ற பந்தத்தில் ஈடுபாக்கூடாது என்று முடிவு செய்தனர்.அப்படி முடிவு செய்த தலைவர்கள் ஏராளம்> அவர்களில் ஒருவர்தான் அந்தபாட்டாளிமக்கள் தலைவன் பி>ராமமூர்த்தி. பெரியார் தலைமையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார் சுதந்திரம் அடைந்த பிறகு.
தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியைநடத்தினர் அதற்கு தலைமை தாங்கியவர் பி.சுந்தரய்யா.தன இஸ்லாமிய காதலி லைலாவை மணந்தார்> ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம் குடும்ப உறவை புறக்கணிக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள் அப்படியே வாழ்ந்தார்கள்.
ஜவஹர்லால் பல்கலையில்படிக்கும்போதே அவர்கள் காதலர்கள் புரட்ச்சிகர வாழ்க்கையை இருவரும் தேர்ந்தெடுத்தார்கள் . தங்களுக்கு வாரிசு என்றுவந்தால் கவனம் சிதறிவிடுமென்றி நினைத்தார்கள் .அப்படியே வாழ்ந்தும் வருகிறார்கள் அந்த தமபதியினர் தான் பிரகாஷ்-பிருந்தா காரத் .
என்ன செய்ய.?
தாலிகட்டி மணந்து மூன்று மாதம் கூடி வாழ்ந்து விட்டு நடுத்தெருவில் மனைவியை விட்டவர்கள் நாட்டாமை செய்யும் காலமாகி விட்டதே !!!
Monday, August 13, 2018
"அஞ்சலி"
சொத்துரிமையும்
சோம்நாத் சட்டர்ஜியும் ...!!!
அவசரநிலைக்காலம் அது .சகலஉரிமைகளும் பறிக்கப்பட்ட நிலை. பேசசுரிமை எழுத்துரிமை, கருத்துரிமை என்று எல்லா உரிமைகளும் பறி க்கப்பட்டிருந்தன. இந்த கூத்தில் எல் ஐ சி ஊழியர்களின் போனஸும் பறிக்கப்பட்டது .
அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதனை ஏற்கமறுத்தது . போராட்டமுறை இதற்கு சரியாக இருக்குமா என்று ஆலோசித்தது .தோழர் கள் சுநில் மைத்ராவும், சரோஜ் சவுத்திரியும் பலரை கண்டு ஆலோனை நடத்தினர். அவர்களில் ஒரேஒருவர் மட்டும் இதற்கு சட்டரீதியாக நிவாரணம் பெற முடியும் என்று தெரிவித்தார்>அவர்தான் சட்டமேதை சோம்நாத் சட்டர்ஜி ஆவார் .
அவசர நிலைக்களத்தில் எழுத்துரிமை பேசசுரிமை,கருத்துரிமை ,ஏன் உயிர் வாழும் உரிமை யம் பறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முதலாளிகளுக்கு தேவையான சொத்துரிமை மட்டும் பறிக்கப்படவில்லை . போனஸ் என்பது கொடுப்படாத ஊதியம் .(unpaid wage ) ஊதியம் என்பது தொழிலாளியின் சொத்து. ஆகவே அதனபறி க்கமுடியாது என்று விளக்கமளித்தார் சோம்நாத் அவர்கள். வழக்கு போடப்பட்டது> இரண்டு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. போனஸ் என்பதும் சொத்துரிமைக்கு உட்பட்டது தான்.அதனால் அதனிப்பறித்தது செல்லாது உடனே கொடுக்கப்படவேண்டும் என்று உச்சநீ \திமன்றம் தீர்ப்பளித்தது .
ஆனாலும் நிர்வாகம் அதன் கொடுக்க மறுத்தது .
ஊழியர்சங்க தலைமை யோசித்தது. சோம்நாத் அவர்களின் யோசனையின் பேரில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி காலவரையறை யற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது. 14 நாட் கள் வேலை நிறுத்தம் நடந்தது .நிர்வாகம் 14 நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்தது.
சட்ட பூர்வமாக ஊழியர்கள்வேலை நிறுத்தம் செய்துள்ளனர். நிர்வாகம் சட்டவிரோதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை> இதனை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமல்ல .ஆகவே நிர்வாகம் பிடித்தம் செய்தது தவறு என்று ஊதியத்தினை 12% வட்டியோடு கொடுக்கவேண்டும் என்று சோம்நாத் வாதிட்டார் உச்ச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு வட்டியோடு உதியத்தை அளிக்கும்படியுத்திரவிட்டது.(அடியேனுக்கு 1400 ரூ ஊதியவெட்டு வட்டி யோடு 2800 ரூ கொடுத்தார்கள்)
சோம்நாத் சட்டர்ஜி ஒரு மார்க்சிஸ்ட். பத்துமுறை நாடாளுமன்றம் சென்றவர் மக்களவை சபாநாயகராக இருந்தவர் ,சட்ட நிபுணர் .
அவருக்கு அஞ்சலிகள் !!!
Friday, August 10, 2018
அரசு ஊழியர் ஊதியமும் ,
ஆட்ச்சியாளர்களின்
அறியாமையும்...!!!
பள்ளி ஆசிரியருக்கு மாதம் 82000 சம்பளமா? என்று பொருமி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.!
பட்டறிவும் கிடையாது ! படிப்பறிவும் கிடையாது ! என்ன செய்ய ?இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் வாழ்வதற்கான ஊதியம் (livingwage) கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.
இன்று livingwage கொடுக்கப்படவில்லை. சரி ! நியாயமான ஊதியமாவது (fairwage )கொடுக்கப்படுகிறதா ? இல்லை.அதுவும் சரி. குறைந்த பட்ச ஊதி யமாவது (minimumwage )கொடுக்கப்படுகிறதா ? இல்லை.
(போலி) தொழிற்சங்க தலைவர்களுக்கே இது என்ன என்று தெரியாது .
இந்தியா சுதந்திரம் அடைந்த பொது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது பற்றி விவாதம் நடந்தது .தொழிலாளர்கள் முதலாளிமார்,மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் இது பற்றி விவாதித்ததும்> 1957ம் ஆண்டு இந்த கமிஷன் முடிவு செய்தது. இதனை முத்தரப்பு மாநாட்டு முடிவு என்பார்கள்.
ஒரு தொழிலாளி நாள் முழுவதும் வேலை செய்கிறான் மறுநாள் அவன் வந்து வேலை செய்ய அவன் முதல நாள் உழத்த சக்தியை மீண்டும் பெற்றால் தான் முடியும். அந்த சக்தியை கலோரி என்பார்கள்> ஒருமனிதனுக்கு 2400கலோரி ஒவ்வொருநாளும் வேண்டும்.இந்த எரிசக்தியை கொடுக்க அவர் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்று கணக்கிட்டார்கள்> அதற்கான பணமதிப்பீட்டை சொன்னார்கள்> இது தவிர தொழிலாளிக்கு சமூக பொறுப்பு இருக்கிறது.அதன்படி அவன் அவன் மனைவி தாய் தந்தை ஆகியோரையும் கவனிக்க வேண்டும் இது தவிர அவன் குழந்தை !
இவர்களுக்கான உணவு உடை,தங்குமிடம் என்று சகலமும் கணக்கிடப்பட்டதுஇதன்படி அவனுக்கு ஊதியம் நிணயிக்கப்பட்டது. இதைத்தான் டாக்டர் அக்ராய்டு பார்முலா என்பார்கள்.இந்த livingwage ஐ எங்களால் கொடுக்க முடியாது என்று முதலாளிமார் சண்டித்தனம் செய்தார்கள்
முதலாளி மார்களால் கொடுக்க எவ்வளவு முடியும் என்ற பொது நியாயமான ஊதியம் (fairwage )என்ற கருத்து தோன்றியது. முதலாளிமார் இத்தனையும் கொடுக்க முடியாது என்கிறார்கள் .
அதன்பிறகுதான் minimumwage என்று வந்தது . இந்த மினிமம் wage கூட இன்றும் எந்த தோழிலாளிக்கும் கொடுக்கப்படவில்லை
முத்தரப்பட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அரசு மட்டுமாவது அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் ஏனென்றால் அரசு ஒரு modelemployar ஆக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
kighwage islanders என்று அழை க்கப்படும் வங்கி எல் ஐ சி ஊழியர்களுக்கும் கூ ட இன்றும் குறைந்த பட்டாசு ஊதியம் அளிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
கிராமத்து வாத்தியாருக்கு எம்பிட்டு சம்பளம் என்று படித்த நாமே வாய பிளக்கும் பொது எடப்பாடி சொல்வது ஆ ச்சாரியமில்லை.
நாம் நமக்கு கற்றுக்கொள்ளவே ஏராளம் இருக்கிறது> தோழர்களே !!!
Saturday, August 04, 2018
சுவாமி அக்நிவேஷுக்கும் ,
குன்றக்குடி அடிகளாருக்கும் ,
காவிதான் நிறம் !!!
கடவுள் வேண்டாம் , வேதங்கள் வேண்டாம் , சாதியையும் வேண்டாம் என்றான் சித்தார்த்தன் . புத்தனான அவன் "காவி"நிறம்.
இந்த உலகம் பொருட்களால் ஆனது . ஸ்கந்தங்களால் (molecule ) ஆனதுதான் உலகம் .என்றான் சமண மதத்தை உருவாக்கிய வர்த்தமானர் .அவரது நிறமும் "காவி" யே !
"எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொளகிறதோ , எந்தஒரு பொருள் தனக்கு வேண்டாததை தன்னிலிருந்து வெளியேற்றுகிறதோ (catabolism and metabOlism ) அது உயி ருள்ள பொருள் என்கிறது அறிவியல்.
"உயிர் என்பது உணவுதான் .அது அளவிற்குட்டபட்டது .உணவை வெறுக்காதே ! உணவுதான் உயிர் " என்கிறார்கள் சித்தர்கள்> அவர்களின் நிறம் "காவி"தான் .
1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி சப் த்தார் ஹஷ் மி மறை ந்த முதல் பிறந்த தினம் .இந்தியா பூராவும் வும் இருந்து நாடக சமூக செயல்பாட்டாளர்கள் ,கலைஞர்கள் டெல்லியில் கூடினர்>உள்துறை அமைச்சர் பூட்டா சிங் விட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் .தமிழகத்திலிருந்து அடியேன் சென்றிருந்தேன். மண்டி ஹவுசுலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கயிறு காளா ல் வளைத்து பூட்டாசிங் விட்டு வாசலில் போலீசார் நிறுத்தினர்>அந்திடத்திலேயே அமர்ந்து "ஹல்லா போல்நாடகம் போடப்பட்டது மாலா ஸ்ரீ அவர்களால் 1 பார்வையாளர்களாக எம்.எஸ் சத்யு,விவான் சுந்தரம், ஹபீபிதன் விர் , சாப்நா அஜ்மி , ஜாவேத் அக்தார் அவர்களோடு அடியேனும் அமர்ந்திருந்தேன். எனக்கு வலப்பக்கம் சுவாமி அக்நிவேஷ அமர்ந்திருந்தார் "காவி " உடையில்.
அறிவுலக மேதை மார்க்ஸ் . அவருடைய "தாஸ் கேபிடல் " மிகஉன்னதமான நூல். அதில் commodity ,money இரண்டையும் பற்றி அவர் நிறைய எழுதியுள்ளார் அந்த நூலின் கடினமான பகுதி அது. எழுத்தாளர் சங்கம் மூலதனம்பற்றி மக்கள்மத்தியிலேறிமுகவிழா ஒன்றை மதுரை ஸ்காட் ரோட்டில் நடத்தியது அவர் பேசினார் .
"பண் டத்தை மாற்றினோம். .பண் ட த்திற்கு பண்டம் .என்கிறோம். செயல் முறையில் எளிதாக்க பண்டம் பணம் பண்டம் என்று ஆக்கினோம். பின்னர் பணம் பண்டம் பணம் என்று வர்த்தகம் செய்தொம். இன்று பணம்(1)-பணம் - பணம் (2) என்று மாறிவிட்டொம். "
என்று அவர் கூறியபோது ஆயிரக்கணக்கில் குடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர்
அவர்தான் காவியாடைதரித்த மறைந்த குன்றக்குடி அடிகளார்.
நமது தேசியக்கொடியை நம் முன்னோர்கள் காவி உள்ளடக்கி மூவர்ணமாக்கினார் காவி அறிவியலையும், ஆன்மிகத்தையும் இணைப்பதால்.
இந்தியா spiritualy intelectual and intelectualy spiritual என்று நம் முன்னோர்கள் கருதினார்கள்.
8ம் நூற்ரான்டில் ஆதி சங்கரர் வரும் வரை இது தொடர்ந்து.பிராமணமதத்தை அவர் ஸ்தாபன மயமாக்கினார் . சடங்குகளும் சம்பிறதாயங்களுமாக மாறி அறிவியல் ஒதுக்கப்பட்டது.
இன்று அறிவியலா ஆன்மிகமா என்ற கேள்வி தேவை இல்லாமல் எழுப்பப்படுகிறது .
அறிவியல் இல்லாத ஆன்மிகம் தேவையில்லை . அறிவியலும் ஆன்மிகமு ம் இரண்டற கலந்ததுதான் இந்த மண்ணின் தத்துவ ஞானம்..
அதன் சின்னம் தான் காவி !!!
Wednesday, August 01, 2018
MINDSET
இப்படியானது
எதனால் ?
"பாரதிய ஜனதா கடசி தமிழகத்தில் தல எடுக்க முடியாது " என்று எனது நண்பர் சொன்னார் .பத்தாம் பசலித்தனமான கொள்கைகள், கொண்ட எந்த ஒரு இயக்கமும் தமிழகத்தில் நிலைக்காது . இந்த மண்ணின் ஆணிவேர் அதன் சமூக சீர்திருத்த கருத்துக்களில் அதனை மக்கள் மனதில் பதிவேற்றிய அந்த மாமனிதர்களின் செயல்பட்டால் விளைந்தது. அதில் முக்கியமானவராக திகழ்கிறார் பெரியார் அவர்கள்> என் நண்பர் ஒரு பெரியாரிஸ்ட். "இந்த மண் பெரியார் மண் இங்கு வேறு பாச்சா பலிக்காது " என்று முடித்தார் .
தமிழ் மக்களின் பாடுகளுக்கு விடிவு காலம் அவர்களின் மூடநம்பிக்கையை அதன் ஊற்றுக்கண்ணாக இருக்கிற மத நம்பிக்கையை களைவதில் இருக்கிறது என்று மனதார நமபியவர்களில் ஒருவர் பெரியார் . மதத்தின் மூல வேறாக பிராமணியம் இருக்கிறது. அதிகாரம் முழவதும் அதன் கையில் இருக்கிறது. அதிகாரத்திலிருந்து பிராமணர்களை அப்புறப்படுத்துவத்தின் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று கணித்தர. பிராமணர்களைத்தவிர மற்ற சாதியினரை ஒன்றுபடு த்தியதில் அவருடைய சாதனை மகத்தாகினது .
இந்த ஒற்றுமையை உருவாக்க அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல. இறுதியில் வெற்றியும் பெற்றார். அதிகாரத்திலிருந்து பிராமணர்களை விரட்டினார் . தமிழகம் மூச்சு வீட்டுக் கொண்டது.
இந்த வெற்றியை பலப்படுத்துவதில் பெரியாரிஸ்டுகள் பலவீனமாக இரு ந்துவிட்டனர்
"பாப்பானை விரட்டியாகி விட்டது .அந்த இடத்தில் வெள்ளாளன், முதலி தேவ ன் வர போட்டி போட்டான் . தனக்கு மேலே இருந்த வனை நீக்கினான்> அதேசமயம் தனக்கு கீழே இருக்கும் தலித்துகளை மறந்தான். . எல்லாருமாக சேர்ந்து பெற்ற வெற்றியை தன்னோடு போராடிய 30 சதம் மக்களை மறந்த பாவம் இன்று ஆட்டிப்படைக்கிறது.
இதனை "காலந்தோரும் பார்ப்பனியம் " என்று கூறி சமாளிப்பவர்கள் உண்டு .
கடந்த ஐமபத்து ஆண்டு காலமாக பெரியாரிஸ்டுகள் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டுவந்தனர்.
உயர்நிதிமன்ற நீதிபதிகளில் எத்தனைபேர் பார்ப்பனர் உச்ச நிதிமன்றத்தில் எத்தனை பேர். மாநிலங்களிலும், மத்தியிலும் உயர்பதவியில் இருப்பவர்களால் எத்தனை பேர் என்று வக்கணை பேசும் இவர்கள் எத்தனை தலித்துகளை உயர்பதவியில் இருத்தி அழகு பார்த்தார்கள் .பாவம் ! ஒரு கர்ணன் பட்ட பாட்டு போதுமே!
மாநில அரசு தன ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொடுக்கவில்லையே ஏன் ?
1972ம் ஆண்டுவரை எல்.ஐ.சி யில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது> அங்கு உள்ள இடது சாரி தொழிற்சங்கம் இடைவிடாது போராடி பதவிஉயர்விலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது>இன்று எல்.ஐ.சியில் எடுபிடியாக சேரும் தலித் ஒய்வு பெரும் பொது அதிகாரியாகி செல்வான். அங்குள்ள சங்கம் இதனை அமுல்படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக செயல்படுகிறது . மெரிட் ,திறமை என்று எந்த பாதிப்பும் இல்லை> இதேதான் வங்கியிலும். தபால் தந்தி, ரயிலேதுறை என்று சிறப்பாக செயல்படுகிறது .
மாநில அரசு ஊழியர்களிடையே மட்டும்பதவு உயர்வில் இட ஒதுக்கீடு ஏன் இல்லை?
ஒரு பறையன் R I இருக்க கூடாதா? ஒரு தாசித்தராக பள்ளன் இருக்கக்கூடாதா ? சக்கிலியன் இன்ஸ்பெக்ட்டாக இருக்கக்கூடாதா ? அப்படி இருந்தால் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தமுடியுமா ?
என்ன செய்ய !பறையன் விட்டு வாசலில் வேளாளன் நிற்கலாமா? பள்ளன் விட்டு வாசலில் தேவர் நிற்கலாமா? நம் mindset இப்படி ஆனது எதனால்.?
பெரியாரிஸத்தின் போதாமையா ? இல்லை போலி பெரியாரிஸமா ?
பண்பாட்டுத்தளத்தில் செயல்படும் இயக்கங்கள் தீவிரமாக முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.!!!
Sunday, July 29, 2018
நாம்
தீமானிப்போம்
சரவணா !!!
வயதாகிவிட்டதால் கால 4.30 மணிக்கு முழிப்பு தட்டிவிடும் . maorning obilations ஐ முடித்துகொகொண்டு மடி கணினியில் அமரரும் பொது 5மணி ஆகும். கணினியைத்திறந்தால் வெண்புறா சரவணனின் பதிவு இருக்கும். அடுத்து டாக்டர் .சரவணனின் பதிவு இருக்கும்.
முற்போக்காளர்க்காளையும் இடதுசாரிகளை விமரிசிப்பவர்களை ஒருபிடி பிடித்துவிடுவார்கள். ஒருநாளைக்கு குறைந்தது பத்துப்பதிவாவதுபோட்டு விடுவார்கள்.
முதல் தேர்தல் நடக்கும் பொது எனக்கு 13 வயது இருக்கலாம். நெல்லை டவுனில் முனிசிபல் தேர்தல். காப்டன் வெங்கடாசலம் என்பவர் எனக்கு சகோதரர் முறை டாக்டர் .பிரஜாசோஷலிஸ்ட் கடசியின் சார்பில் நின்றார். அவருக்காக வேலை செயதேன் வெற்றி பெறவில்லை.
அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவார்கள். எதிர்க்கேட்ச்சிகள் கம்யுனிஸ்டுகளைப்புகழ் வார்கள் .
கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை தேர்தல் என்பது ஒரு அரசியல் இயக்கம். தங்கள் தத்துவத்தையும்,அரசியலையும் மக்களிடையே கொண்டுசெல்ல கிடைத்த சந்தர்ப்பம்> அவர்களுக்கு தேர்தல் வெற்றி என்பது முக்கியமல்ல " என்று புகழ்வார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு அப்பாவி கம்யூனிஸ்டு தொண்டன் "எங்களுக்கு தேர்தல் என்பது அரசியல் இயக்கம். வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை " என்று ஆரம்பித்து விடுவான் . அவனை அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்.
"கம்யூனிஸ்டுகள் எளிமையானவர்கள் . அவர்கள் பிரசாரம் எளிமையாக இருக்கும் .இரவு போக்குவரத்து முடிந்தவுடன், தார் ரோட்டில் சுண்ணாம்பு கொண்டு சின்னத்தை வரைவார்கள்> என்பான்
அப்பாவி தொண்டன் இரவு கண்விழித்து தார் ரோட்டில் எழுதிவிட்டு காலையில் அதை தேடுவான்> லாரிடயரோடு அந்த சின்னம் பக்கத்து ஊருக்கு சென்றிருக்கும். எதிரிகளின் பதாகை விளக்கு கம் பங்களில் பறந்து கொண்டிருக்கும்.
மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் இந்த பாசசா பலிக்கவில்லை .ஆகவே இப்போது வன்முறையை கையிலெடுத்து விட்டார்கள்.
எனக்கு உள்ளூர ஒருபயம் இருக்கிறது . அக்கறையும் ஆவேசமும் கொண்ட சரவணர் கள் ஆக்க பூர்வமான திசையில் பிரசாரம் எய்வதை மடைமாற்றுகிறார்களோ என்ற பயம் தான் .
சரவணா நாம் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்போம் !
மதிகெட்ட "மாறன் "கள் தீர்மானிக்கவேண்டாமே !!!
Sunday, July 22, 2018
"காந்திமதி " அம்மனுக்கு
வளைகாப்பும் ,சீமந்தமும்
நடக்கும் பொது .....!!!
1936ம் ஆண்டு நெல்லை டவுனை அடுத்து இருக்கும் "பாட்டப்பத்து" கிராமத்தில் பிறந்தவன் நான் காட்சி மண்டபமும்,சந்திப்பிள்ளையார் மூக்கும், காந்திமதி அம்மான் சந்நிதி யும் எங்கள் விளையாட்டு மைதானம் ."கள்ளம்பிளே " விளையாடும் பொது அம்மன் கோவிலில் ஒளிந்து கொண்டால் ஸ்காட்லான்ட்டு போலீசாலும் பிடிக்க முடியாது
நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவில் பிரம்மோத்சவம் ஆனி மாதம் நடக்கும் . பத்தாம் நாள் தேரோட்டம். திருவில்லி புத்தூரில் 7/8 தேர் நெல்லையில் 6/8 தேர். பிரம்மாண்டமாய் இருக்கும்> பத்து நாளும் அம்மான் காலையும் இரவும் நான்குவிதியிலும் பவனி வருவாள் .
ஒருநாள் காலையில் அம்மன் குளிக்கப்போகும் அலங்காரத்தில் வருவாள். ஓராடையில் "குறுக்குமார் " கட்டிக்கொண்டு மீதமிருக்கும் சேலையை கக்கத்தில் வைத்துக்கொண்டு வரும் அழகை பரவசத்தையோடு பகதர்கள் பார்த்து மகிழ்வார்கள்.
ஆடிமாதம் அம்மன் கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் அமர்ந்திருப்பாள்> ஏழுமாத த கர்ப்பிணியாக> பகதர்கள் வரகரிசி முறுக்கு,அதிரசம் என்று அம்மனுக்கு "மசக்கை " பட்சணம்" படையிலிட்டு கொடுப்பார்கள் .
ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும்.தாமிரவருணி மழைநீரோடு செங்காவி நிறத்தில் செல்லும். அப்பொது ஏதாவது ஒருநாளை தேர்ந்த்டுத்து ஆற்றில் குளிக்க செல்ல மாட்டார்கள்.அன்று அம்மன் மாதாந்திர குளியலுக்காக ஆற்றினுக்கு செல்வார் .
சிறுவயதில் பார்த்த திருவிழாக்கள் இவை.1954 ல் நெல்லையைவிட்டு வந்து விட்டேன். இப்பதும் விழாக்கள் நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை .
தோழர் கிருஷி மூலம் விசாரித்தேன் அவர் நிர்வாகி யக்ஞராமனை தொடர்பு கொள்ள சொன்னார். அவர் உற்சவம் நடப்பதையும். வளைகாப்பு நடப்பதையும் உறுதி செய்தார்> மாதாந்திர குளியல்பற்றி விபரம் இல்லை> என்கிறார் .
மேலும் முதிய சிவாசாரியார் அவர்களையும் கோவில் பேஷ காரையும் தொடர்பு கொள்ள செய்தார்>பேஷகாரும் யக்ஞராமன் சொன்னதைமட்டுமே உறுதிப்படுத்தினார்> சிவாச்சாரியார் மகன் கணேசன் அவர்களை தொடர்பு கொண்டேன் அவரும் இவர்களை சொன்னதையே உறுதிப்படுத்தினார்.
நெல்லை மக்கள் தெய்வத்தையும் , கொண்டாடுகிறார்கள். அன்னை காந்திமதியை ஒரு பெண்ணாகவும் கொண்டாடுகிறார்கள்.
எத்தனை அற்புதமான AMALGAM !!!
Tuesday, July 17, 2018
புதுச்சேரி தான்
ஒரு முதல்வர் கலந்தது கொண்ட
முதல் மாநாடு !!!
தமுஎகசங்க மாநாட்டில் அமைசர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் . இடது சரி இலக்கிய அமைப்பு என்பதால் நடமாடும் பல்கலைக்கழகமான நெடுஞ்செழியனிலிருந்து தலை வெட்டி தம்பி கிருஷ்ணசாமிவரை வந்துள்ளனர் /செயலாளர்கள் எழுதி கொடுத்த பேச்சை பேசுவார்கள் . அதிகம் சோ வியத் எழுத்தாளர்கள்பற்றி இருக்கும்.
பலசந்தர்ப்பங்களில் தமாஷாக இருக்கும். ஆண்டன் செகோவ் அவர்களுக்கும்,அந்தோணி கிராம்ஸிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியவர்கள் உண்டு.கார்க்கி என்றாலே தெரியும். பாவம் ஒரு அமைச்சர் மாநாட்டில் "மாக்சிமம் கார்க்கி " என்று என்றே கடைசிவரை சொல்லி சிரிப்பாணி காட்டியதும் உண்டு .
பாண்டிசேரி முதலவர் வந்திருந்தார்.ரத,கஜ துர பதா திகளோடு மேடை ஏறி அங்கிருந்த பிரமுகர்களை விரட்டிவிட்டு தன சீடர்களை அமர்த்தவில்லை.
பார்வையாளர்களை இருந்த அரங்கம் சென்று அவர்களை வரவேற்பையே ஏற்றும் வாழ்த்துக்களை சொல்லியும் பின்னர் மேடை ஏறினார்.(வைரமுத்து இது பற்றி கருத்து சொல்லி இருக்க வேண்டாமோ )
இன்றைய நிலைமையில் ஒன்று பட்டு இருக்க வேண்டியது ப்றறிக்குறி ப்பிட்டார்.நிகழ்ச்ச்சிகளை முடிவடையும் வரை இருந்து (பாதியில் அம்பேல் என்று விட்டுவிட்டு ஓடிவிடா மல் ) கவுரவித்தார் .
முதல்வர் நாராயணசாமி அவர்கள் மாநாட்டிற்கு வந்ததற்கு முக்கிய காரணமுண்டு.
ஒருவர் மாநிலங்கள் அவை உறுப்பினர்தோழர் டி .கே ரங்கராஜன் அவர்கள்.
மற்றோருவர் அந்த சமுகப் போராளி தோழர் முருகன் !
இருவருக்கும் தமு எ க சங்கம் கடமைப்பட்டிருக்கிறது. !!!
Sunday, July 08, 2018
த .மு.எ.க.சங்கத்தின்
14வது மாநாட்டில் ...!!!m
1989ம் ஆன்டுஜனவரி மாதம் முதல் தேதி ! வேலை முடிந்து தீக்கதிரலுவலகத்திலிருந்து புறப்படுமுன்,யு.என் ஐ பிரிண்டரை பார்ப்பது வழக்கம் . "jana naattya manch theatre person attacked in Gaziabad " என்று வந்திருந்தது. இது மார்க்சிஸ்ட் கடசியின் நாடகக் குழு.
வீட்டிற்கு வந்து விட்டேன்.இரவு ஆங்கில செய்தியில் சசிகுமார் "the cpi (m )activist Safdar hashmi was attacked " என்று வாசித்தார்.
டெல்லியின் புறநகர் பகுதியான காஜியாபாத்தில் தொழிலாளர்களபோராட்டம்நடக்கிறது.அவர்களுக்கு ஆதரவாக சன நாட்டிய மான்சி என்ற விதி நாடக அமைப்பு "ஹால்ல போல் " என்ற நாடகத்த்தை நடத்தியுள்ளது .ரவுடிகள் நாடகாக்காரர்களை தாக்கியுள்ளனர்> இதில் சப் தார் ஹாஷ்மி படுகாயம் அடைய மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார் . சிகிசை அளித்தும் பலனில்லாமல் சபித்தார் ஹாஷ்மி 2ம் தேதி இறந்தார் மூன்றாம் தேதி அடக்கம் செய்த பிறகு சப்தரின் மனைவி மாலாஸ்ரீ எந்த இடத்தில் நாடகம் போட தடை செய்தார்களோ அதே இடத்தில் ஹல்லாபோல் நாடாகத்தை நடத்தி காட்டினார்.ஹல்லோ போல் என்றால் உறக்கப்போச்சு என்று அர்த்தம் .
ஜனவரி 17ம் தேதி சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகியது> அந்த விழாவின் வர்ணனையாளராக ஷப்னா ஹாஸ்மி இருந்தார்> வீழா ஆரம்பமாகும் பொது ஷப்னா "ஒரு நடிகனை அடித்தே கொன்று விட்டவர்கள் நடத்தும் இந்தவிழாவில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை என்று அறிவித்து அரங்கத்தையே கதிகலங்க வைத்தார்> சர்வதேச பத்திரிக்கையாளர்மற்றும் ஊடகங்கள் முன் அரசு அமபலப்பட்டு திணறியது>
சப் தார் ஏப்ரல் 12ம் தேதி பிறந்தவர்> 1989ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதியை அவர்நினைவாக டெல்லியில் கொண்டாடினார்கள்> இந்தியாமுழுவதிலிமிருந்த ஆர்வலர்கலகலந்து கொண்டனர்> மராட்டியத்திலிருந்து விஜய்,டெல்லியில் வைவான் சுந்தரம், எம்.எஸ்.சத்யு, ஹபீபிதந்விர் என்று கலந்து கொண்டனர்> தமிழ க்கத்திலிருந்து நான் கலந்து கொண்டேன்.
மண்டி ஹவுஸிலிருந்து பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது.உள்துறை அமைசர் பூட்டா சிங் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்தருந்தார்கள் .அவர் விட்டு வாசலில் கயிருக்கட்டி எங்களை சுற்றி வளைத்து விட்டார்கள் .அங்கேயே அமர்ந்து நாடகம் போட்டோம். ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் .பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்தார்கள் ஷபானா ஹஸ்மியும் ,ஜாவேத் அக்தரும்.
சபித்தார்,ஜஹ்பனா,ஜாவேத் ஆகியோர் காஷ்மீரி கேட்டில் வசிப்பவர்களை. கம்யூனிஸ்ட் குடும்பம்.
தமுஎகசங்கத்தின் 14வதுமாநாட்டை துவக்கி வைக்க ஜாவேத் வந்திருந்தார். முதல்நாள் கலைஇரவின் பொது அருகிலமர்ந்திருந்த நான் சப்தர் தார் நினைவு தினம் பற்றி சொன்னேன். ஜாவேத் உணர்சிவயப்பட்டார் .நீங்கள் முன்னாலேயே வந்திருக்கக்கூடாதா >வாருங்கள் நாம் அறையில் அமர்ந்துபேசலாம்> என்றார். எனது முதுமையையும் இயலாமையாயியும் எடுத்து சொன்னேன்.நாளை வருவீர்களா? என்றுகேட்டார்> கண்டிப்பாக என்றேன்.
மறுநாள் அவருடைய துவக்க உரையை கேட்டேன்.அற்புதம்
"முற்போக்காளர்களா எல்லாரும் கம்யூனிஸ்ட் அல்ல ! ஆனால் கம்யுனிஸ்டுகள் முற்போக்காளர்களாக இருக்கவேண்டும்" என்றார் அவர் கூறியபோது கையொலி எழுந்தது.
அவர் பேசி முடித்ததும் SATANDING OVATION அரங்கத்தில் நடந்தது.
14வது மாநாடு துவங்கியது கம்பிரமாக !!!
Saturday, July 07, 2018
த.மு.எ.க. சங்கத்தின்
14வது மாநாட்டில் ...!!!
நான்கைந்து ஆண்டுகளாகியிருக்கும். அப்போது நான் தென் சென்னை அமைப்பில் உறுப்பினராயிருந்தேன். பாரதி பதிப்பகத்து மேலாளர் சிராஜுத்தீன் அவர்களை எங்களமைப்பின் செயலாளராக இருந்தார் . ஒருஜெராக்ஸ் செய்யப்பட புத்தகத்தை கொடுத்தார் .ராகுல்ஜி எழுத "வா ல்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தின் இந்தி மூலம். முத்து மீ னாட்ச்சியால் மொழிபெயர்க்க முடியுமானால் நாம் கொண்டு வரலாம். என்றார்.
ஆறுமாதம்பாடுபட்டு மொழிபெயர்த்தோம் . செய்நேர்த்திமிக்க பாரதி பதிப்பகம், அதனை அழகுமிளிர வெளியிட்டுள்ளது.
1917ம் ஆண்டுக்கான சிறந்தமொழிபெயர்ப்பாளராக தமிழக அரசு முத்து மீனாட்ச்சிக்கு ஒருலட்சம் ரொக்கமும் விருதும் அளித்துள்ளது. பஞ்சாபி மொழியில் வெளிவந்த "நரபட்சிணி " என்ற நாவலை இந்தி முலம் தமிழில் கொண்டுவந்ததற்காக இருக்கலாம்.
அல்லது,இந்தி,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு சென்றதாகவும் இருக்கலாம்.
குறிப்பாக ராகுல்ஜியின் நூலை மிகச்சிறப்பாக "பாரதி" கொண்டுவந்துள்ளது பெருமைக்குரியது. குறிப்பாக பா.ஜீவசந்தரி,மற்றும்கமலாலயன் ஆகியோரின் பனி மகத்தானது. என்பது முத்துமினாடசியின் கருத்த்து. அவர்களை புதுசேரியில் சந்திக்க ஆவலாகஇருந்தோம்.
24ம்தேதி தான் சந்திக்கமுடிந்தது ஜீவசந்தரியை கட்டிப்பிடித்து தன வாழ்த்துக்களை முத்து மினாடசி தெரிவித்தார்.
அதோடு நாங்கள் "அப்ஸ் " என்று அழை க்கும் அப்பணசாமியையும் சந்தித்தோம். கோவில்பட்டியில் ஒரு ஜவுளிக்கடை முதலாளி யின் மகன்.அப்ஸ். சகலத்தையும் துறந்து பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் .
ஜீவசவுந்தரி-அப்பண்ணசாமி ஆகிய இருவரையும் சந்தித்தது எங்கள் கொடுப்பினைதான்.
வாழ்த்துக்கள் தோழர்களே !!!
Wednesday, July 04, 2018
த.மு.எ .க.சங்கத்தின்
14வது மாநாட்டில் ...!!!
1950ம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 15 ஆண்டுகள் அதாவது 1965ம் ஆண்டு வரை ஆங்கிலம் ஆடசி மொழியாக இருக்கும். பின்னர் இந்தி ஆடசிமொழியாக இருக்கும் என்று அன்றைய சட்டம் குறிப்பிட்டது.
1963 மா ஆண்டுகளி லேயே இது பற்றிய விவாதம் நடந்து வந்தது குறிப்பாக இந்து,இந்தியனெக்ச்பிரஸ், மெயில்போன்ற பத்திரிகைகள் கடுமையான நிலை எடுத்து எழுதின. மெயில் பத்திரிக்கை தன பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது.
அப்போது மதுரையில் இடதுசாரி மாணவர் இயக்கம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது. பாலிடெக்னீக்,பொறியியல், மருத்து கல்லூரிகளில் மாணவர் இயக்கம் செயல்பட்டு வந்தது . அவர் கள் 1965ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊர்வலம் நடத்தி இந்த மொழிப் பிரசசினை பற்றி தீர்மானம் நிறைவேற்ற விரும்பினார்கள்> இந்து பேசாதமக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பது அவர்களை கோரிக்கை.
மதுரை மருத்துவக்கலாலுற்றி மாணவர்கள் டாக்டர் சேதுராமன் தலைமையில் செயல்பட்டார்கள் அவருக்குதொழிற்சங்கங்கள .குறிப்பாக எல் ஐ சி ஊழியர் சங்கம் சிறப்பாக ஆதரித்தது .
நான்கு மாசிவீதியில் ஊர்வலம்.பின்னர் தியாகிகள் சத்துக்கத்தில் ,தீர்மானம் நிறைவேற்ற முடிவாகியது.
நேரு ஆலால விநாயகர் கோவிலிலிரு \ந்து வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. ராமாயணச்சாவடி அருகே வரும்போது வெள்ளையன் என்ற காங்கிரஸ் தொ(கு)ண்டர் மாணவர்களை தாக்கினார் அன்று பிடித்த சனியன் காங்கிரசை இன்றும் எழ முடியாதபடி செய்து விட்டது.
கலைக்கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஆதரவாக வந்தார்கள். நாராயணன் (இன்று தீக்கதிர் நாராயணன்),பா.செயப்பிரகாசம், சுருளிவேல் என்று பலர் வந்து போராட்டத்ததலைமை தாங்கி நடத்தினர் .மதுரை,கோவை திருச்சி சென்னை என்று பல்கிப்பறந்தது>ஆந்திரா,ஒரிசா, மே .வங்கம் என்று அகிலஇந்திய மொழி ப்போராட்டமாக மாறியது.
தமுஎகசங்கத்தின் 14வந்து மாநாட்டின் கலை நிகழ்ச்சியின் பொது தோழர் எஸ் எ பி அவர்களை அருகில் அமர்ந்திருந்தேன் .
"காஸ்யபன் ! இது செயப்பிரகாசம் " என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தினார்.
மொழிப்பவராட்டத்தின் போத முழுக்கால்ச்சட்டை,மேல் சைட்டை அணிந்து மாணவனாக பார்த்த செயப்பிரகாசம்,அவரதுக் "காடு" நூலை மதுரையில் தெருத்தெருவாக விற்ற நான் பார்த்தேன் .களமும் தூரமும் அவரை மாற்றி இருந்தது . பட்டறிவும், படிப்பறிவும் அவர் முகத்தில் கோடுகளாக மாறியிருந்தது. கட்டி அனைத்துக் கொண்டோம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த போர்விரனை பார்க்கிறேன்.
14வது மாநாடு என்ன ஏமாற்றவில்லை !!!
த.மு.எ .க.சங்கத்தின்
14வது மாநாட்டில் ...!!!
1950ம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 15 ஆண்டுகள் அதாவது 1965ம் ஆண்டு வரை ஆங்கிலம் ஆடசி மொழியாக இருக்கும். பின்னர் இந்தி ஆடசிமொழியாக இருக்கும் என்று அன்றைய சட்டம் குறிப்பிட்டது.
1963 மா ஆண்டுகளி லேயே இது பற்றிய விவாதம் நடந்து வந்தது குறிப்பாக இந்து,இந்தியனெக்ச்பிரஸ், மெயில்போன்ற பத்திரிகைகள் கடுமையான நிலை எடுத்து எழுதின. மெயில் பத்திரிக்கை தன பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது.
அப்போது மதுரையில் இடதுசாரி மாணவர் இயக்கம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது. பாலிடெக்னீக்,பொறியியல், மருத்து கல்லூரிகளில் மாணவர் இயக்கம் செயல்பட்டு வந்தது . அவர் கள் 1965ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊர்வலம் நடத்தி இந்த மொழிப் பிரசசினை பற்றி தீர்மானம் நிறைவேற்ற விரும்பினார்கள்> இந்து பேசாதமக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பது அவர்களை கோரிக்கை.
மதுரை மருத்துவக்கலாலுற்றி மாணவர்கள் டாக்டர் சேதுராமன் தலைமையில் செயல்பட்டார்கள் அவருக்குதொழிற்சங்கங்கள .குறிப்பாக எல் ஐ சி ஊழியர் சங்கம் சிறப்பாக ஆதரித்தது .
நான்கு மாசிவீதியில் ஊர்வலம்.பின்னர் தியாகிகள் சத்துக்கத்தில் ,தீர்மானம் நிறைவேற்ற முடிவாகியது.
நேரு ஆலால விநாயகர் கோவிலிலிரு \ந்து வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. ராமாயணச்சாவடி அருகே வரும்போது வெள்ளையன் என்ற காங்கிரஸ் தொ(கு)ண்டர் மாணவர்களை தாக்கினார் அன்று பிடித்த சனியன் காங்கிரசை இன்றும் எழ முடியாதபடி செய்து விட்டது.
கலைக்கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஆதரவாக வந்தார்கள். நாராயணன் (இன்று தீக்கதிர் நாராயணன்),பா.செயப்பிரகாசம், சுருளிவேல் என்று பலர் வந்து போராட்டத்ததலைமை தாங்கி நடத்தினர் .மதுரை,கோவை திருச்சி சென்னை என்று பல்கிப்பறந்தது>ஆந்திரா,ஒரிசா, மே .வங்கம் என்று அகிலஇந்திய மொழி ப்போராட்டமாக மாறியது.
தமுஎகசங்கத்தின் 14வந்து மாநாட்டின் கலை நிகழ்ச்சியின் பொது தோழர் எஸ் எ பி அவர்களை அருகில் அமர்ந்திருந்தேன் .
"காஸ்யபன் ! இது செயப்பிரகாசம் " என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தினார்.
மொழிப்பவராட்டத்தின் போத முழுக்கால்ச்சட்டை,மேல் சைட்டை அணிந்து மாணவனாக பார்த்த செயப்பிரகாசம்,அவரதுக் "காடு" நூலை மதுரையில் தெருத்தெருவாக விற்ற நான் பார்த்தேன் .களமும் தூரமும் அவரை மாற்றி இருந்தது . பட்டறிவும், படிப்பறிவும் அவர் முகத்தில் கோடுகளாக மாறியிருந்தது. கட்டி அனைத்துக் கொண்டோம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த போர்விரனை பார்க்கிறேன்.
14வது மாநாடு என்ன ஏமாற்றவில்லை !!!
Sunday, July 01, 2018
த .மு.எ .க சங்கத்தின்
14 வது மாநாட்டில் ...!!!
தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் பௌதிக ஆளுமையை சித்தரிக்கும் நடிகர்கள் உண்டு ! அதன் உணர்சசிகளை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க சேய்யும் நடிகர்களும் உண்டு.
அந்த பாத்திரத்தன் ஆத்மாவேதனையை சித்தரித்து வெற்றி கண்டவர் மறைந்த நடிகர் ரகுவரன் ஆவார்கள். பயணசிட்டு வாங்காமல் ரயிலில் வந்து தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கும்பலோடு சேர்ந்து வெளியேறுமவருடைய முதல் படமான " ஏழாவது மனிதனி"ல் பார்த்தபோது தமிழ் திரைக்கு ஒரு"வசமான கை " கிடைத்ததாக மகிழ் ந்தேன் .
"ஆஹா " என்றபடம் .இளம் வயதில் காதலித்த காதலி யோடு திருமணம் நடக்கவில்லை. வேறொரு திருமண ம் செய்து கொண்டு வாழும்போது நோய்வாயப்பட்டு ,காதலி இறக்கும் தருவாயில் வருகிறாள்.மனைவி-காதலி இருவரையும் கைவிட முடியாமல் தவிக்கும்மனிதனின் ஆத்ம வேதனையை ரகுவரன் அற்புதமாக சித்ததரித்திருப்பார்.
எழுத்தாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது> அப்போது ஏ வி எம் தயாரித்த படம்- பெயர் - நினவில் இல்லை - இளை ஞன் குடியால் கெட்டு திருந்தி மிண்டும்குடித்து அழிந்து போவான். ரகுவரன் இளைஞனாக நடிப்பார்> அற்புதமாக இருக்கும் .
மிகசிறந்த அந்தநடிகர் பற்றி பல செய்திகள் உண்டு> அவரைப் புரிந்து கொண்டு அவரோடு தன வாழ்க்கையை இணைக்க தனித்த எண்ணம் வேண்டும். தோழர் ரோகினி அவர்களுக்கு அதற்கான "மனவளம் " இருந்ததால் அவர் வாழ்க்கை இனித்தது.
ரகுவரன் -ரோகிணி தாம்பத்தியருக்கு ரிஷி என்று மகன் இருக்கிறான். வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் அவன் பெற நானும் முத்து மீனாட் சியும் வாழ்த்துகிறோம்.
தோழர் ரோஹிணி அவர்களை மாநாட்டில் சநதித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
வாழ்த்துக்கள் ரோகினி அவர்களே !!!
14 வது மாநாட்டில் ...!!!
தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் பௌதிக ஆளுமையை சித்தரிக்கும் நடிகர்கள் உண்டு ! அதன் உணர்சசிகளை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க சேய்யும் நடிகர்களும் உண்டு.
அந்த பாத்திரத்தன் ஆத்மாவேதனையை சித்தரித்து வெற்றி கண்டவர் மறைந்த நடிகர் ரகுவரன் ஆவார்கள். பயணசிட்டு வாங்காமல் ரயிலில் வந்து தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கும்பலோடு சேர்ந்து வெளியேறுமவருடைய முதல் படமான " ஏழாவது மனிதனி"ல் பார்த்தபோது தமிழ் திரைக்கு ஒரு"வசமான கை " கிடைத்ததாக மகிழ் ந்தேன் .
"ஆஹா " என்றபடம் .இளம் வயதில் காதலித்த காதலி யோடு திருமணம் நடக்கவில்லை. வேறொரு திருமண ம் செய்து கொண்டு வாழும்போது நோய்வாயப்பட்டு ,காதலி இறக்கும் தருவாயில் வருகிறாள்.மனைவி-காதலி இருவரையும் கைவிட முடியாமல் தவிக்கும்மனிதனின் ஆத்ம வேதனையை ரகுவரன் அற்புதமாக சித்ததரித்திருப்பார்.
எழுத்தாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது> அப்போது ஏ வி எம் தயாரித்த படம்- பெயர் - நினவில் இல்லை - இளை ஞன் குடியால் கெட்டு திருந்தி மிண்டும்குடித்து அழிந்து போவான். ரகுவரன் இளைஞனாக நடிப்பார்> அற்புதமாக இருக்கும் .
மிகசிறந்த அந்தநடிகர் பற்றி பல செய்திகள் உண்டு> அவரைப் புரிந்து கொண்டு அவரோடு தன வாழ்க்கையை இணைக்க தனித்த எண்ணம் வேண்டும். தோழர் ரோகினி அவர்களுக்கு அதற்கான "மனவளம் " இருந்ததால் அவர் வாழ்க்கை இனித்தது.
ரகுவரன் -ரோகிணி தாம்பத்தியருக்கு ரிஷி என்று மகன் இருக்கிறான். வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் அவன் பெற நானும் முத்து மீனாட் சியும் வாழ்த்துகிறோம்.
தோழர் ரோஹிணி அவர்களை மாநாட்டில் சநதித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
வாழ்த்துக்கள் ரோகினி அவர்களே !!!